சாதனை படைத்த காந்தாரா சாப்டர் 1

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து இந்த ஆண்டு வெளிவந்த காந்தாரா சாப்டர் 1. இப்படத்தை Hombale Films தயாரித்திருந்தது. ருக்மிணி வசந்த், குல்ஷன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் ருக்மிணி வசந்த் வில்லியாக நடித்து அனைவரையும் மிரள வைத்தார். முதல் நாளில் இருந்து காந்தாரா சாப்டர் 1 படம் உலகளவில் வசூல் வேட்டை நடத்தி ஒட்டுமொத்தமாக ரூ. 855+ கோடி வசூல் செய்தது. இதன்மூலம் 2025ஆம் ஆண்டு இந்திய சினிமாவிலேயே அதிக வசூல் […]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சகோதரனுக்கு மாரடைப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த கூலி திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. ஆனால், வசூலில் ரூ. 525+ கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ்வை நாம் அனைவரும் அறிவோம். ரஜினியின் திரைப்பட விழாக்களில் அவர் கலந்துகொள்வார். இந்த நிலையில், சத்யநாராயண ராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை […]

விஜய்யின் ஜனநாயகன் பட முதற் பாடல் வெளியானது!

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன். எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் அரசியல் களத்தில் இறங்கியுள்ள நிலையில் இப்படி அரசியல் சார்ந்து ஒரு படம் வெளியாவது பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி மாதம் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தளபதி கச்சேரி சிங்கிள் வெளியாகியுள்ளது.

ஒரு படம் ‘ஹிட்’ அடித்ததும் நாம் பெரிய ஆள் என்று நினைத்து விடக் கூடாது – நந்திதா ஸ்வேதா

‘அட்டக்கத்தி’ படத்தில் அறிமுகமாகி ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘அசுரவதம்’, ‘கபடதாரி’, ‘ரத்தம்’, ‘ரணம்’ போன்ற பல படங்களில் நடித்தவர் நந்திதா ஸ்வேதா. தமிழ் தாண்டி தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வரும் நந்திதா ஸ்வேதா, தற்போது தமிழ் – தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். புதிய வெப் தொடர்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். நந்திதா ஸ்வேதா தனது திரைப்பயணம் குறித்து பகிர்ந்தார். அதன் விவரம் இதோ… “நான் ஒரு சினிமா வெறி பிடித்தவள். சிறுவயதில் இருந்தே […]

உள்ளூர் துணிக்கு பெறுமதி சேர் வரி

உள்ளூர் துணி உற்பத்திகள் பெறுமதிசேர் வரிக்கு உட்படுவதுடன், இறக்குமதி செய்யப்படுகின்ற துணிகள் பெறுமதிசேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள போதிலும், கிலோ கிராமிற்கு 100 ரூபா செஸ் வரி அறவிடப்படுகின்றது. சமமான போட்டிமிகு நிலையை உறுதிப்படுத்துவதற்கு இறக்குமதி செய்யப்படும் துணி மீதான செஸ் வரியை நீக்குவதற்கும் அதற்குப் பதிலாக பெறுமதி சேர் வரியை விதிப்பதற்கும் முன்மொழியப்படுகின்றது. இது 2026 ஏப்ரல் மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் முன்மொழியப்படுன்றது.

சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு ‘வரவுசெலவுத் திட்டம்’ முன்வைக்கப்படவில்லை – சஜித்

நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத் திட்டமாக அமையவில்லை. நாட்டு மக்கள் இன்று பல துயர்கரமான சூழ்நில்மைகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். வறுமை அதிகரித்து காணப்படுகின்றன. வேலையின்மையும் அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% மேலாக பங்களிக்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகள் வீழ்ச்சி கண்டு, அவர்களினது வாழ்க்கை சீர்குலைந்து போயுள்ளன. இவர்களைப் பாதுகாக்க இந்த அரசாங்கத்தால் முடியாதுபோயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் […]

இலங்கையின் சுற்றுச்சூழல் சவால்களை ஆராயும் “ FOOTPRINT ” ஆவணப்படம்

இலங்கையின் முக்கியமான சுற்றுச்சூழல் சவால்களை ஆழமாக ஆராயும் “ FOOTPRINT ” எனும் ஆவணப்படம், நாட்டின் நிலைமையை நான்கு முக்கிய அத்தியாயங்களை ஆராயும் ஒரு துடிப்பான படமான உருவாக்கப்படுள்ளது. இந்த ஆவணப்படம் கொழும்பில் நகரமயமாக்கல், நீர் பாதுகாப்பு, விலங்கு விவசாயம் மற்றும் மனித – யானை மோதல் ஆகிய பிரச்சினைகளில் மூழ்கி, மனித செயல்பாடுகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான சிக்கலான உறவை ஆராயும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம், மனிதச் செயற்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் நெருங்கிய தொடர்பை […]

தொடர் மழை இராஜாங்கனை நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, வினாடிக்கு 4,340 கனஅடி நீர் கொள்ளளவு கலாஓயாவில் வெளியேற்றப்படும் என இராஜாங்கனை நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார். இதனால், கலா ஓயாவைச் சுற்றியுள்ள, பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொழிற்கல்வி சேவை துரித இலக்கம்

மாணவர்கள் இடைநிலைக் கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்கு மாறுவது குறித்து துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்குவதற்காக, ‘1966’ தொழிற்கல்வி சேவை துரித இலக்கம் (Vocational Education Hotline) இன்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரியவின் தலைமையில், நாரஹேன்பிட்டியில் உள்ள திறன்விருத்தி மையத்தில் (Nipunatha Piyasa) இந்தச் சேவை தொடங்கப்பட்டது. இந்த ‘1966’ அவசர இலக்கத்தின் மூலம், மாணவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தொழிற்கல்வி […]

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மத்திய, வடமேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் அம்பாறை, அம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று சனிக்கிழமை (08) இரவு 11.00 மணி முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.