ஆங்கில புலமை இல்லை; 7000 டிரைவர்கள் வேலை இழப்பு

அமெரிக்காவில் ஆங்கில புலமை இல்லை என்று கூறி, 7,000 லாரி டிரைவர்களை நீக்கி அந்நாட்டு போக்குவரத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். விசா கட்டுப்பாடுகள், குடியேற்ற விதிகள் என பல கெடுபிடிகளை காட்டி வரும் நிலையில், லாரி டிரைவர்களுக்கான விசா வழங்குவதும் சமீபத்தில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே விபத்துகள் அதிகரிப்பதாகக் கூறி, ஆங்கிலத்தில் பேசுவது, படிப்பதை அமெரிக்க அரசின் போக்குவரத்துத் துறை கட்டாயமாக்கியது. […]

உடையார்கட்டு பகுதியில் துப்பாக்கியுடன் குடும்பஸ்தர் கைது

முல்லைத்தீவு- உடையார்கட்டு பகுதியில் சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சட்டவிரோத இடியன் துப்பாக்கியை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தரை கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் இருட்டுமடு பகுதியில் வசிக்கும் 46 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் […]

இலங்கைத் தமிழரசுக் கட்சி விசேட மத்திய செயற்குழுக் கூட்டம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை(5) புதன்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்குரிய நகர்வுகள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன. அதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், தேசிய மக்கள் சக்தி […]

இலங்கையில் உள்ள மீனவர்களை வீடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கை வசம் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகையில், நவம்பர் 3 ஆம் திகதி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கைக் கடற்படையினர், அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் சிறைபிடித்துள்ளனர். மீனவர்களின் […]

விசேட சுற்றிவளைப்பில் 638 பேர் கைது!

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய. நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (03) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 28,389 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 638 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக பதிவாகியுள்ளது அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 209 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 137 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மதுபோதையில் வாகனம் […]

கேப்பாபிலவு படைமுகாமில் இராணுவ வீரர் மரணம்!

முல்லைத்தீவு- கேப்பாபிலவு பகுதியில் நிலைகொண்டுள்ள படைமுகாமில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கேப்பாபிலவில் அமைந்துள்ள 59 ஆவது படைத் தலைமையத்தில் கைவிடப்பட்ட பகுதி ஒன்றில் தூண் இடிந்து வீழ்ந்ததில் மூன்று இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்த இராணுவ வீரார்கள் இராணுவத்தினரின் காவு வண்டி ஊடாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு இராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவரும் சிகிச்சை பெற்று […]

தமிழ்த் தேசியத்தைச் சிதைப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடக்கின்றன…

அரசியல் சூழல் மிகவும் வித்தியாசமானது சமத்துவம் என்ற போர்வையில் தமிழ்த்தேசியத்தைச் சிதைப்பதற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார். மட்டக்களப்பு பாலமீன்மடுவைச் சேர்ந்த அருணன் தமிழீழனின் முள்ளியில் தொலைந்த முகவரிகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கதிரவன் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டு, நூல் அறிமுகவுரையினை, நயவுரையினை அன்பழகன் குரூஸ் நிகழ்த்தியதுடன் நூலாசிரியர் அறிமுகத்தினை கலைவேந்தன் நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து நாடாளுமன்ற […]

மனைவியின் இறுதி சடங்கில் உயிரிழந்த கணவன்

கேகாலை பகுதியில் மனைவியின் இறுதி சடங்கின் போது கணவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 77 வயதான குணதாச அதிகாரி ஆராச்சி என்ற கேகாலை புனித மேரி பெண்கள் கல்லூரியில் ஆசிரியரும், 76 தலதா விஜேரத்ன என்ற எழுத்தாளருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இருவரும் இளம் வயதிலேயே காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். அந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் இந்த தம்பதி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தனர். மனைவியின் உடல்நிலை பாதிப்பு காரணமாக இருவரும் இலங்கைக்குத் […]

போதைப்பொருட்களுடன் குடும்பஸ்தர் கைது

நிந்தவூரில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் (32 வயது) அல் மஸ்ஹர் வீதியில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் சந்தேகநபரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான […]

பிரித்தானியாவில் இடம்பெற்ற கேக் போட்டியில் கலந்துகொண்ட முதல் ஈழத்தமிழர்

2025இற்கான Cake International competition நிகழ்வானது கடந்த 31ஆம் திகதி முதல் நேற்று வரை பிரித்தானியாவிலுள்ள பேர்மிங்கம் நகரிலுள்ள National Exhibition centre (NEC)இல் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் 7000 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பல பிரிவுகளிலும் கலந்து கொண்டுள்ளனர். 1994ஆம் ஆண்டு International Craft & Hobby Fair Ltd என்ற நிறுவனம் Cake Established என்ற பெயரில் தொடங்கப்பட்டு 1996ஆம் ஆண்டு Cake International (CI) ஆக சர்வதேச அளவில் விரிவாக்கியது. பின்னர் 2000 […]