பதிலளிக்க பாராளுமன்றத்துக்கு வருகை தர தயார் – மத்திய வங்கி ஆளுநர்

நிதிக் கொள்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க எமக்கு அழைப்பு விடுத்தால், பாராளுமன்றத்துக்கு வருகைத் தருவதற்கு எமக்கு பிரச்சினையேதும் இல்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற அரச நிதி பற்றிய குழுவில் முன்னிலையானபோது ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, நிதி கொள்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பும் போது முறையான […]

முல்லைத்தீவில் மக்கள் சந்திப்பு

முல்லைத்தீவு – உடையார்கட்டு வடக்கு மைதானத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் துறைக்கான பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மக்கள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர், மேலும் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களான காயத்திரிதேவி, தமிழ்வாணி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். உடையார்கட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பலரும் இம்மக்கள் சந்திப்பில் பங்கேற்று தங்களின் பிரச்சினைகள், தேவைகள் குறித்து அமைச்சர் அவர்களிடம் […]

பொலிஸ் சீருடைகளை வைத்திருந்த இருவர் கைது

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சீருடைகளைப் போன்ற சீருடைகளை வேறு தரப்பினருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. பாணந்துறை மற்றும் பண்டாரகமவைச் சேர்ந்த 38 மற்றும் 39 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரணை காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அனுமதியின்றி இலங்கை பொலிஸூக்கு சொந்தமான சீருடைகள் மற்றும் சீருடைகளின் பகுதிகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். பொலிஸார் நடத்திய […]

எப்.ஏ.டி.எப் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு இந்தியாவுக்குப் பாராட்டு

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை தடுக்கும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பான, எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, இந்திய நாட்டின் சொத்து மீட்பு நடைமுறையை பாராட்டியதுடன், உலகளவில் முன்மாதிரி அமைப்பாக அமலாக்கத் துறை விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது. புதிய அறிக்கை ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசை தலைமையிடமாக வைத்து, எப்.ஏ.டி.எப்., அமைப்பு செயல்படுகிறது. ‘சொத்து மீட்பு வழிகாட்டுதல் மற்றும் சிறந்த நடைமுறைகள்’ என்ற பெயரில் புதிய அறிக்கையை நேற்று வெளியிட்ட அந்த அமைப்பு, […]

போஸ்னிய முதியோர் இல்லத்தில் தீ; 11 பேர் பலி

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஹெர்சகோவினாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 30 பேர் படுகாயமடைந்தனர். போஸ்னியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துஸ்லா நகரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் ஏழாவது தளத்தில், நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால், இங்கு தங்கியிருந்த வயதானவர்களும், உடல்நலம் பாதித்தவர்களும் தாங்களாகவே வெளியேற முடியவில்லை.

ஆப்கானிஸ்தானில் புதிய கட்டுப்பாடு; ஐ.நா பணி விலகியது

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த 2021ல் தலிபான்கள் ஆட்சியை பிடித்த பின், பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கடந்த 2022-ல் தலிபான்கள் என்.ஜி.ஓ.,க்கள் எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில், ஆப்கானிஸ்தான் பெண்களை பணியமர்த்த தடை விதித்தனர். இந்த நடவடிக்கை, 2023-ல் ஐ.நா., அமைப்புகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஆப்கன் — ஈரான் எல்லையில் இஸ்லாம் காலாவில் அமைந்துள்ள ஐ.நா., பணியகத்தில், பெண் ஊழியர்கள் பணியாற்றுவதையும் தலிபான்கள் தடை செய்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, ஐ.நா.,வும், அதனுடன் […]

பிரித்தானிய அரகுடும்பத்திலுள்ள மற்றுமொருவரின் பட்டமும் பறிக்கப்படலாம்?

பிரித்தானிய மன்னர் சார்லஸ், தனது தம்பி அண்ட்ரூவின் இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்து இளவரசர் ஹரி, மேகன் தம்பதியரின் பட்டங்களும் பறிக்கப்படலாம் என ராஜகுடும்ப நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய மன்னர் சார்லஸ், தனது தம்பி அண்ட்ரூவின் இளவரசர் பட்டத்தை பறித்து, அவரது விண்ட்சர் வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. தவறான நடத்தையுள்ள ஒருவரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் அவருக்கு உள்ள தொடர்புகள் காரணமாக, அரச குடும்பத்தை அவர் விலக்கி வைக்கப்பட்டுள்ளார். […]

புதிய விதிகள் அறிமுகம்; கனடா விசாக்கள் எப்போது இரத்து?

மக்களின் கோரிக்கைகளை கவனித்து அவற்றை தீர்வு காண உறுதியளித்ததுடன், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ச்சியை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார். கனடாவில் வருகை விசாக்கள், கல்வி அனுமதி மற்றும் பணி அனுமதிகளை குடிவரவு அதிகாரிகள் எப்போது இரத்து செய்யலாம் என்பதை தெளிவுபடுத்தும் புதிய விதிகளை கனடா கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்கள் நவம்பர் 4ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மாற்றங்கள், விதிகளை மீறுபவர்கள், தகுதியற்றவர்கள் மற்றும் தகவல்களை தவறாக பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஆகியோரின் ஆவணங்களை இரத்து செய்ய […]

நியூயோர்க் நகரத்திற்கு தீங்கு விளைவிக்க ட்ரம்ப் முடிவு செய்தால் அவரை எதிர்ப்போம்!

நியூயோர்க் நகரத்திற்கு தீங்கு விளைவிக்க ஜனாதிபதி முடிவு செய்தால், அவரை எதிர்த்து நிற்கத் தயாராக இருப்பதாக நகரின் புதிய மேயர் ஜோஹ்ரான் மாம்டானி தெரிவித்துள்ளார். நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஆற்றிய முதல் உரையில், “அமெரிக்காவின் அதிக வாழ்க்கை செலவை கொண்ட நகரமாக நியூயோர்க் உள்ளது. எனது வெற்றி நியூயோர்க் நகரத்தின் வாழ்க்கை செலவுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நியூயோர்க்கில் வசதி […]

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் உள்ளிட்ட பொருட்கள் நேற்று புதன்கிழமை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் நேற்றையதினம் காலை தேவிபுரம் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர். இதன்போது, கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11 இலட்சத்து 69 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பரல்கள் என்பன புதுக்குடியிருப்பு […]