உடுவில் பொது நூலகத்துக்கு அருகாமையில் முதியவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – உடுவில் பொது நூலகத்துக்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாவை கலட்டி, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை என்ற முகவரியைச் சேர்ந்த சின்னன் தங்கராசா (வயது 74) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தை மீட்ட சுன்னாகம் பொலிஸார் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு […]

ஜனாதிபதி அநுரவின் கேள்வியில் மூக்குடை பட்ட உதய கம்மன்பில!

என்னை ஹிட்லர் என்று கூறும் நீங்களெல்லாம் ரஷ்யாவா இல்லை அமெரிக்காவா என்று அநுர குமார எதிர்க்கட்சிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுர குமார திஸாநாயக்கவினால் சபையில் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதன்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு எதிர்க்கட்சிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி அநுர அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் பேரணியை நடத்துவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இதன்போது, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்டோர் தற்போதைய ஆட்சியை […]

கூரிய ஆயுதங்கள், போதைப்பொருளை வைத்திருந்த 9 பேர் யாழில் கைது

யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேரும் பகுதி பகுதியாக ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏழு பேரும் என ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். கைதான சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் […]

2026 ஜனவரி மாதத்திற்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உயரும்

2026 ஜனவரி மாதத்திற்குள் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் ரூபா1,350 இலிருந்து ரூ.1,750 ஆக உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். அடுத்த ஆண்டுக்கான பாதீட்டை முன்வைத்து நாடாளுமன்றில் ஜனாதிபதி தற்போது உரையாற்றி வரும் நிலையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், “தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் சேவைக்கு ஏற்ப நியாயமான தினசரி ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. ஜனவரி 2026 முதல் தற்போதைய குறைந்தபட்ச தினசரி ஊதியமான ரூபா 1,350ஐ ரூ. 1,550 ஆக உயர்த்த […]

நாட்டில் பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை…

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் அடிப்படையில் பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ள இலங்கை பொலிஸ் நேரடியாக பங்களிப்பு வழங்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, போதைப்பொருளை ஒழிக்க அனைத்து வழிகளிலும் பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், பாடசாலை மட்டத்தில், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைகளில் பல்வேறு போதைப்பொருள் தடுப்பு […]

வன்முறையினால் பாதிக்கப்பட்டு பிழைத்திருப்போருக்கான நீதியை உறுதி செய்தல் திட்டம் நிறைவு

இலங்கையில் பாலியல் மற்றும் பால்நிலையினை அடிப்படையாகக் கொண்ட வன்முறையினால் (SGBV) பாதிக்கப்பட்டு பிழைத்திருப்போருக்கான நீதியை உறுதி செய்தல் எனும் திட்டத்தின் 15 மாதப் பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் வெற்றிகரமான நிறைவை கொண்டாடும் வகையில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் நவம்பர் 04 ஆம் திகதி நடைபெற்ற அறிவு மற்றும் அனுபவப் பகிர்வு நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் சரோஜா […]

நெடுந்தீவில் தொல்பொருள் சின்ன சேதம்?

நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்துக்கு சேதம் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அமைந்துள்ள பகுதியில் வீதி அமைப்பு பணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் உள்ள தொல்பொருள் சின்னம் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவித்து தொல்லியல் திணைக்களத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குறித்த பணியில் ஈடுபட்ட இரண்டு பேர் நெடுந்தீவு பொலிஸாரால் நேற்று கைது […]

அரசுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் எவ்வித இரகசிய ஒப்பந்தமோ இணக்கப்பாடோ இல்லை!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் எவ்வித இரகசிய ஒப்பந்தமோ – இணக்கப்பாடோ இல்லை. கடந்த ஆட்சிக் காலங்களில்தான் எதிர்க்கட்சிகள் அரசுடன் இரகசியமாகக் கூட்டணியமைத்தன. ஐக்கிய மக்கள் சக்தியில் அவ்வாறு எவரும் செயற்படவில்லை. அரசுக்கு எதிரான நுகேகொடைப் பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துகொள்ளாவிடினும் அரசின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக நிச்சயம் குரல் கொடுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் […]

புலனாய்வு ஆணைக்குழுவிற்கு மைத்திரி ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலம் அளிக்க, வௌ்ளிக்கிழமை (07) காலை ஆஜரானார். விசாரணையை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி இன்று சொல்லப்போகும் மகிழ்ச்சியான செய்தி!

வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களுக்கு 30 வீதம் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் மேலும் ஓய்வூதியக்காரர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக 13,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான அரச செலவினங்களுக்காக 4,434 பில்லியன் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அஸ்வெசும வழங்குவதற்காக 24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அத்தோடு வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்படமாட்டாது.மேலும் நீண்ட கால வேண்டுகோளாக இருந்து பாவித்த வாகனங்கள் இறக்குமதிகள் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 80ஆவது வரவு செலவுத் திட்டமாகும். நாளை (8) முதல் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி […]