மாங்குளத்தில் வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகம் அமைக்கப்படவேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தினை வடமாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறி வேறு இடங்களில் குறித்த அலுவலகத்தை அமைக்க நடவடிக்கை எடுத்தால் வீதியில் இறங்கி போராடவேண்டிய நிலை ஏற்படுமெனவும் எச்சரித்துள்ளார். மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வடக்குமாகாண சுதேச மருத்துவத்திணைக்களத்திற்கான அலுவலகம் அமைப்பதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பியநிலையில், வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் தி.சர்வானந்தன் யாழ்ப்பாணத்திலும், […]

தாழங்குடா காணியில் மர்மமான குழி – விசாரணை ஆரம்பம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பகுதியில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சிக்கப்பட்ட காணிக்கு அருகே உள்ள தனியார் காணியில் மர்மமான முறையில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளதையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் நேற்று வியாழக்கிழமை (6) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த பகுதியான தாளங்குடா கடற்கரை பகுதியில் கடந்த 2019 ஏப்ரல் 17ஆம் திகதி உயிர்த்த […]

இலங்கைக்கு துபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தல்; ஒருவர் கைது

துபாயில் ஒளிந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள சங்கீதா என்ற பெண் போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளர் ஒருவர் நீர்கொழும்பில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் ஹெராயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

2210 வீதி விபத்துகளில் 2,343 பேர் பலி – – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான 2210 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் அவ்வாறான விபத்துகளில் சிக்கி 2343 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வுட்ளர் தெரிவித்துள்ளார். நேற்று 6ஆம் திகதி வியாழக்கிழமை பொலிஸ் ஊடகப் பிரிவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்துக் கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பண்டிகை காலங்களின் போது வெளியிடங்களுக்கு சுற்றுலாவுக்களுக்காக செல்வோர் அவதானத்துடன் […]