டெஸ்லா வருடாந்திர கூட்டத்தில் ஒப்புதல்; எலான் மஸ்க்கிற்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம்

எலான் மஸ்க்கிற்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் வழங்க டெஸ்லாவின் வருடாந்திரக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், தனக்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் வேண்டும் என்று, டெஸ்லா பங்குதாரர்களிடம் கோரிக்கை விடுத்தார். சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால், டெஸ்லாவில் இருந்து விலகுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சூழலில், எலான் மஸ்க்கின் சம்பள விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த ஆஸ்டின் நகரத்திலுள்ள டெஸ்லா தொழிற்சாலையில் […]

பாரிசில் முன்பதிவு; பிரபலங்களின் கல்லறைக்கு பக்கத்தில் இடம்

பிரபலமானவர்களின் கல்லறை உள்ள பகுதிகளில், கல்லறை கட்டுவதற்கான இடங்களை பெற பாரிஸ் வாழ் மக்களுக்கு அந்நகர நிர்வாகம் ஒரு லாட்டரி திட்டத்தை அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகர எல்லைக்குள் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடப்பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. இதையடுத்து, வரலாற்று பிரபலமானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள கல்லறை பகுதிகளில், பல ஆண்டுகள் பராமரிப்பின்றி சிதலமடைந்து உள்ள கல்லறைகளை, பாரிஸ் நகர மக்களுக்கு ஒதுக்க பாரிஸ் நகர நிர்வாகம் முடிவு செய்து அதற்காக ஒரு லாட்டரி […]

எறும்புக்கு பயந்த பெண் தற்கொலை!

இந்தியா, தெலங்கானாவில் சங்கரெட்டி மாவட்டத்தில் 25 வயது பெண் ஒருவர் எறும்பு பயத்தால் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒரு குழந்தையின் தாய், தனது 3 வயது குழந்தையை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், சுத்தம் செய்த பிறகு அவளை அழைத்துச் செல்ல வருவேன் என்றும் தனது குழந்தையிடம் கூறியிருந்தார். இருப்பினும், தனது கடமைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய கணவர், […]

தமிழக தென் மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் இன்று (நவ.,07) 9 மாவட்டங்களிலும், நாளை (நவ.,08) 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது

”ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது. தன் மகனை குறை சொல்கிறார்களே என்ற வேதனையை, விமானியின் தந்தை சுமந்து கொண்டிருக்க தேவையில்லை,” என்று வழக்கு விசாரணையின் போது சுப்ரீம்கோர்ட் நீதிபதி தெரிவித்தார். கடந்த ஜூன் 12ம் தேதி, குஜராத்தின் ஆமதாபாத்தில் 241 உயிர்களைப் பலிகொண்ட ஏர் இந்தியா விமான விபத்தில், பிரிட்டனை சேர்ந்த 40 வயது விஸ்வாஷ்குமார் ரமேஷ் மட்டுமே உயிர் பிழைத்தார். விமான விபத்து, விசாரணையை கண்காணிக்க […]

காஷ்மீரில் வலுக்கிறது இளம் தலைமுறையினர் போராட்டம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இளம் தலைமுறையினர் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. உலகெங்கும் உள்ள இளம் தலைமுறையினர், தங்கள் நாடுகளில் நடந்து வரும் அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். நம் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம், இலங்கையில் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டங்கள் அரசை ஆட்டம் காண வைத்ததுடன், ஆளும் முக்கிய தலைவர்களை நாட்டை விட்டே வெளியேற வழி செய்தது. பல ஐரோப்பிய நாடுகளிலும் இதுபோன்ற […]

முச்சக்கரவண்டி விபத்து : இருவர் காயம்

மஸ்கேலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று (7) மஸ்கெலியா, அப்கோர்ட் பகுதியிலிருந்து சென்ற இந்த முச்சக்கரவண்டி, தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்ததாகவும் அதில், இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.விமான நிலையத்தை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாய்!

திருகோணமலை, சிகிரியா உள்நாட்டு விமான நிலையத்தையும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தையும் மேம்படுத்துவதற்கு 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றில் ஜனாதிபதி தற்போது உரையாற்றி வரும் நிலையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வருடம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இலங்கைக்கு வந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, 160,000 இற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். இதுவொரு ஒரு சாதனை ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 3 மில்லியன் வெளிநாட்டவர்கள் இலங்கை வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவில் விமான டிக்கட் விற்பனை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. […]

“போராட்டம்” எனப் பெயர் மாறிய ‘மில்லர்’ திரைப்படம்!

ஐபிசி தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டு வரும் ‘மில்லர்’ என்ற திரைப்படத்தின் பெயர் “போராட்டம்” என மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த 26.10.2025 ஆம் திகதியன்று இடம்பெற்றது. இந்நிலையில் அத்திரைப்படம் தொடர்பில் ஐபிசி தமிழ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எமது அடையாளங்களையும், எமக்காக அர்ப்பணித்தவர்களின் அடையாளங்களையும் எமது அன்றாட வாழ்வின் அத்தனை அங்கங்களுக்கும் சூட்டிக்கொள்வதை எமது பெருமைக்குரிய கடமையாக வகுத்துக்கொண்டு வாழ்ந்து வருவதன் விளைவாகத்தான்- ‘மில்லர்’ என முன்னரே பெயரிடப்பட்ட திரைப்படத்தினை நாம் தயாரிக்க முன்வந்தோம். […]