சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை?

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை ராணுவப் படையான ஆஸ்.எஸ்.எப்., கைப்பற்றிய பின் ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானின் எல் – பாஷர் நகரை, சூடான் ராணுவத்திடம் இருந்து, துணை ராணுவப் படையான ஆர்.எஸ்.எப்., சமீபத்தில் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, அங்கு மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் ஏற் பட்டுள்ளதாக பல சர்வதேச அமைப்புகள் குற்றஞ் சாட்டியுள்ளன. சூடானில், சக்திவாய்ந்த இரு ராணுவ தலைமைகளுக்-கு இடையேயான அதிகாரப் போட்டியின் விளைவால் உள்நாட்டு […]

மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது

சட்ட விரோதமாக மாணிக்கக் கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் மஸ்கெலியா பொலிஸார் கைது செய்து உள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 45 வயது 52 வயது உடைய மவுஸ்ஸாக்கலை தோட்ட சீட்டன் பிரிவில் உள்ளவர்கள். மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார அவர்களுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து அவரது பணிப்புரையின் படி மஸ்கெலியா பொலிஸ் பிரிவு திடீர் சுற்றி வளைப்பு ஒன்றை மவுசாகலை ஓயா பகுதியில் மேற் கொண்டனர். அந்த […]

பல்கலைக்கழக மாணவியை விரிவுரையாளர் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தால் தற்போது முறையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இது மிகவும் சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற ஒரு குழுவால் மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். வயம்ப பல்கலைக்கழகத்தில் நேற்று திங்கட்கிழமை (03) நடைபெற்ற தேசிய தொழில்நுட்பக் கல்லூரியை அதிகாரப்பூர்வமாக கையளிக்கும் தேசிய விழாவில் பங்கேற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே […]

சமூகத்தை மீட்டெடுக்க மகா சங்கத்தினரின் ஆதரவும் அவசியம் – ஜனாதிபதி

கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக தொடர்பு இருப்பதாகவும், சமூகத்தை மீட்டெடுக்க பிக்குமாரின் பங்களிப்பு இந்த சமூகத்திற்கு மீண்டும் அவசியம் என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எதிர்கால தலைமுறையை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற மகா சங்கத்தினர் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் களனி வித்யாலங்கார சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (02) பிற்பகல் நடைபெற்ற ‘யெலசிய அபிமன்’ நினைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 1875 […]

ஊழல்; அரச பொறியியல் கூட்டுத்தாபன நிர்வாக பணிப்பாளர் கைது

ஊழல் குற்றச்சாட்டில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் சரத்சந்திர குணரத்ன ஜயதிலக கைது செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான “சிரிகொத்தா”வை புதுப்பிக்க, அரச பொறியியல் கூட்டுத்தாபன ஊழியர்கள் மற்றும் வளங்களைப் பயன்படுத்துவதற்கு முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் அனுமதித்ததற்காக, லஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் இன்று ஜெயதிலக்கவை கைது செய்தனர். இந்த நடவடிக்கையால் மாநகராட்சிக்கு ரூ.1,667,294.87 நிதி இழப்பும், அரசியல் கட்சிக்கு தேவையற்ற நன்மையும் ஏற்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்தது. […]

நாட்டில் வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை அதிகரிபக்கின்றது!

இலங்கையில் வைத்திய நிபுணர்களுக்கு பாரிய பற்றாக்குறை நிலவுவதாகவும், பொது மருத்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை திருப்திகரமாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் II துணை இயக்குநர் டாக்டர் அர்ஜுன திலகரத்ன,இது தொடர்பில் விளக்கமளித்த போது, வைத்திய நிபுணர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 2,800, ஆனால் தற்போது 2,000 வைத்திய நிபுணர்களே உள்ளனர்.வெளிநாட்டுக்கு சொல்வோர் குறைந்து விட்டது என்று நினைக்கிறேன். இப்போது திரும்பி வரத் தொடங்கியுள்ளனர் என்று அவர் கூறினார். சில பகுதிகளில் […]

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான அமைவு குறித்த கள ஆய்வு

மண்டைதீவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான யோசனைகள் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக முன் வைக்கப்பட்டு மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மண்டைதீவில் மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டி , அதன் ஆரம்பப் பணிகளை மேற்கொண்டார். இதனையடுத்து குறித்த பகுதி பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலப் பகுதி, வலசை பறவைகள் வந்து தங்குமிடம் எனவும் , மைதானம் […]

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் நுழையாதிருக்க நடவடிக்கை வேண்டும் – கடற்றொழிலாளர் இணைய ஊடக பேச்சாளர்

இலங்கை கடல் பரப்பில் கடற்படையினால் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு பலப்படுத்தினாலும் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழையாது இருக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை […]

சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐ.நா சாசனத்தில் இலங்கை கைச்சாத்து

ஐக்கிய நாடுகள் சபையின் சைபர் குற்றங்களுக்கு எதிரான சாசனத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது. இதன்மூலமாக தெற்காசிய நாடுகளில் குறித்த சாசனத்தில் கையொப்பமிடும் இரண்டாவது நாடாகவுள்ள இலங்கையின் சார்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருண தனபால ஆவணத்தில் கையெழுத்திட்டார். இச்சாசனத்தில் இணைந்து கொண்டதன் ஊடாக, ஐக்கிய நாடுகள் சபையின் சைபர் குற்றங்களுக்கு எதிரான சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட ஏனைய 72உறுப்பு நாடுகளுடன் இணைந்து கொள்கின்றது. இச்சாசனத்தில் கையொப்பமிடுவதன் மூலமாக சைபர் குற்றங்களுக்கு எதிரான […]

காற்றாலை விசையாழியை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

திருகோணமலை சீனக்குடா துறைமுகத்தில் இருந்து, மன்னாருக்கு காற்றாலை விசையாழியை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. சீனக்குடா துறைமுகத்தின் வெளிப்புற வாயில் அருகே இந்தப் பாரஊர்தி கவிழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக, துறைமுக வளாகத்திற்குள் அமைந்துள்ள விகாரை ஒன்றும் மற்றும் கொள்கலன் கட்டிடம் ஒன்றும் பலத்த சேதத்துக்கு உள்ளானதோடு, சாரதி மற்றும் ஒருவரும் சிறு காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.