தேர்தலை நடத்தாமல் அதன் நிர்வாகத்தை ஆளுநர் ஊடாக முன்னெடுப்பது ஜனநாயக விரோதச் செயல்

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அதன் நிர்வாகத்தை ஆளுநர் ஊடாக முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “மாகாண சபைத் தேர்தல் ஒரு வருடத்துக்குள் நடத்தப்படும் எனத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டதால், அதனை நடத்தாமல் ஆளுநர்கள் ஊடாக நிர்வாகத்தை முன்னெடுப்பது சட்டவிரோதமாகும். மக்கள் சபையை நிர்வகிக்க வேண்டுமெனில் மக்கள் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அவசியம் […]

மூன்று விக்கெட் சாய்த்த பிரசித்!

இந்திய ‘ஏ’ அணி பவுலர்கள் சிறப்பாக செயல்பட, தென் ஆப்ரிக்க ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 221 ரன்னில் ஆல் அவுட்டானது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணி, இரண்டு போட்டிகள் (நான்கு நாள்) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா ‘ஏ’ வென்றது. இரண்டாவது போட்டி பெங்களூருவில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய ‘ஏ’ அணி 255 ரன் எடுத்தது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் […]

குழுநிலைப் போட்டிகளில் இலங்கை தோல்வி

ஹொங்கொங், மொங் கொக் மிஷன் ரோட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த வருடத்திற்கான ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியன் இலங்கை தனது இரண்டு குழுநிலைப் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இந்தத் தோல்விகளை அடுத்து குவலைக்கான சுற்றில் இலங்கை விளையாடவுள்ளது. டி குழுவில் இடம்பெற்ற இலங்கை ஆரம்ப நாளான இன்றைய தினம் தனது முதலாவது போட்டியில் வரவேற்பு நாடான ஹொங்கொங்கிடம் 4 விக்கெட்களால் தோல்வி அடைந்தது. இலங்கை 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களைப் […]

பிரபஞ்ச அழகிப் போட்டியில் மெக்சிகோ பெண்ணை மேற்பார்வையாளர் அவமதித்தார்?

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு, தலைநகர் பேங்கொக்கில் பல்வேறு நாட்டு அழகிகள் பங்கேற்ற ஒரு அழகிப் போட்டி நிகழ்வில் மெக்சிகோ அழகி பாத்திமா போஷ், போட்டியின் மேற்பார்வையாளரால் “முட்டாள்” என்று கூறி அவமதிக்கப்பட்ட சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகி போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக பலவேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அழகிகள் பேங்கொக்கில் குவிந்துள்ளனர். இதனிடையே […]

போர்க்கப்பல் சீன கடற்படையில் இணைப்பு

பலகட்ட சோதனைகளுக்கு பின், ‘புஜியன்’ என்ற நவீன விமானம் தாங்கி போர்க்கப்பலை, சீனா தன் கடற்படையில் முறைப்படி நேற்று இணைத்தது. சீனா, ‘லியோனிங், ஷான்டாங்’ என்ற இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை கொண்டுள்ளது. இந் நிலையில் மூன்றாவதாக, ‘புஜியன்’ என்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய விமானம் தாங்கி போர்க்கப்பலை, பலகட்ட சோதனைகளுக்கு பின், கடற்படையில் முறைப்படி நேற்று இணைத்தது. ஹைனான் மாகாணத்தின் சான்யா கடற்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில், சீன அதிபர் ஷீ ஜின்பிங் இந்த கப்பலின் […]

இந்திய வம்சாவளி தொழிலதிபர் அமெரிக்காவில் கவர்னர் தேர்தலில் போட்டி!

குடியரசு கட்சியை சேர்ந்தவரும், இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமி ஓஹியோ மாநிலத்தின் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் அடுத்த கவர்னரை தேர்ந்தெடுப்பதற்காக 2026ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய குடியரசுக் கட்சி கவர்னர் மைக் டிவைன் பதவிக்காலம் இரண்டாவது முறையாக முடிவடைய உள்ளது. அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிட தகுதியற்றவர். தேர்தலில் வெற்றி பெறுபவர் ஜனவரி 11ம் தேதி, […]

ஒரே வாரத்தில் 3 முறை நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் ஒரே வாரத்தில் 3 முறை ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 3ம் தேதி ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. இதனால், கட்டடங்கள் இடிந்து விழுந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் கடந்த 6ம் தேதி மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவானது. பாகிஸ்தான் – ஆப்கன் எல்லையில் மீண்டும் வெடித்தது மோதல்; 5 பேர் […]

நோபல் பரிசு பெற்ற டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்

டிஎன்ஏவை முதன்முதலில் கண்டறிந்தவர் சுவிஸ் விஞ்ஞானி பிரெட்ரிக் மீஷர் ஆவார். இவர் 1869ம் ஆண்டு ‘நியூக்ளின்’ என்று பெயரிட்டார். ஆனால், டிஎன்ஏவின் கட்டமைப்பை கண்டறிந்தவர்கள் அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஆங்கில இயற்பியலாளர் பிரான்சிஸ் கிரிக் ஆவர். இவர்கள் 1953ம் ஆண்டு இதைக் கண்டுபிடித்தனர். டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வாட்சன் 97 வயதில் காலமானார். பிரான்சிஸ் கிரிக் உடனான இவரது புரட்சிகரமான பணி நவீன மரபியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தை […]

ஜமைக்கா, கியூபா; மீண்டு வர உதவிக்கரம் நீட்டியது இந்தியா

மெலிசா சூறாவளிக்கு பிறகு இந்தியா அளித்த ஆதரவுக்கு ஜமைக்கா, கியூபா நாடுகள் நன்றி தெரிவித்துள்ளன. மெலிசா சூறாவளி காரணமாக ஜமைக்கா, கியூபா ஆகிய நாடுகள் முழுவதும், இடைவிடாத கனமழை, சூறாவளியால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரமே இல்லை. தகவல் தொடர்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி அதிகமான பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டது. கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அட்லாண்டிக் பெருங்கடலைத் தாக்கிய மிக வலிமையான புயல்களில் ஒன்றான மெலிசா சூறாவளியால், ஜமைக்கா, கியூபா நாடுகள் கடுமையான வெள்ளம், […]

மும்பை- லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு!

மும்பையில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. கடைசி நேரத்தில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனால் லண்டனுக்கு செல்ல இருந்த விமானம் ஆறு மணி நேரத்திற்கு மேலாக தாமதம் […]