களனி – வனவாசல பகுதி ரயிலில் மோதி ஒருவர் மரணம்

களனி – வனவாசல பகுதியில் உள்ள ரயில் கடவையில் நேற்று ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேலியகொடை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மாலம்பே – கடுவலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய திருமணமாகாத நபர் ஆவார். உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச இணைப்பு வசதி; இலங்கையில் கட்டப்படும் பிரான்ஸ் கேபிள் கப்பல்கள்

சர்வதேச இணைப்பு வசதிக்காக இரண்டு புதிய பிரான்ஸ் கேபிள் கப்பல்கள் இலங்கையில் கட்டப்பட உள்ளதாக கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது. உலகளாவிய கேபிள் கப்பல்களின் உரிமையாளரான ஓரேஞ்ச் மரைன் (Orange Marine) நிறுவனம், இந்தக் கப்பல்களைக் கட்டும் பணியை கொழும்பு கப்பல் கட்டும் தளத்திடம் (Colombo Dockyard PLC) ஒப்படைத்துள்ளது. நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்களை நிறுவுதல் மற்றும் பராமரிப்பதில் உலகளாவிய பிரான்ஸ் நிறுவனமான ஆரஞ்சு மரைனின் குழு இரண்டு கப்பல்களையும் நிறுவவுள்ளது. புதிதாக தயாரிக்கப்பட்ட கப்பல்கள் […]

இளம் தம்பதியினர் கைது

நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவியை திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். திவுலப்பிட்டிய, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யபடும் போது ஆணின் வசம் 11 கிராம் மற்றும் 980 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், பெண்ணின் வசம் 5,100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து மு்ன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், இவர்கள் இருவரும் நீண்ட காலமாக திவுலப்பிட்டிய, கட்டுவெல்லேகம, துனகஹ, அலுதேபொல, மரதகஹமுல்ல, […]

நான் சட்ட விரோத செயற்பாடுகளைச் செய்திருந்தால் உரிய விசாரணை நடத்தி பதவியை பறியுங்கள் – சிறீதரன் எம்பி

தான் சட்டவிரோதமாக சொத்து சேர்த்திருந்தால் அல்லது யாருக்காவது மதுபானசாலைகளுக்கு சிபாரிசு செய்திருந்தால் அல்லது தனது பெயரில் எடுத்திருந்தால் உரிய விசாரணை நடத்தி தன் மீது சட்டநடவடிக்கை எடுத்து தனது பதவியை பறிப்பதற்கு பூரணமாக சம்மதிக்கின்றேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்(8) நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த 2025 ஒக்டோபர் 23ஆம் திகதியன்று நாடாளுமன்ற சிறப்புரிமை மீறலில் நான் ஈடுபட்டதாக […]

தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மற்றும் பணிக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் பகுதி மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் மக்கள் இன்றையதினம் (08) ஈடுபட்டிருந்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 11இற்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன. கார்த்திகை 27 இல் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் சென்று தமிழர்களின் விடிவிற்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவிற்கொண்டு வருகின்றார்கள். இந்தநிலையில், மணலாறு மாவீரர் துயிலும் […]

சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு

ஆட்டிசம் மற்றும் பிற சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்குப் பராமரிப்பு வழங்கும் பகல்நேரப் பராமரிப்பு மையங்களை வலுப்படுத்த ரூபா 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அடுத்த ஆண்டுக்கான பாதீட்டை முன்வைத்து நாடாளுமன்றில் ஜனாதிபதி தற்போது உரையாற்றி வரும் நிலையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூபா 5,000 கல்வி உதவி வழங்க ரூபா 50 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும், இந்த குழந்தைகள் பொது கல்வியில் இணைக்கப்படுவதை ஊக்குவிக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

பாடசாலை விடுமுறை மற்றும் உற்சவ நாட்களில் பொது மக்கள் மிகவும் பாதுகாப்பு,அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் நேற்று (07.11.2025) நடைபெற்ற விசேட ஊடவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, உல்லாச பயணம் செல்வோர் விடுமுறை மற்றும் உற்சவ நாட்டிகளில் உல்லாச பயணங்கள் செல்லும் போது, வாகனத்தின் தன்மை,ஓட்டுனர்,வாகனத்தின் இந்திர கோளாறுகள் தொடர்பில் மிக அவதானம் செல்லத்தவும். சாரதிகளின் அவதானத்திற்கு வாகன ஒட்டுனரின் அதிக […]

போதைப்பொருள் விற்பனையில் ஈஸி கேஷ்

நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்த “மகாரகம அக்கா” என்ற பெயரில் அடையாளம் காணப்பட்ட 50 வயதுடைய பெண் ஒருவர் நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் விற்பனை வலையமைப்பை விசாரணை செய்யும் போது, அந்தப் பெண் நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் வாடிக்கையாளர்களுடன் ஈஸி கேஷ் வழியாக பண பரிமாற்றம் செய்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது. […]

‘இணைக்கும் குரல்கள்’ யாழில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் விசேட வேலைத்திட்டம்

இலங்கை முழுவதிலுமுள்ள பெண் தலைமைத்துவங்களுக்கிடையிலான தொடர்புகளை உருவாக்குவதன் முதற்படியாக ‘இணைக்கும் குரல்கள்’ பெண் தலைவர்களுக்கான பிராந்திய பரிமாற்ற நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. பாராளுமன்றம், உள்ளூராட்சி மன்றங்கள், கல்வி மற்றும் வணிகத் துறைகளிலிருந்தான தேசிய மற்றும் மாவட்ட ரீதியிலுள்ள பெண் தலைவர்களை ஒன்றாக இணைக்கும் நிகழ்வாக இது அமைந்தது . இங்கு அனுபவங்கள், தடைகள் மற்றும் பெண் தலைமைத்துவத்தைப் […]

விசேட கலந்துரையாடல்

தாதியர் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நீக்குவதற்கும் மற்றும் தொழில் சார் பிரச்சினைகளை ஆராய்வதற்கும் ஒரு சிறப்பு கலந்துரையாடல் அண்மையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், தாதியர் பாடசாலை அதிபர்களின் சங்க உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 17 தாதியர் பாடசாலைகளின் அதிபர்கள் இந்த விசேட கலந்துரையாடலில் பங்கேற்றனர். தாதியர் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை, செவிலியர் முதல்வர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகளை அணுகுதல், […]