செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள்; விசாரணை அறிக்கை
இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருள் ஒன்று, நான்கு ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, நவம்பர் 3, 2025 திங்கட்கிழமை, யாழ்ப்பாணம் நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களில் ஒன்றான செருப்பு 1980 மற்றும் 1995 க்கு இடையில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் […]
ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் – ஆளுநர் நா.வேதநாயகன்
கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கிறது. சமூகத்தின் மீதான அக்கறை என்பதும் குறைந்து செல்கிறது. ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் , அக்கறையுடன் செயற்படுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். சுவிற்சர்லாந்து உறவுகளும் நித்திலம் கலையகமும் இணைந்து நடத்திய கலைஞர் மதிப்பளிப்பு மற்றும் திரை இசை வெளியீடு என்பன முகமாலை சிவபுர வளாகத்தில் நேற்று புதன்கிழமை (05) மூத்த சட்டத்தரணி சோமசுந்தரம் தேவராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த […]
தொழுநோயை முழுமையாக ஒழிக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை
2035 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் பதிவாகும் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாகக் குறைக்க தற்போதைய அரசாங்கம் திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஊடகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டு தேசிய தொழுநோய் மாநாட்டுடன் இணைந்து நடத்தப்பட்ட சிறப்பு ஊடக சந்திப்பில் அமைச்சர் இதை வலியுறுத்தினார். இலங்கை 1996 ஆம் ஆண்டு தொழுநோயை ஒழித்தது, ஆனால் இந்த பயணம் இன்னும் முடிவடையவில்லை என்று சுகாதார மற்றும் […]
இலங்கையின் மருந்து பற்றாக்குறையைப் போக்க இந்தியா உதவ வேண்டும்
இலங்கை மருத்துவத் துறையில் நிலவும் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறைக்கு தீர்வு காண இந்திய அரசின் ஆதரவை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டாவை சந்தித்து, கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் தேசிய சுகாதார கட்டமைப்பினூடாக பல தசாப்த காலமாக இலவச சுகாதார வசதிகள் வழங்கப்பட்ட போதிலும், தற்போது அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் பல மருந்துகளின் பற்றாக்குறை, அவற்றைப் பயன்படுத்தும் இலட்சக்கணக்கான மக்களை கடுமையாக பாதித்துள்ளதென […]
இந்த வரவு – செலவுத் திட்டம் ஊடாக பாரியதொரு மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது – சாணக்கியன்
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியிடம் கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரி ஐந்து மாதங்கள் காத்திருக்கிறோம். இதுவரையில் பதிலேதும் கிடைக்கவில்லை. வரவு – செலவுத் திட்டத்தின்போது கடுமையான தீர்மானம் எடுப்போம். தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் நிலையான தீர்வினை பெற்றுக்கொடுக்கவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கொழும்பில் நேற்று (5) நடைபெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பின் பின்னர் […]
வடக்கு, கிழக்கில் ஆளுநர் ஆட்சி அதிகாரங்களை நிறுத்த வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்
வடக்கு, கிழக்கில் ஆளுநர் அதிகாரங்களை நிறுத்தி மாகாண சபை ஆட்சியை நடாத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டுமேன ஜனநாயக தமிழ் கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(6) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண ஆட்சி முறைகளை விடுத்து அரசாங்கம் ஆளுநர் ஆட்சியை நடாத்துவதனை நிறுத்த வேண்டும். இதனடிப்படையில் பார்க்கும் போது அடுத்த வருடமும் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை […]
எதிர்க்கட்சிகள் பேரணியில் பங்கேற்குமாறு ஐ.ம.சக்திக்கு நாமல் அழைப்பு
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21ஆம் திகதி ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பேரணியில் கலந்துகொள்வோம். சுபநேரம் பார்த்துக்கொண்டிருக்காமல் பேரணியில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியிடம் வலியுறுத்துகிறோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சர்வாதிகாரத்தை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படும் […]
எந்த அரசாங்கம் என்றாலும் தேர்தலை தள்ளிப் போடுவது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும் – மகிந்த தேசப்பிரிய
மாகாண சபைகளை ஆளுநர்களில் ஆளுகையின் கீழ் கொண்டு செல்வது சட்டவிரோதமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் வருடாந்த ஆராச்சி மாநாடு மற்றும் ஐந்தாண்டு திட்டம் நேற்று (06.11.2025) வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மகிந்த தேசப்பிரியவிடம் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர்,மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனம் ஒன்றை நடத்தி செல்வதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருக்க வேண்டும் […]
திருமலை கண் பரிசோதனை கூடத்தில் தீ விபத்து
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள தனியார் கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. மின் ஒழுக்கு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த கண் பரிசோதனை நிலையத்தின் மேல் மாடி பகுதியில் தங்கியிருந்த தாதியர்களின் விடுதி அறையும் தீப்பற்றி எரிந்துள்ளதுடன், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பைன் மரம் பஸ் மீது விழுந்து ஒருவர் பலி
கண்டியிலிருந்து ஹேவாஹெட்டாவுக்குச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்தின் மீது இன்று பிற்பகல் ஹல்வத்த பகுதியில் பைன் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன், பத்து பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர் 57 வயதுடையவர். காயமடைந்தவர்கள் கலஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், மேலும் பலர் ஆபத்தான நிலையில் பேராதனை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.