இந்தியா ரோந்து கப்பல் தெற்கு கடல் பகுதிக்கு மாற்றம்

வடகிழக்கு பருவமழை எதிரொலியாக இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் பாம்பன் தூக்கு பாலம் வழியாக தெற்கு கடல் பகுதிக்கு நேற்று(07.11.2025) காலை இடமாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வடக்கு பாக் ஜலசந்தி கடல் பகுதியில் புயல் உருவாகி வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் வடக்கு கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த இந்திய கடலோர காவல்படை […]

சேர். பொன். இராமநாதன் காண்பிய ஆற்றுகை கலைகள் பீட பன்னாட்டு ஆய்வு மாநாடு

யாழ். பல்கலைக்கழகத்தின் சேர்.பொன். இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் இரண்டாவது பன்னாட்டு ஆய்வு மாநாடு இந்த மாதம் 14, 15ஆம் திகதிகளில் யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது என்று பீடாதிபதி த.றொபேட் அருட்சேகரன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்தியத் தூணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி கலந்துகொள்வார். இந்த மாநாடு பொதுத் தலைவர் துணைவேந்தர் பேராசிரியர் சிறி.சற்குணராஜா, தலைவர் பீடாதிபதி த.றொபேட் அருட்சேகரன், ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீதாலட்சுமி பிரபாகரன், செயலாளர் முனைவர் […]

நிலுவையில் உள்ள நியமனங்களை வழங்க வேண்டாம் – தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்

இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் நான்கு பதவிகளுக்கான நிலுவையில் உள்ள நியமனங்களை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதம் எழுதியுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் மேலும், இந்த அலுவலுவகம் உத்தேசமாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர் இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் ஒரு பொறிமுறை எனப் பொதுவாகக் கூறப்படுகின்றது. பெரும்பாலும் நாட்டின் பாதுகாப்புப் […]

விபத்தில் கரவெட்டியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற விபத்தில், யாழ். வடமராட்சி, கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 26 வயதுடைய உதயகுமார் சாருஜன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். மேற்படி இளைஞரும், அவரது நண்பரும் கொழும்பில் இருந்து ஓட்டோவில் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை, யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், பெரியகுளம் பகுதியில் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த லொறியுடன் விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில் ஓட்டோவில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் […]

பம்பலப்பிட்டி இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தீவிரம்

கொழும்பு, பம்பலப்பிட்டி இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தீவிரம் அடைந்த நிலையில் கோபமடைந்த குழுவொன்று விடுதிக்கு தீ வைத்துள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை 1.00 மணியளவில், டூப்ளிகேஷன் வீதியில் உள்ள இரவு விடுதியிலேயே இடம்பெற்றுள்ளது. அங்கு வந்தவர்களுக்கு இடையில் வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளனர். பின்னர் சுமார் 15 பேர் கொண்ட குழு ஒன்று இரவு விடுதிக்கு தீ வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர். தீயை அணைக்க தீயணைப்பு […]

எடை குறைந்த பிள்ளைகளகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பு

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எடைக் குறைவு 17 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குடும்ப சுகாதாரப் பணியகத்தின் ஊட்டச்சத்து தரவுகள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 17.1 சதவீதமாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் 17 சதவீதமாக பதிவாகியுள்ளது. அதற்கு முன்னர் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் முறையே 12.2 சதவீதம் மற்றும் 15.3 சதவீதமாக இருந்தது. இருப்பினும், 2016 மற்றும் 2021 க்கு இடையில் படிப்படியான வீழ்ச்சி காணப்பட்டது. 2016 இல் 15.6 சதவீதமாக […]

துரைராஜா பதில் பிரதம நீதியரசராக பதவியேற்பு

உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா, நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராகப் பதவியேற்றுள்ளார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாட்டுக்குப் பயணமாவதன் காரணமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன நாடு திரும்பும் வரை நீதிபதி எஸ்.துரைராஜா பதில் பிரதம நீதியரசராகப் பணியாற்றுவார்.

சுகாதார குறைபாடுகளுடன் மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் சிற்றுண்டிச்சாலை!

மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் சிற்றுண்டி சாலையின் அவல நிலை குறித்து மன்னார் நகர சபையில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக மன்னார் நகர சபையின் சுகாதார குழு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மன்னார் பொது வைத்தியசாலை சூழல் மற்றும் பொது வைத்தியசாலையின் கீழ் குத்தகை அடிப்படையில் இயங்கும் சிற்றுண்டி சாலையில் தொடர்ச்சியாக பல்வேறு சுகாதார குறைபாடுகள் நிலவுவதாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மன்னார் நகரசபை சுகாதார குழு உறுப்பினர்கள் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர் தலைமையில் வைத்தியசாலைக்குச் […]

சாணக்கியன் எம்.பியின் தந்தையார் காலமானார்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையார் மருத்துவர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் நேற்று (07) பிற்பகல் காலமானார் அவரது பூதவுடல் இன்று (08) பிற்பகல் 2 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின்னர் நாளை (09) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனை; மஹரகம அக்கா கைது…

நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மஹரகம அக்கா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 50 வயதுடைய குறித்த பெண், ஈஸி கேஷ் முறை மூலம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் தங்கியிருந்த வீட்டில் 32 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் போதைப்பொருள் விற்பனை செய்து சம்பாதித்ததாக கருதப்படும் 141,000 ரூபா பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.