உலக சுற்றுலா அமைப்பின் 26ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்க அமைச்சர் விஜித ஹேரத் சவூதி அரேபியா பயணம்

ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் 26ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று சனிக்கிழமை (08) சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். 11ஆம் திகதி வரை சவுதியில் தங்கியிருக்கும் அமைச்சர் விஜித ஹேரத், ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் உயர்மட்ட அமர்வுகளில் பங்கேற்பார் என்பதுடன், பல உறுப்பு நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தவுள்ளார். 1975இல் நிறுவப்பட்ட ஐ.நா. […]

மாணவர்களுக்கு புதிய திட்டம்

இடைநிலைக் கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்கு மாறுவது குறித்த துல்லியமான மற்றும் திறமையான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதற்காக ‘1966’ என்ற விசேட ஹொட்லைன் எண் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொலைபேசி எண், நாரஹேன்பிட்டயில் உள்ள நிபுணத பியச வளாகத்தில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, ‘1966’ என்ற எண் மூலம், மாணவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தொழிற்கல்வி தகவல்களைப் பெறலாம். மேம்பட்ட சேவை வழங்கலுக்காக, […]

போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” சுற்றிவளைப்பில் பலர் கைது

நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று வெள்ளிக்கிழமை (07) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கமைய, 416 கிராம் ஹெரோயின், 583 கிராம் ஐஸ், 900 மில்லிகிராம் கொக்கெய்ன், 926 கிராம் கஞ்சா, 25,683 கஞ்சா […]

காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் கைப்பற்றல்!

பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பஸ் ஒன்றும், கார் ஒன்றும் கெப் வாகனம் ஒன்றும் மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமாக மித்தெனியவில் உள்ள வீடொன்றி்ல வைத்து இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் செப்டெம்பர் 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் […]

யாழ்ப்பாணத்திலிருந்து இராமேஸ்வரத்திற்கு சென்றவருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக, தமிழகத்தின் இராமேஸ்வரத்திற்கு சென்ற இலங்கை பிரஜை ஒருவர் கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் புழல் சிறையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரம் பகுதியில் சட்டவிரோதமாக பதுங்கியிருப்பதாக, கியூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று சனிக்கிழமை (08) அதிகாலை இராமேஸ்வரம் பஸ் நிலையத்திற்கு அருகே முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக […]

‘டி-20’ போட்டி; கோப்பை வென்றது இந்தியா!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 5வது ‘டி-20’ போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்திய அணி தொடரை 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது, கடைசி ‘டி-20’ போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஜோடி நல்ல […]

ரி20 அணிக்கு உப தலைவராக தசுன் ஷானக்க

பாகிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் ஆகியவற்றுக்கான இரண்டு இலங்கை கிரிக்கெட் குழாம்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டது. அணித் தலைவர் சரித் அசலன்க உட்பட 11 வீரர்கள் இந்த இரண்டு குழாம்களிலும் பெயரிடப்பட்டுள்ளனர். அதேவேளை, இலங்கையின் ரி20 கிரிக்கெட் அணிக்கு முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க உப தலைவராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் பானுக்க ராஜபக்ஷவுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. […]

அனைத்தையும் எதிர்க்கும் மனநிலையில் நாங்கள் இல்லை – ஹர்ஷ டி சில்வா

பொருளாதார மீட்சிக்கான பெருமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சொந்தமானது. நாட்டு மக்களின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். அனைத்தையும் எதிர்க்கும் மனநிலையில் நாங்கள் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2026 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பொருளாதார நெருக்கடியில் […]

உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கனடியர்கள் பாதிப்பு

கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கனடியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடியர்களில் ஐந்தில் ஒருவர் (20%) கடந்த ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் ஒரு கட்டணத்தை செலுத்தாமல் தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நானோஸ் ரிசர்ச் நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில், 55 வயதுக்கு குறைவானவர்கள், உணவுக்காக கார் கடன், கிரெடிட் கார்டு அல்லது மின்சார கட்டணங்களை நிலுவையில் வைக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மாதாந்த செலவுகள் […]

கனடாவிடம் மன்னிப்பு கோரிய பிரிடிஷ் இளவரசர் ஹாரி

அமெரிக்க அணிக்கு ஆதரவாக தொப்பியணிந்த விவகாரத்தில் இளவரசர் ஹாரி கனடாவிடம் மன்னிப்பு கோரி உள்ளார். இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஹாலிவுட் நடிகை மேகனை திருமணம் செய்தபிறகு அரச குடும்பத்தை விட்டு வெளியேறினார். அதன்பின், தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இதற்கிடையே, கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பேஸ்பால் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரின் 4-வது போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்ஸ் அணியும், கனடாவின் டொராண்டோ ப்ளூ ஜேஸ் அணியும் மோதின. இதனை […]