தீர்வு கிடைக்கும் வரை தொடர் சத்தியாக்கிரகத்தை கைவிடப் போவதில்லை
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தை நேற்றும்(07) 52 ஆவது நாட்களாக முன்னெடுத்து வருகின்றனர். திருகோணமலை மாவட்ட செயலகம் முன் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கும் குறித்த விவசாயிகள் தங்களுக்கான சாதகமான தீர்வு எட்டும் வரை தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர். தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டதையடுத்து இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நீதி வேண்டி போராட்டங்கள் […]
புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு இன்றி பொருளாதார முன்னேற்றம் சாத்தியமில்லை!
நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் வருடாந்த சடங்கு மாத்திரமே என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு […]
போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்தவின் சர்வதேச சிவப்பு பிடியாணை
வெளிநாட்டில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்து என்ற சலிந்து மல்ஷிதா தாக்கல் செய்த ரிட் மனு மீண்டும் ஜனவரி 30 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவித்தல் விடுப்பதை தடுக்கு உத்தரவிடக்கோரி தற்போது வெளிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு சலிந்து என்ற சலிந்து மல்ஷித குணரத்ன சட்டத்தரணி ஊடாக ரிட் மனுiவ தாக்கல் செய்திருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த […]
செம்மணி விவகாரத்தில் ஈடுபட்ட சட்ட வைத்திய அதிகாரி நீக்கம்?
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இரு சட்ட வைத்திய அதிகாரிகள் கடமையில் இருந்த நிலையில் ஒருவர் நீக்கப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் அரசாங்கம் தங்கு தடை இன்றி நீநி ஒதுக்கீடுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் குறித்த புதைகுழி அகழ்வ பணியில் இரு சட்ட வைத்திய அதிகாரிகள் கடமையாற்றிய நிலையில் ஒருவரை அதிலிருந்து நீக்கி உள்ளனர். நாடாளுமன்ற […]
விசுவமடுவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய ஒரு உணவகம் திடீர் சோதனையின் போது கண்டறியப்பட்டதையடுத்து அதிகாரிகளால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதுடன், உரிமையாளருக்கு 50,000 ரூபா தண்டமும் நேற்று வெள்ளிக்கிழமை (07.11.2025) விதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட விசுவமடு பகுதியில் கடந்த 05.11.2025 அன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் மற்றும் வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன் ஜோய் ஆகியோர் இணைந்து குறித்த […]
குருக்கள் மடத்தில் பாரிய விபத்து
களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மாங்காட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு மட்டக்களப்பு கல்முனை வீதியில் மட்டக்களப்பு பகுதியிலிருந்து மாங்காடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியே விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 3 பேரும் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி […]
பெரும்பாலான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் […]
இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம்; யாழில் அமோக வரவேற்பு!
தெற்கில் இருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகளுக்கு யாழில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படுகின்ற இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோதே இந்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. யாழ். பழைய கச்சேரி பழைய பூங்கா வீதியில் இருந்து கலை, கலாசார முறைப்படி விருந்தினர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் மாவட்ட செயலக கேட்போர் கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.சிவகரன், தேசிய இளைஞர் சேவைகள் […]
தேர்தலுக்கு 10 பில்லியன்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும் அந்த தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தேர்தலை நடத்தும் திகதியை உறுதியாக கூற முடியாது. தற்போதுள்ள சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டியுள்ள தேவையுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பேராதனை பல்கலைக்கழக மகளிர் விடுதிக்கு அருகில் மனித கருவின் பாகங்கள்?
பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதிக்கு அருகில் மனித கரு என சந்தேகிக்கப்படும் பாகங்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விஜேவர்தன மண்டபத்தின் அதிகாரி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று மதியம் பேராதனை பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மருத்துவ பீடம், அறிவியல் பீடம் மற்றும் கால்நடை மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் உட்பட சுமார் 2,000 மாணவர்கள் […]