‘கேஜிஎஃப்’ பட நடிகர் திடீர் மரணம்
‘கேஜிஎஃப்’ படத்தில் நடித்த கன்னட நடிகர் ஹரிஷ் ராய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 52 ஆவது வயதில் நேற்று காலமானார். இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கன்னடத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தில் ‘சாச்சா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் ஹரிஷ் ராய். இந்த நிலையில், 4-வது ஸ்டேஜ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த ஹரிஷ் ராய் சிகிச்சை பலனின்றி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
தமிழ் இளைஞர்களிடம் வலிந்து ஆயுதங்களை திணித்தது அரசாங்கங்களே… – சிவமோகனின் விளக்கம்
முஸ்லிம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (06.11.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “தமிழர்களின் ஒரு நீண்டகால அரசியல் ஆயுத போராட்டம் முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டத்தை அடைந்தது. தமிழ் இளைஞர்களிடம் வலிந்து ஆயுதங்களை திணித்தது அரசாங்கங்களே. மக்கள் மீதான பாரிய இனப்படுகொலைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு பின்னாலே ஈழ விடுதலை போராட்டம் முளைகொண்டு எழுந்தது. தற்போது பலரும் […]
அம்பாறை பண்பாட்டு பணிமனையின் முழுநிலாக்கால நிகழ்வும் திருவள்ளுவர் விழாவும்
அம்பாறையில் பண்பாட்டு பணிமனையின் முழுநிலாக்கால நிகழ்வும் திருவள்ளுவர் விழாவும் நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வானது இந்த ஆண்டு தொடக்கத்தில் சுவிட்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பள்ளியின் முதல்வர் பூநகரியான் பொன்னம்பலம் முருகவேள் அவர்களின் நிதிப்பங்களிப்பில் தந்தையார் அமரர் வைத்தியக்கலாநிதி கந்தர்.பொன்னம்பலம் அவர்களின் நூற்றாண்டு நினைவாக பண்பாட்டுப் பணிமனை வழாகத்தின் முகப்பில் 6 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையொன்று நிறுவப்பட்டிருந்தது. அம்பாறையில் நிகழும் பண்பாட்டு விழாவான திருவள்ளுவர் விழாவில் பங்குபற்றும் கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் […]
இஸ்ரேலில் இலங்கையர்கள் மீது தாக்குதல்
இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கைப் பணியாளர்கள் மீது இரசாயனம் கலந்த நீரைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கைப் பணியாளர்கள் மூவர் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானதாக இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களில் பரவி வந்த காணொளிகளும் தகவல்களும் குறித்து தூதரகம் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனிமையான இடங்களில் சிறிய குழுக்களால், வெளிநாட்டு பணியாளர்கள் மீது இரசாயனம் கலந்த நீர் தெளிக்கப்பட்டு தாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியாக செல்லும் வெளிநாட்டுப் பணியாளர்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலுக்கான […]
சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்தவர்கள் பொலிஸாரால் விரட்டியடிப்பு – யாழில் சம்பவம்
நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (6) விரட்டியடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழுவில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உடலில் பாதிப்புகள் உள்ளதாகவும், அவற்றுக்கு சிகிச்சை செய்வதற்கு பாரியளவு நிதி தேவை என்றும் பொய்கூறி வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில் குறித்த கும்பல் நேற்று வியாழக்கிழமை (6)யாழ்ப்பாணத்திற்கு வந்தது. இது குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த குழுவில் […]
போதைப்பொருளை ஒழிக்க அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்
நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி ஆசிரியர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட ஒரு பாடசாலையின் அதிபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தவர்கள் அவர்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என நாமல் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த காலங்களில் ஒவ்வொரு போதைப்பொருள் […]
இஷாரா செவ்வந்தியின் பின்னணி; மீண்டும் சிக்கிய ஆபத்தான பொருள்
இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்செல்ல உதவிகளை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மேலும் பன்னிரண்டு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு இந்தியாவுக்கு படகு மூலம் தப்பிச்செல்ல உதவிகளை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் விசாரணையின் போது மேலும் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார் இதற்கமைய, மன்னார் – வெள்ளம் குளத்தில் உள்ள ஒரு பண்ணையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பன்னிரண்டு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. கணேமுல்ல […]
அஸ்வெசும சலுகைகளை ஏற்றுக்கொள்பவர்கள் வெட்கப்பட வேண்டும்
அஸ்வெசும சலுகைகளை ஏற்றுக்கொள்பவர்கள் வெட்கப்பட வேண்டும் என்றும், அதை “சட்டப்பூர்வமான பிச்சை” என்று தான் கூற வேண்டும் என்றும் கைத்தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், வறுமை ஒழிப்பு நீண்டகால நலத்திட்டங்களைச் சார்ந்து இருக்கக்கூடாது, மாறாக நிலையான தீர்வுகளைக் கண்டறிவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்று வலியுறுத்தினார். ” அஸ்வெசும பயனாளிகள் வெட்கப்பட வேண்டும். இது சட்டப்பூர்வமாக பிச்சை எடுப்பது போன்றது. நாம் ஒரு தேசமாக வளர […]
வர்த்தமானி அறிவித்தல்
வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை எதிர்வரும் 28 ஆம் திகதி தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெலிகம பிரதேச சபையின் தலைவராக இருந்த லசந்த விக்ரமசேகர, கடந்த அக்டோபர் 22 ஆம் திகதி பிரதேச சபை தலைவர் அலுவலகத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், வெலிகம தலைவரின் கொலைக்கான காரணம் இதுவரை விசாரணைகளால் தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை. மேலும், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கணவனைக் மனைவி கத்தியால் குத்திய மனைவி
மனைவி தனது கணவரை கத்தியால் குத்தி காயமடைந்த நிலையில் கணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (6) மஹியங்கனைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. மஹியங்கனை, சொரபொரவெவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இது நடந்துள்ளது. கணவனை, மனைவி கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த கணவன் ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி எனத் தெரியவருகிறது. காயமடைந்தவர் மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். கத்தியால் குத்தப்பட்ட நபர், கிராதுருகோட்ட பிரிவு துணை சிவில் […]