வருவாயை விட அதிகமாக செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை அதிகரித்துள்ளது

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளன, இதனால் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை அதிகரித்துள்ளது, எனவே, அந்நிய செலாவணி ஓட்டங்களில் நிலைத்தன்மை இருப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று முன்னணி சோசலிசக் கட்சியின் (FLSP) கல்விச் செயலாளர் புபுது ஜெயகொட தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற பொது கருத்தரங்கில் 2026 பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் […]

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கப்பம் கோரிய மூவர் நாடு கடத்தப்பட்டனர்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் லோவர் மேயின்லேண்ட் பகுதியில் கப்பம் கோரல்களில் ஈடுபட்ட மூவர் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். சிறப்பு விசாரணை குழுவின் நடவடிக்கையின் அடிப்படையில் இந்த மூவரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மேலும் கப்பம் கோரல்கள் தொடர்பில் 78 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குடியேற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சட்ட ஆலோசகர் நினா கிரீகர் (Nina Krieger) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நமது சமூகங்களை மிரட்டி அச்சுறுத்துபவர்கள் கண்டிப்பாக கைது […]

டொரன்டோவில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை

கனடாவின் டொரன்டோ பகுதியில் பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வாகன போக்குவரத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் போக்குவரத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் சுமார் இரண்டு முதல் பத்து சென்றிமீற்றர் வரையான பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பனிப்பொழிவின்போது ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுப்பதற்கு டொரன்டோ நகராட்சி பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

கடுமையான காய்ச்சல் கனடாவில் பரவப்போவதாக எச்சரிக்கை

கனடாவில் இந்த ஆண்டில் காய்ச்சல் பரவுகை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்கள் இந்த ஆண்டு கடுமையான இன்ஃப்ளூயன்சா (Influenza) பருவத்துக்குத் தயாராக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்குக் காரணமாக, உலகளவில் பரவி வரும் மாற்றமடைந்த H3N2 வைரஸ் வகை, தற்போதைய தடுப்பூசியுடன் முழுமையாகப் பொருந்தாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் சுமார் 2% பேருக்கு இன்ஃப்ளூயன்சா தொற்று உறுதியானது என கனடா […]

அரசாங்கம் தனிப்பட்ட தேவைகளுக்காக செயல்படாது – பிரதமர்

அரசாங்கம் குறுகிய கால, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காக செயல்படாது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டம் நாட்டின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டு மசோதா குறித்து தனது கருத்துக்களை தெரிவிக்கும்போது நாடாளுமன்றத்தில் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து பேசிய பிரதமர், ஜனாதிபதியின் ஒதுக்கீட்டு மசோதா உரையை அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பிளவு கோட்டை ஒதுக்கி வைத்துவிட்டு கவனமாகக் கேட்டிருந்தால், அந்த உரையிலிருந்தும் […]

விருது பெற்ற முதல் இந்திய தொண்டு நிறுவனம்

ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் பிலிப்பைன்சின் ‘ரமோன் மகசேசே’ விருதை, ராஜஸ்தானைச் சேர்ந்த, ‘எஜுகேட் கேர்ள்ஸ்’ என்ற அரசுசாரா தொண்டு நிறுவனம் பெற்றுள்ளது. இந்திய தொண்டு நிறுவனம் ஒன்று இந்த விருதைப் பெறுவது இதுவே முதல்முறை. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், துணிச்சல், தன்னலமற்ற சமூக சேவையில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் ரமோன் மகசேசே விருது வழங்கி கவுர வித்து வருகிறது. நடப்பாண்டுக்கான இவ்விருது ராஜஸ்தானைச் சேர்ந்த, ‘எஜுகேட் கேர்ள்ஸ்’ என்ற தொண்டு […]

கொழும்பில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்

போதைப்பொருள் கடத்தல் மோசடியில் ஈடுபட்ட “ஹோரி சுத்தா” என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் இன்று (09) மதியம் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிவு புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரிடம் 10 கிராம் மற்றும் 650 மில்லிகிராம் ஐஸ் மற்றும் இந்த மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபருக்கு போதைப்பொருள் தொடர்பான வழக்குகளுக்காக […]

பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாய் நிதியை வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும், இன்று (09) திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதி அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்… […]

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக காட்டு பகுதியில் மறைத்து விற்பனை செய்யப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை (08) மாலை சோதனையினை மேற்கொண்டனர். சோதனையின் போது அங்கு இருந்த சந்தேக நபர் பொலிஸாரை கண்டு தப்பியோடியதாகவும், காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 லீற்றர் அளவிலான சட்டவிரோத கசிப்பினை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தப்பியோடிய […]

தோட்ட மக்களின் அடிப்படை ச் சம்பளம் அதிகரிக்கப்படுமா?

எந்த தோட்டத்தில் 20 நாட்களுக்கும் மேலதிகமாக வேலை வழங்குகிறார்கள். வருகைக்கான கொடுப்பனவாகவே 200 ரூபா வழங்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இது அடிப்படை சம்பள உயர்வு அல்ல, வருகை கொடுப்பனவு முழுமையாக கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியாது? பெருந்தோட்ட மக்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படுமா அல்லது அதிகரிக்கப்படாதா, இதுவே என் கேள்வி முடிந்தால் பதிலளியுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வரவு […]