குருந்தூர் விகாரை பற்றி சாணக்கியன் பேசுவது வெக்கக்கேடானது – அந்தனிசில் ராஜ்குமார்

மட்டக்களப்பு எல்லை கிராமமான வடமுனை நெலுகல் மலையில் பாரிய பௌத்த விகாரை ஒன்று புதிதாக அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதற்கு எந்த கண்டனமும் தெரிவிக்காத இரா. சாணக்கியன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்தபோது கிழக்கு மாகாணத்தில் விகாரைகளை கட்டுவதற்கு அமைச்சர்களை அழைத்து அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டுவிட்டு இன்று குருந்தூர் மலை விகாரை தொடர்பாக பேசுவது வெட்கக்கேடான விஷயம் என மட்டக்களப்பு மாவட்ட ஈ.பி.டி.பி. கட்சி ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார். மட்டக்களப்பு வெஸ்ஒப் மீடியா […]

சுனாமி முன்னாயத்த நடவடிக்கை!

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் முன்னாயத்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்க்காக வருடாந்தம் ஒழுங்குசெய்யப்படுகின்ற பிராந்திய நாடுகளுக்கான சுனாமி ஒத்திகை பயிற்சி நேற்று புதன்கிழமை (05) பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் ஆரம்பமாகியது. காலை 9:15 மணியளவில் சுனமி எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவிகள் வகுப்பு வகுப்பாக அணிவகுக்கப்பட்ட அங்கு உரியவர்கள் அறுவுறுத்தப்பட்டனர். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் இடைத்தங்கல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு மருத்துவ வசதிகள், உணவு, உட்பட பல்வேறு வசதிகளும் ஏற்படு செய்யப்பட்டிருந்தன. வட இந்து […]

நிலையான வளர்ச்சிக்கான பயணத்தைத் தொடங்கியுள்ள இலங்கைக்கு இந்தியா துணைநிற்கும்

இலங்கை அதன் பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா ஒரு நம்பகமான பங்காளியாக, நம்பிக்கைக்குரிய நண்பனாக மற்றும் மிக நெருங்கிய அண்டை நாடாக உறுதியாக நிற்கும் என்று இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். பொது-தனியார் கூட்டாண்மை தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (04) கொழும்பு ஐ.சி.டி. ரத்னாதீப ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கை […]

மருத்துவ நிபுணர்களின் இறுதிப் பதவிப் பட்டியல் குறித்து சங்கம் கடும் கவலை!

2026ஆம் ஆண்டுக்கான மருத்துவ நிபுணர்களின் இறுதிப் பதவிப் பட்டியலில் இரண்டு மேலதிகப் பதவிகளைச் சேர்க்க, சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் முயற்சி குறித்து மருத்துவ நிபுணர்களின் சங்கம் (AMS) கடும் கவலைகளை வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டு, பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட பட்டியலில், நாட்டின் முன்னணி அரச மருத்துவமனைகளில் இரண்டு புதிய இறுதிப் பதவிகளைச் சேர்க்க அந்த அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளதாக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது சேவைத் தேவைகளை விட […]

3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய, 3 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் உயிரிழந்துள்ளது. புன்னாலைக்கட்டுவன் தெற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை 21.07.2025 அன்று பிறந்துள்ளது. நேற்றையதினம் பால் குடித்தவேளை குழந்தைக்கு விக்கல் ஏற்பட்டது. பின்னர், வீட்டார் பிள்ளையை உறங்க வைத்துள்ளனர். இதன்போது, குழந்தை அசைவற்ற நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில், தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், வீட்டார் யாழ்ப்பாணம் […]

கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த இளைஞரைக் காணவில்லை

கந்தர பொலிஸ் பிரிவில் உள்ள தலல்ல கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (05) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காணாமல் போனவர் ரன்சேகொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது. காணாமல் போன இளைஞர் மேலும் 05 பேருடன் கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது கடலலையில் அடித்துச் செல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹிரிகெட்டிய பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட உயிர்காப்பாளர்கள் மற்றும் கடற்படை […]

சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம்

2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனூடனான சந்திப்பின்போது உறுதியளிக்கப்பட்டது. வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றுமுன்தினம் (04) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வர்த்தக சங்கத்தால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. யாழ்ப்பாணம் நவீன சந்தை கட்டடத் தொகுதியிலுள்ள […]

2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம்

எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நாளைய தினம் பிற்பகல் 1.30 மணியளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாளைய தினம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்ததன் பின்னர், அதன் இரண்டாவது வாசிப்பு குறித்த விவாதம் நவம்பர் 8ஆம் […]

போராட்டத்தில் குதிக்கப் போவதாக ஆசிரியர்கள் எச்சரிக்கை

ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கும் அரசின் இறுதி முடிவு என்பன தொடர்பாக நாளைய தினத்திற்கு முன் கல்வி தொழிற்சங்கங்களுக்கு தகவல் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அரசின் தீர்மானத்திற்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால், டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பணிப்புறக்கணிப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற […]

ஊரெழுவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் 41 வயதுடைய சந்தேக நபரிடம் இருந்து 02 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய்க் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.