இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி நியூசிலாந்தை வெல்லுமா மேற்கிந்தியத் தீவுகள்?
நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது ஒக்லன்டில் இன்று புதன்கிழமை (05) காலை 11.45 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகின்றது. உலகக் கிண்ணமானது மூன்று மாதங்களில் வரவுள்ள நிலையில் இரண்டு அணிகளும் தங்களது சிறந்த 11 வீரர்களை அடையாளம் காண ஐந்து போட்டிகள் கொண்ட தொடரானது உதவும். உலகக் கிண்ணமானது இந்தியா, இலங்கையில் இடம்பெறவுள்ளதால் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களே காணப்படுமென்றபோதும் தற்கால தட்டை ஆடுகளமென கருதப்படுகையில் போட்டி நிலைமைகள் ஒரே […]
தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி: வீரர் நிப்ராஸிற்கு கெளரவிப்பு
அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற 4வது சிரேஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப்பிரிவின் முள்ளிப்பொத்தானையை சேர்ந்த விளையாட்டு வீரரான ஆர்.எம்.நிப்ராஸ் 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் 3ம் இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார். இவருக்கான கெளரவிப்பு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது குறித்த வீரரை சக உத்தியோகத்தர்கள் இணைந்து அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். குறித்த நிகழ்வில் உதவி பிரதேச […]
2025–2026 வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம்!
‘வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் (2025-2026)’ இனை அமுல்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 25.11.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் வீதி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பாக தொடர்ந்தும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. வீதி விபத்துக்கள் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் எமது நாட்டில் இறப்பு விகிதம் 10,000 இற்கு 11.2 ஆகப் பதிவாகியுள்ளது. […]
போதைப்பொருள் பரிமாறப்படும் கேந்திர நிலையமாக இலங்கை – ஐ.நா
இந்து சமுத்திரத்தின் கிழக்கு பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் மோசடி கும்பல்கள் இலங்கையை போதைப்பொருள் பரிமாறப்படும் கேந்திர நிலையமாக பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆசியாவில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் தயாரிக்கும் நாடுகளுக்கு அண்மையில் அதாவது பூகோளவியல் அமைவிடத்தை பயன்படுத்தி இந்த மத்திய பரிமாற்றும் இடங்களாக மாலைதீவு, இலங்கையை பயன்படுத்துகின்றனர். போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலையமைப்புகள் தொடர்பில் ஐக்கிய […]
வானிலை மாற்றம்
வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களின் […]
நேபாளத்தில் பனிச்சரிவு; மலையேற்ற வீரர்கள் 7 பலி
நேபாளத்தில், இரண்டு இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஏழு மலையேற்ற வீரர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். நேபாளத்திற்கு, மலையேற்ற சாகசத்திற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் வருவது வழக்கம். அதன்படி, டோலாகா மாவட்டத்தில் உள்ள யாலுங்ரி மலை சிகரத்திற்கு ஒரு மலையேற்றக்குழு ஏறியது. கடல் மட்டத்தில் இருந்து, 16 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அந்த சிகரத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் மலையேற்ற வீரர்கள் தங்கி இருந்தனர். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் இத்தாலி, கனடா, பிரான்ஸ், […]
பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவோம் – இஸ்ரேல் அமைச்சர்
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சர், டில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்து பேசினார். வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்த தலைவர்கள், பயங்கரவாதத்தை எதிர்த்து போராடவும் முடிவு செய்தனர். வர்த்தகம், உட்கட்டமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்த அவர்கள், உலகளவில் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடவும் முடிவு செய்தனர். அடுத்த சில மாதங்களில் […]
பிலிப்பைன்சில் வீசிய கடும் சூறாவளி; 26 பேர் பலி
பிலிப்பைன்சில் வீசிய கடும் சூறாவளியில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். சராசரியாக ஆண்டுதோறும் 20க்கும் மேற்பட்ட சூறாவளிகள் மற்றும் புயல்களால் பிலிப்பைன்ஸ் பாதிக்கப்படுகிறது. இதோடு பூகம்பங்களும் நிகழ்வது உண்டு. இந் நிலையில் அந்நாட்டின் மத்திய பகுதியில் கல்மேகி (Kalmegi) சூறாவளி தாக்கியது. சூறாவளியோடு, திடீர் வெள்ளமும் ஏற்பட்டதால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். சூறாவளிக்கு இதுவரை 26 பேர் பலியாகி இருக்கின்றனர். பலரும், வீடுகள், கட்டடங்களில் ஏறி தங்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டு உள்ளனர். ஏராளமான கார்கள், […]
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் தின நினைவேந்தல் எதிர்வரும் 27ஆம் திகதி வடக்கு கிழக்கு மற்றும் தமிழர் தாயக பகுதிகளில் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப் படவுள்ளது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் நினைவு நிகழ்வுக்கு தயாராக ஆரம்பித்துள்ளது. இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்வதற்கான சிரமதான பணிகள் மாவீரர்களின் […]
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று(4) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் இன்று (5) காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது.