வணிக நிறுவனங்கள் மூலம் திறைசேரிக்கு ரூ. 227 பில்லியன்
அரசுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் மூலம் திறைசேரிக்கு ரூ. 227 பில்லியன் அளவிலான பாரிய இலாபம் கிடைத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். எனினும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த இலாபம் குறைந்துள்ளதாகவும், மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படாததும் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அந்நியச் செலாவணி இலாபம் இல்லாமையுமே இதற்குக் காரணம் பிரதானம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த செல்வம் பொதுமக்களின் மூலதனத்தில் இருந்தும், சந்தையின் தேவைகள் மற்றும் வினைத்திறனுக்கு […]
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்து மருந்தை கண்டுபிடித்த களனிப் பல்கலைக்கழகம்
களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு புதிய, மிகவும் பயனுள்ள மருந்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இந்த பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் அசித டி சில்வா கருத்துப்படி, இந்த மருந்தானது பொதுவாகப் பயன்படுத்தப்படும் மூன்று வெவ்வேறு மருந்துகளின் கலவையாக, ஒற்றை மாத்திரையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரே ஒரு மாத்திரையை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு தசாப்த கால […]
பாடசாலைகளில் ‘முஸ்லிம் மாணவிகளின் ஆடை’; தடையை எதிர்த்து அடிப்படை உரிமை மனு
பாடசாலைகளில் ‘முஸ்லிம் மாணவிகளின் ஆடை’ அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து சில மாணவிகள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இலங்கை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆடைத் தடையானது தமது மத மற்றும் கலாசார உரிமைகளை நிலைநாட்ட அனுமதிக்கும் விதமாக, அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக மாணவிகள் தங்கள் மனுவில் குறிப்பிட்டனர். குறித்த ஆடை விதியைச் சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, மாணவிகளுக்குத் தங்கள் சட்டப் […]
மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி செலுத்துவோருக்கு…
மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்குப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான வரி விபரத்திரட்டுக்களை நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னதாக இணையவழியில் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டுக்களை சமர்ப்பிப்பது தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் வருமான வரி விபரத்திரட்டுக்களைச் சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக, 2017 ஆம் ஆண்டு 24 […]
முச்சக்கர வண்டி கவிழ்ந்து இருவர் படுகாயம்
மஸ்கெலியா, சாமிமலை கார்ட்மோர் வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் காயமடைந்து மஸ்கெலியா பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஸ்கெலியா, சாமிமலை – கார்ட்மோர் வீதியில் உள்ள டிசைட் தோட்ட அலுவலகத்திற்கு அருகில் வைத்து இவ் விபத்து நிகழ்ந்துள்ளதுடன் இதில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியின் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் .
சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் இடம்பெற்ற கொலை; பிரதான சந்தேக நபர் கைது!
சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர். சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி பெண்ணின் சடலம் கரையொதுங்கியது. 18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வந்தனர். இதனடிப்படையில் நேற்றுமுன்தினம்(3) யாழ்ப்பாணத்தில் வைத்து குறித்த நபரை கைது செய்துள்ளனர். இதன்போது, அவர் கொலைக்கு பயன்படுத்திய காரையும் […]
அரசின் அனுசரணையுடன்தான் பாதாளக் குழுக்கள் இயங்குகின்றன – நாமல் குற்றச்சாட்டு
அநுர அரசின் அனுசரணையுடன்தான் பாதாளக் குழுக்கள் இயங்குகின்றன. இந்த அரசின் கட்டளைக்கமையவே பாதாளக் குழுக்கள் செயற்படுகின்றன. இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படுபவர்கள் அனைவரும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பு என்று குறிப்பிடுவது அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று(4) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “அநுர அரசுக்கு எதிராக எதிர்வரும் […]