சம்பளத்தை சமூக சேவைக்கு பயன்படுத்தும் யாழ். மாநகர சபை உறுப்பின ரத்னம் சதீஸ்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின், யாழ். மாநகர சபை உறுப்பினராகிய ரத்னம் சதீஸ், மாநகர சபையினால் நான்கு வருடங்களுக்கும் வழங்கப்படும் அவருக்கான சம்பள கொடுப்பவை சமூக சேவைக்காக பயன்படுத்துவதற்காக முன்வந்துள்ளார். அந்தவகையில் ஒவ்வொரு மாதமும், 24 வட்டாரங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் இந்த கொடுப்பவை பகிர்ந்தளிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். அதனடிப்படையில் மாநகர சபையால் வழங்கப்பட்ட கொடுப்பனவுடன் தனது சொந்தப் பணம் இருபதாயிரம் ரூபாவையும் சேர்த்து, கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 100 மாணவர்களுக்கு வவுச்சர்கள் வழங்கியுள்ளார். இந்தநிகழ்வில் தமிழ் தேசிய […]
உயிரிழந்த வவுனியா பல்கலைக்கழக மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு…

வவுனியா பல்கலைக்கழகத்தில் மரணமடைந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் இன்று(03) தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா பல்கலைக்கழத்தில் மாணவர்களின் மது விருந்து நீண்ட நேரம் இடம்பெற்ற நிலையில் சனிக்கிழமை காலை வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மரணமடைந்த நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவ்வாறு உயிரிழந்தவர், அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் ஆவார். […]
செல்வம் அடைக்கலநாதன் எம்பியின் வாகனத்தில் தீ
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் வாகனத்தில் திடீர் தீப்பரம்பல் ஏற்பட்டுள்ளது. இந்தசம்பவம் வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் (02) மாலை இடம்பெற்றுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் வாகனம் மன்னார் வீதியில் பயணித்த போது வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் வாகனத்தில் மின்சார சீரின்மை காரணமாக தீப் பரம்பல் ஏற்பட்டது. இதனையடுத்து வாகன சாரதியும், அப் பகுதியில் […]
தேசிய ரீதியாக சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வு

தேசிய ரீதியாக சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வொன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. சுமாத்திரா தீவை அண்மித்த கடல் பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவருகின்றது. இலங்கையும் சுனாமிக்கு தயாரான நாடு என்ற வகையில் யாழ்ப்பாணம், களுத்துறை, மாத்தறை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களை பிரதானமாகக் கொண்டு நாட்டின் பிற மாவட்டங்களையும் உள்ளடக்கி தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வானது இந்திய பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் உள்ள 28 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய அமைப்பினால் […]