அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நாம் நிச்சயம் குரல் கொடுப்போம் – சமிந்த விஜேசிறி

அரசாங்கத்துடன் எமக்கு எவ்வித இரகசிய ஒப்பந்தமோ இணக்கப்பாடோ இல்லை. கடந்த ஆட்சி காலங்களில் தான் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துடன் இரகசியமாக கூட்டணியமைத்தன. ஐக்கிய மக்கள் சக்தியில் அவ்வாறு எவரும் செயற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார். கொழும்பில் நேற்று புதன்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தமக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தயாராகியுள்ளன. எவ்வாறிருப்பினும் அந்த எதிர்ப்பு பேரணியில் […]

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை!

நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் தேசிய வேளைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று புதன்கிழமை (05) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 3 கிலோ கிராம் 321 கிராம் ஹெரோயின், 1 கிலோகிராம் 107 கிராம்; ஐஸ், 48 கிராம் கொக்கெய்ன், 54 கிலோகிராம் 434 கிராம் கஞ்சா, 204, 548 கஞ்சா செடிகள், 11 […]

நிதிமோசடி; யோஷித ராஜபக்ஷவின் வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (06) உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கு தொடர்பான பல ஆவணங்களை அரச தரப்பு, பிரதிவாதியிடம் ஒப்படைத்தது. முன்வைக்கப்பட்ட ஆவனங்களை பரிசீலித்த நீதிபதி, வழக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி […]

உலகளாவிய சக்தி யதார்த்தங்களை அங்கீகரிக்கிறேன் – சஜித்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம்பெறுவதற்கான இந்தியாவின் நீண்டகால முயற்சியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆதரித்துள்ளார். இது “உலகளாவிய சக்தி யதார்த்தங்களை” அங்கீகரிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவின் அந்த முயற்சியை தாம் தொடர்ந்து ஆதரிப்பதாகவும் கூறியுள்ளார். இந்தியாவுக்கான தனது தற்போதைய பயணத்தின் போது ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியா சேர்க்கப்படுவது “சர்வதேச அரசியலின் நடைமுறை யதார்த்தங்களை அங்கீகரிப்பதாக இருக்கும்” என்றும் பிரேமதாச கூறியுள்ளார். […]

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளை நிறைவு

நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், டிசம்பர் மாதம் 7ஆம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 24ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உறுகாமத்தில் பாரியளவிலான போதை பொருளுடன் 3 வியாபாரிகள் கைது

மட்டக்களப்பில் பாரிய போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பேரை 95 கிராம் ஜஸ் போதை பொருளுடன் நேற்று புதன்கிழமை (05) அதிகாலை 2.30 மணிக்கு கரடியனாறு உறுகாமம் மற்றும் கொக்குவில் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார். இது பற்றி தெரியவருவதாவது; பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மட்டு தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு மற்றும் போதை ஒழிப்பு பிரிவினர் சம்பவ தினமான புதன்கிழமை […]

கால்மேகி புயலால் பிலிப்பைன்ஸில் கடுமையான தாக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 114 ஆக உயர்வு

பசிபிக் பெருங்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்ற கால்மேகி புயல் மத்திய பிலிப்பைன்ஸில் கடுமையான வெள்ளத்தை ஏற்படுத்தியதால், குறைந்தது 114 பேர் உயிரிழந்ததை அடுத்து, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் ஒரு பேரிடர் நிலையை அறிவித்துள்ளார். இந்தப் புயல் பிராந்தியத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட தீவான செபுவில் உள்ள முழு நகரங்களையும் வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. அங்கு 71 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 127 பேர் காணாமல் போயுள்ளனர், 82 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் […]

மரண அறிவித்தல்

யாழ். நயினாதீவு, 2-ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2-ம் குறுக்குத் தெரு யாழ் நகரம், பிரித்தானியா Pinner ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சட்டத்தரணி சிவகலாநிதி சிவச்சந்திரன் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் பாலசுந்தரம் (புங்குடுதீவு, கல்வித் திணைக்களம் ) புனிதவதி பாலசுந்தரம் (நயினாதீவு, ஆசிரியை வேம்படி மகளிர் பாடசாலை) தம்பதிகளின் அன்பு புதல்வியும்,  

அவசர சந்திப்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் மற்றும் வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இன்று (06) நடைபெறும் சிறப்பு கூட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பில் நடைபெறும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம், வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து விவாதிக்கும் இந்த சந்திப்பில் பல நிபுணர்கள் […]

வடக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்!

வடக்கு கடற்பகுதியில் சட்டவிரோத தொழில்களை உடனடியாக தடுத்து நிறுத்துவதன் ஊடாகவே எமது கடல் வளத்தையும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என வடக்கு மாகாண கடற்றொழில் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (06.11.2025) நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கு தொழில் அனுமதிகளை வழங்குவதன் மூலமே எமது கடல் வளங்களும் கரையோர பகுதி […]