20 வருடங்களின் பின் 3 குழந்தைகளை பிரசவித்த தாயார் உயிரிழப்பு; யாழில் சம்பவம்

யாழில் 20 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த குடும்பப்பெண், 3 குழந்தைகளை பிரசவித்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று(7) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யோகராசா மயூரதி (வயது 45) என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் 20 வருடங்களாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் பல்வேறு சிகிச்சைகளில் ஈடுபட்டார். இந்நிலையில் கடந்த ஐப்பசி மாதம் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மூன்று குழந்தைகளை பிரசவித்தார். […]

நெடுங்கேணி பிரதேசத்தில் இரண்டு வீதிகள் புனர்நிர்மாணம்

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள இரண்டு வீதிகளை காபட் வீதிகளாக புனர்நிர்மாணம் செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த புனர்நிர்மானப் பணி நேற்று (07.11.2025) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு தேசிய மக்கள் சக்தியின் நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் அகிலனின் வேண்டுகோளுக்கிணங்க நெடுங்கேணியில் இருந்து சேனைபிளவுக்கு செல்லும் ஒரு கிலோமீற்றர் பிரதான வீதி 35 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது. இதேவேளை, 35 மில்லியன் ரூபா செலவில் […]