நடப்புச் சம்பியன்களை வென்ற மியூனிச்

சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் வென்றது. மியூனிச் சார்பாகப் பெறப்பட்ட கோல்களை லூயிஸ் டியஸ் பெற்றதோடு, பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோவா நீவிஸ் பெற்றார். இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டுடனான போட்டியை 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் […]

விஞ்ஞான புனைகதை எழுதுவதில் தேசிய ரீதியில் சாதனை படைத்த யாழ்.மாணவர்கள்!

விஞ்ஞான புனைகதை எழுதுவதில் தேசிய ரீதியில் முதல் மூன்று இடங்களையும் யாழ்.மாணவர்கள் பெற்றுள்ளனர். விஞ்ஞானத்தை பிரபல்யப்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய விஞ்ஞான மன்றானது உலக விஞ்ஞான தினத்தையும், விஞ்ஞானம் தொடர்பான போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடாத்தியது. இதில் விஞ்ஞான புனைகதை எழுதுவதில் முதலாம் இடத்தை வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையை சேர்ந்த ரூபிகா அருந்தவமும், இரண்டாம் இடத்தை சாவச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த […]

உப தவிசாளரின் சகோதரன் போதைப்பொருளுடன் கைது

நல்லூர் பிரதேச சபையின் உபதவிசாளரின் சகோதரன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கோண்டாவில் பகுதியில் வைத்து இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்டகாலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழுந்து அரைத்து கொண்டு இருந்த இயந்திரத்தில் விழுந்த நபர் தலை சிதறிப் பலி

கொழுந்து அரைத்து கொண்டு இருந்த இயந்திரத்தில் விழுந்த நபர் தலை சிதறிg; பலி தேயிலை கொழுந்து அரைத்து கொண்டு இருந்த இயந்திரத்தில் விழுந்த நபர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் புதன்கிழமை (05) அதிகாலை 2.10 க்கு இடம் பெற்றுள்ளது. இரண்டு குழந்தைகளின் தந்தையான கிட்ணன் விஜயகுமார் என்பவர் சம்பவத்தில் இறந்துள்ளார். இறந்தவரின் சடலம் மவுஸ்ஸாக்கலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் சம்பவம் […]

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கைது

  ஹிங்குராங்கொடை பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (4) அன்று இரவு, தனது சகோதரனை விடுவிக்க கூறி ஹிங்குராங்கொடை பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்துவதாகவும், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். ஹிங்குராங்கொடை பொலிஸ் துறையினரின் கூற்றுப்படி, இலங்கை மின்சார சபையின் (CEB) இரண்டு ஊழியர்கள் அளித்த தனித்தனி புகாரைத் தொடர்ந்து, யடியல்பத்தன பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். […]

மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டே ஜாய் கிறிஸில்டாவுடன் திருமணம் நடந்தது – மாதம்பட்டி ரங்கராஜ்

ஜாய் கிரிஸில்டாவுடனான திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது. செப்டம்பர் 2025-ல், ஆயிரம் […]

2026 ஆம் ஆண்டு வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட வாய்ப்பு?

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் ஏற்படப்போகும் மாற்றங்கள் தொடர்பில் ஊடகங்கள் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், வாகன இறக்குமதிக்கான வரி கட்டமைப்பை மாற்றப்போவதாக தெரியவந்துள்ளது. வாகன இறக்குமதியாளர்களாக நாம் முக்கியமாக கேட்க வேண்டிய விடயம் என்னவென்றால், வாகன இறக்குமதிக்கான […]

வட்டியில்லா கடன் திட்டம் – வெளியான அறிவிப்பு

2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது தொகுதி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தற்போது கோரியுள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் நவம்பர் முதலாம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி வரை www.studentloans.mohe.gov.lk என்ற இணையதளம் ஊடாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரச அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் முற்றிலும் ஆங்கில […]

ஏகே 64 படத்துக்காக ஆதிக் போட்டுள்ள திட்டம்

குட் பேட் அக்லி படத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து உடனடியாக அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் காம்போ இணைந்துள்ளது. இவர்களுடைய ‘ஏகே 64’ படத்துக்கான முதற்கட்ட பணிகள் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. அதோடு இந்தப் படத்தில் நடிப்பதற்காக சிலரிடம் அஜித்தின் 64வது படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பில் உள்ளனர். இதனிடையில் கார் ரேஸிங்கில் பிசியாக இருக்கும் அஜித், அவ்வப்போது கொடுத்து வரும் பேட்டிகள் இணையத்தில் […]

தனுஷ் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்தால் எப்படி இருக்கும்?

தனுஷ் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்தால் எப்படி இருக்கும் என சில ரசிகர்கள் பேசி வருகின்றனர். சோஷியல் மீடியாவில் ஒரு சில ரசிகர்கள் பிரதீப் தனுஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற தங்களின் ஆசையை கூறி வருகின்றனர். பிரதீப் ரங்கநாதன் ஒரு ஹீரோவாக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து சென்சேஷனல் நாயகனாக உருவெடுத்திருக்கின்றார். ஹாட்ரிக் வெற்றி மட்டுமல்லாமல் அவர் ஹீரோவாக நடித்த மூன்று படங்களுமே நூறு கோடி வசூலை பெற்ற படங்களாகும். இந்நிலையில் பிரதீப் […]