வடக்கு ஜப்பானில் 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்

வடக்கு ஜப்பானின் கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனால் இவாட் மாகாணம் முழுவதும் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 5:03 மணிக்கு (உள்ளூர் நேரம்) 6.7 ரிச்டர் அளவில் ஏற்பட்டதாகவும், அதன் மையப்பகுதி பசிபிக் பெருங்கடலில் சான்ரிகு அருகே சுமார் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கடலில் அலைகள் ஒரு மீட்டர் (மூன்று அடி) வரை உயர […]
இலவச சுகாதார சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டம்
நாட்டின் இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வழிகாட்டலை வழங்கும் விசேட கலந்துரையாடல் சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு (2026-2035) செயல்படுத்தப்படவுள்ள தேசிய சுகாதாரக் கொள்கைக்கு ஏற்ப நாட்டின் இலவச சுகாதார சேவையை டியிட்டல் மயப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்காக பின்பற்ற வேண்டிய குறுகிய கால மற்றும் […]
ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்
தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைமை குழு கூட்டம் வவுனியாவில் இன்று(9) இடம்பெற்று வருகின்றது. ரெலோ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா இரண்டாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த கூட்டம் நடைபெற்று வருகின்றது. சமகால அரசியல் நிலவரங்கள்,மற்றும் முக்கிய விடயங்கள், கட்சி தலைமைப் பதவி தொடர்பாக இக் கலந்துரையாடலில் பேசப்பட இருப்பதாக அறிய முடிகின்றது. கலந்துரையாடலில் கட்சியின் முக்கியஸ்தர்களான ,ஹென்றி மகேந்திரன், செந்தில்நாதன் மயூரன், சுரேன் குருசாமி, பிரசன்னா இந்திரகுமார்,புரூஸ்,உள்ளிட்ட […]
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மதுபாவனையினை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை பிரதேசசபை,பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்,பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதியின் போதையற்ற நாட்டினை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் போதைப்பொருள் அற்ற பிரதேசத்தினை உருவாக்கும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன்கீழ் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாதாமடு பகுதியில் இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. வவுணதீவு பிரதேசசபையின் தவிசாளர் கோபாலபிள்ளை,பிரதி தவிசாளர் டிஸாந்த் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் […]
கொத்தலாவல பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவி உயிரிழப்பு
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பீடத்தில் தாதியர் மற்றும் குடும்ப சுகாதார பட்டப்படிப்பை பயின்று வரும் மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கண்டி,ஹன்டெஸ்ஸா பகுதியைச் சேர்ந்த மாணவி எச்.எம்.எல்.டி. ஜெயதிலகாஎன்ற மூன்றாம் ஆண்டு மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு திரும்பியதாகவும், 6 ஆம் திகதி அதிகாலை 2.00 மணி வரை […]
சாணக்கியன் தந்தை பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தந்தை அமரத்துவம் அடைந்த வைத்தியர் இராசமாணிக்கம் இராஜபுத்திரன் அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார். இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தையின் இறுதி அஞ்சலிக்காக ஜனாதிபதி உட்பட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு அஞ்சலிக்காக வருகை தந்திருந்தனர். இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார குழு உறுப்பினர்களால் கட்சி கொடி போர்க்கப்பட்டமையும் […]
பொது நூலகத்திற்கு முன்பாக மீன் வியாபாரி கொலை ; மூவர் கைது
அம்பலாங்கொடை பொது நூலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற மீன் வியாபாரியின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4 ஆம் திகதியன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அம்பலாங்கொடை ,போரம்பை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய வருஷ விதான என்ற மீன் வியாபாரியே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிவப்பு நிற காரில் வந்த, இனம் தெரியாத துப்பாக்கிதாரிகள் இந்தக் கொலையை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் இக் கொலைக்கு உதவிய […]
உயரம் பாய்தல் போட்டியில் சாதனை படைத்த வில்சியா கெளரவிப்பு
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றி சாதனை படைத்த மன்னார் பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவி வில்சன் வில்சியாவை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. டயகம ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்ட உயரம் பாய்தல் போட்டியில் தேசிய மட்டத்தில் புதிய சாதனையாக 1.56 மீற்றர் பாய்ந்து தனது புதிய சாதனையை நிலை நாட்டி வில்சியா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஏற்கெனவே 2023 ஆம் ஆண்டு உயரம் பாய்தலில் தேசிய மட்ட சாதனையாக […]
19 உறுப்பினர்களைக் கொண்ட புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமனம்
19 உறுப்பினர்களைக் கொண்ட புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் வேதருவே தர்ம கீர்த்தி ஸ்ரீ ரத்னபால உபாலி தேரர் மற்றும் பஹமுனே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமனம் | New Archaeological Advisory Committee Appointed இந்தக் குழுவானது 2025 மார்ச் 10 ஆம் திகதி […]
மாவீரர்களை நினைவு கூர்வதற்குத் தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது – ஜனாதிபதி

மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. இதை எவரும் மறுத்துரைக்க முடியாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாவீரர் துயிலும் இல்லங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “போர்க் காலத்தில் படையினரால் கைப்பற்றப்பட்ட காணிகளைத் தற்போதைய அரசு விடுவித்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, மாவீரர் துயிலும் இல்லங்களில் நிலைகொண்டுள்ள […]