கனடாவில் இலங்கைக் குடும்பத்தை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன்!
கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் திகதி கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்த 20 வயது இளைஞன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த தாய், 04 பிள்ளைகள் மற்றும் அவர்களின் நண்பர் உள்ளிட்ட 06 பேர் குறித்த இளைஞனால் குத்தி கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஒட்டாவா நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தம்மீது சுமத்தப்பட்ட 06 […]
மரண அறிவித்தல்
யாழ். வேலணை வடக்கு கண்ணா ஓடை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 31/11 கிரண்ட் பாஸ், பெர்ணாந்து இடம், கொழும்பு – 14 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை புனிதவதி அவர்கள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலம்சென்ற அமிர்தலிங்கம் நித்தியலெட்சுமி தம்பதிகளின் புதல்வியும்,காலம்சென்ற நாகநாதபிள்ளை இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,பிரதீபன்(லண்டன்), பிரதீபா(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,கிஷாந்தன்(கனடா), அஞ்சனா(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,தர்மாவதி(கனடா), காலம்சென்ற சிவகலை(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,அவினாஷ்(கனடா), ஆதித்(கனடா), றியான்(கனடா), டிஷான்(கனடா) ஆகியோரின் பாட்டியும்,இராசம்மா, […]
வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி வெற்றிக் கிண்ணம்: கட்டைக்காடு சென்மேரிஸ் வசம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டு கழகம் நடத்தும்மாபெரும் உதைபந்தாட்ட போட்டியில் 23 வயது பிரிவினருக்கான இறுதி போட்டி நேற்று முன்தினம் புதன்கிழமை (05) இடம்பெற்றது பாரதி விளையாட்டு கழக மைதானத்தில் பிற்பகல் 3:30 மணியளவில் குறித்த போட்டி ஆரம்பமானது. இதில் கட்டைக்காடு சென்மேரிஸ் அணியை எதிர்த்து உடுத்துறை பாரதி அணி மோதியது. பரபரப்பாக இடம் பெற்ற ஆட்டத்தின் இறுதியில் கட்டைக்காடு சென் மேரிஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கடைக்காடு […]
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறை!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த மாதம் 30 இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் குறித்த மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். குறித்த மீனவர்களின் விசாரணை வியாழக்கிழமை (06) மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.இதன் போது குறித்த மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதன் போது முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுக்களுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா […]
போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு அரசாங்கம் உதவப் போவதில்லை!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உதவப் போவதில்லை என பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். நாட்டில் தற்பொழுது போதைப்பொருள் மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், இதற்கு முக்கியக் காரணம் சில அரசியல் தலைவர்கள் அதற்கு ஆதரவாக செயல்படுவதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமது அரசாங்கம் எந்தவிதத்திலும் போதைப்பொருள் கடத்தலாளர்களுக்கு உதவிகளை வழங்காது என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் தற்போது நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை உறுதியாக நிலவுகிறது என தெரிவித்துள்ளார். பாதாள […]
திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களை கனடாவுக்கு ஈர்க்கும் முயற்சி
கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் முதல் பட்ஜெட்டில், உலகத் தரமான ஆய்வாளர்களை ஈர்க்கும் நோக்கில் 1.7 பில்லியன் கனேடிய டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,000ற்கும் மேற்பட்ட உயர் திறமையுள்ள ஆராய்ச்சியாளர்கள் கனடாவுக்கு வரவழைக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் உள்ள திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களை கனடாவுக்கு ஈர்க்கும் முயற்சியாகும். இதே நேரத்தில், தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை 40 சதவீதம் குறைக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய அரசு திட்டத்தில் இருந்த 305,900 பர்மிட்களுடன் ஒப்பிடுகையில் பாதியாகும். […]
இடியுடன் கூடிய மழை
மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரவு செலவு திட்டம்; தீவிர பாதுகாப்பில் நாடாளுமன்றம்!
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடை மாற்றும் அறைகள் உட்பட நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் நேற்றைய தினம் தீவிர சோதனை உட்படுத்தப்பட்டது. இராணுவத்தினராலும் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினராலும் கடுமையாக ஆய்வு செய்யப்பட்டன. நாடாளுமன்ற காட்சியகம் இன்று சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே […]
சட்டத்தில் அனுமதி வழங்கப்படாத நிறுவனங்கள் எப்படி கடன் வழங்கலாம்?
இணையத்தில் வழங்கும் கடன் வசதிகளுக்கு எதிராக கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றிக்கு முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (06.11.2025) நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் சக்தி அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அமைப்பின் தலைவர் சஞ்சய மாவத்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “சட்டம் ஒன்று இல்லாத நாட்டின் அநீதி கோலோச்சும் என்பார்கள். கடன் வழங்குவதற்கு சட்டத்தில் அனுமதி வழங்கப்படாத நிறுவனங்கள் அதாவது மத்திய வங்கியில் பதிவு செய்யாத அமைப்புகள், நிறுவனங்கள் பதிவு அலுவலகத்தில் பதிவை மேற்கொண்டு இணையத்தினுடாக […]
புதிய கல்வி சீர்திருத்தம்; பாடசாலை நேர மாற்றம்
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், அடுத்த ஆண்டு ஜனவரி முதல், பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான அறிவிப்பை நேற்றையதினம் (06.11.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து வெளியிட்டுள்ளார். புதிய கல்வி சீர்திருத்தங்களின் படி, 5ஆம் ஆண்டு முதல் உயர்தரம் வரை பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கப்படும். மேலும், ஒரு […]