போதைப்பொருள் குற்றச்சாட்டு; நகர சபை உறுப்பினர் இராஜினாமா

தனது கணவர் மற்றும் மகன் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய தேசிய மக்கள் சக்தியின் பேலியகொட நகர சபை உறுப்பினரான நிரஞ்சல குமாரி ராஜினாமா செய்துள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் தொடர்பாக தற்போது சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. ஜே.வி.பி. மேலும் பின்வருமாறு கூறுகிறது: இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரின் கணவரான டிஸ்னா நிரஞ்சல குமாரி, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பேலியகொட நகர சபைக்காக ​ தேசிய […]

வித்யா படுகொலை வழக்கின் விசாரணை நிறைவு!

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை இன்று (6) நிறைவடைந்தது. இந்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ‘சுவிஸ் குமார்’ உட்பட ஏழு பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணையை உச்ச நீதிமன்றம் முடித்துள்ளது. அதன்படி, மனுவின் விசாரணை தொடர்பான தீர்ப்பை […]

சட்டத்துறை மாணவர்களின் முன்மாதிரி செயல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர் சங்கத்தின் 20வது ஆண்டு விழாவையொட்டி சாட்டி கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். 2025 நவம்பர் 5 ஆம் திகதி யாழ்ப்பாண சாட்டி கடற்கரையில் சிறப்பு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வு கடலோரச் சூழலின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் சமூக பொறுப்புணர்வை மேம்படுத்தும் சட்ட மாணவர்களின் பங்களிப்பையும் வலியுறுத்தியுள்ளது.

தவிசாளருக்கு பிணை

இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படுத்தியிருந்தனர். இதன்படி, குறித்த சந்தேகநபர்களை ஒரு இலட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரத்தில் […]

பூநகரி – சங்குப்பிட்டி பெண் கொலை: சந்தேகநபர் தொடர்பில் விளக்கம்

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல என இலங்கை இசை வேளாளர் இளைஞர் பேரவை தெரிவித்துள்ளது. குப்பிளான் பகுதியை சேர்ந்த தவில் வித்துவானை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் என ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இது தொடர்பில் இலங்கை இசை வேளாளர் இளைஞர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் அதனை மறுத்துள்ளது. திருட்டு சம்பவங்கள் மற்றும் […]

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் இதற்கு அமைவாக மிக விரைவாக இராணுவம் நிலை கொண்டுள்ள துயிலும் இல்ல காணிகளை விட்டு வெளியேற உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இதை நான் சொல்லவில்லை. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்த விடயமே. மாவீரர்களை நினைவு கூறுவதற்கான […]

சிறீதரன் – இளங்குமரனுக்கிடையே வாக்குவாதம்

கிளிநொச்சியில் இன்றையதினம்(6) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(6) கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் ஆரம்பமானது. குறித்த கூட்டத்தில் சிறிதரனுக்கு கதைக்க சந்தர்ப்பம் வழங்காமல் இளங்குமரன் தனது கருத்துக்களை தெரிவித்துக் கொண்டு இருந்த போதே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. காணிப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றபோதே இரு தரப்பினருக்கும் இடையில் […]

வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு; பரிசீலனை செய்தார் ஜனாதிபதி

2026 வரவு -செலவுத் திட்ட (பட்ஜெட்) முன்மொழிவுகளின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு 2026 வரவு -செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் நேற்று புதன்கிழமை (05) இரவு இணைந்துகொண்டார். நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் இதில் கலந்து கொண்டார். தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு -செலவுத் திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாளை […]

இலங்கையில் அமெரிக்கப் பெண்ணின் சடலம் மீட்பு

இலங்கைக்கு சுற்றுலா வருகை தந்திருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் கண்டி அருப்போலாவில் உள்ள தர்மசோக மாவத்தையில் ஒரு வீட்டில் இறந்து கிடந்தார். அவர் சுற்றுலா விசாவின் மூலம் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த கெய்ட்லின் ஜூலி கிளார்க் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் மூன்று மாதங்களாக வாடகை வீட்டில் தங்கி வருகின்றார். செவ்வாய்க்கிழமை(04) அன்று அவர் சிகிரியாவுக்கு சுற்றுலா சென்று வீடு திரும்பியுள்ளர் என்றும் மேலும் குறித்த பெண் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவராக […]

சுமந்திரன் விதித்த நிபந்தனை

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி இணங்கி வந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட முடியும் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று (05.11.2025) இடம்பெற்ற பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (05.11.2025) வவுனியாவில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி […]