சிவகார்த்திகேயனின் 25வது படமாக வருகிறது ‘பராசக்தி’
‘பராசக்தி’ படக்குழு வெளியிட்டுள்ள மரண மாஸ் அறிவிப்பு.. மிரட்டலான சம்பவத்துக்கு ரெடி எஸ்கே நடிப்பில் சமீபத்தில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ ரிலீசானது. இதனையடுத்து சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், ‘பராசக்தி’ அப்டேட் குறித்து அறிவிப்பு ஒன்றினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சிவகார்த்திகேயனின் 25வது படமாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது ‘பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கி வரும் இந்தப் படத்துக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருக்கிறது. […]
பூஜா ஹெக்டே தனுஷ் ஜோடியாக
தனுஷ் அடுத்தடுத்து நான்கு படங்களை கைவசம் வைத்துள்ளார். D54 (பெயரிடப்படாததால் D54 என அழைக்கப்படுகிறது). இப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் D55 படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பூஜா ஹெக்டே பீஸ்ட், கூலி படங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் கதை, நமது சமூகத்தில் கவனிக்கப்படாமல் விடப்படும், நமது அன்றாட வாழ்க்கைக்கு […]
23 மில்லியன் செலவில் வவுனியாவில் வீதி காப்பற் இடும் பணி
வவுனியா, புளியங்குளம் – பரசங்குளம் புதிய வீட்டுத்திட்ட கிராம வீதிக்கான காப்பற் இடும் பணியினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனால் நேற்றையதினம்(3) ஆரம்பித்து வைக்கப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தினால் கிராமப்புற வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைவாக 23 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 810 மீற்றர் தூரத்திற்கான புளியங்குளம் – பரசங்குளம் வீதியானது காப்பற் இடும்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஜெகதீஸ்வரன், […]
தமிழ் முற்போக்குக் கூட்டணி பேரணியில் பங்கேற்காது!

நவம்பர் 21 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி பேரணியில் தனது கட்சி பங்கேற்காது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் பேசிய எம்.பி. கணேசன், சில காரணங்களால் டி.பி.ஏ பேரணியில் பங்கேற்காது என்று கூறினார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முடிவு குறித்து தனக்கு உறுதியாக தெரியவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் […]
களனிப் பல்கலைக்கழகத்தில் ‘பங்கேற்பு ஜனநாயகம்’

களனிப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் அரசியல் விஞ்ஞானத் துறை மற்றும் ஆஃப்ரியல் இளைஞர் வலையமைப்பு ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்புடன் நடத்தப்படும் ‘பங்கேற்பு ஜனநாயகம்’ தொடர்பான சான்றிதழ் கற்கை நெறி ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில், கற்கைநெறிக்காகத் தெரிவு செய்யப்பட்ட இளம் அரச கிராமிய கள அதிகாரிகளுக்குத் தலா 40,000 ரூபா பெறுமதியான 100 முழு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஆதரவுடன் நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் […]
பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு
இலங்கை பாலின மற்றும் பாலியல் சார்ந்த அடையாளங்களைக் கொண்ட மக்களை (LGBTQ )உரிமை ஆர்வலர் சானு நிமேஷா, (LGBTQ) சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சு தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய சானு நிமேஷா, பாலின மற்றும் பாலியல் சார்ந்த அடையாளங்களைக் கொண்ட சமூகத்திற்கு எதிராக ஊடகங்கள் மூலம் கடுமையான வெறுப்புப் பேச்சு வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறினார். “அவர்களிடம் பேசுவதற்கு வேறு எதுவும் இல்லாததால், அவர்கள் இப்போது பாலின மற்றும் பாலியல் சார்ந்த அடையாளங்களைக் கொண்ட […]
பாடசாலை நேரத்தை அதிகரிப்பதாயின் அடிப்படைக் காரணி வேண்டும்
பாடசாலை நேரத்தை 30 நிமிடத்தால் அதிகரிப்பது குறித்து கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும். கல்வி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இது குறித்து நாம் கேள்வியெழுப்புவோம். அரசாங்கம் தன்னிச்சையாக எடுக்கும் அனைத்து தீர்மானங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை நேரத்தை 30 நிமிடத்தால் அதிகரிப்பது குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய கருத்து வெளியிட்டிருக்கின்றார். தொழிற்சங்கங்கள் […]
இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி வருகிறோம் – கனடா பிரதமர்
இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி வருகிறோம்,’ என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக கனடா வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையான நிலையில், அந்நாட்டுடன் அனைத்து விதமான வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த நிலையில், கனடா உலகின் பிற நாடுகளுடனான புதிய உறவை கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்தியாவுடனான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். […]
நைஜீரியாவில் இனப் படுகொலை நடக்கவில்லை
நைஜீரியாவில் ஒரு திட்டமிட்ட கிறிஸ்துவ இனப்படுகொலை நடப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிய குற்றச்சாட்டை, அந்நாடு நிராகரித்துள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், திட்டமிட்ட கிறிஸ்துவ இனப்படுகொலை நடப்பதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், இதை தடுக்க தவறினால், அந்நாடு மீது போர் தொடுக்க தயாராக இருக்குமாறு அமெரிக்க போர் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அனைத்து மதத்தினரும் எங்கள் நாட்டில் சமமாக நடத்தப்படுகின்றனர். எந்தவொரு குறிப்பிட்ட மதத்தவர் மீது இனப்படுகொலை எதுவும் மேற்கொள்ளவில்லை. […]
வெடி மருந்து ஆலை அமைக்க ஜெர்மன் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
‘நேட்டோ’ எனப்படும் ராணுவ பாதுகாப்பு அமைப்பின் உறுப்பு நாடான ருமேனியா, ஜெர்மனியின் ‘ரெய்ன்மென்டால்’ நிறுவனத்துடன் இணைந்து வெடி மருந்து ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ருமேனியா, மற்றொரு ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளரான ரெய்ன்மென்டால் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து, மத்திய ருமேனியாவில் உள்ள விக்டோரியா நகரில் வெடி மருந்து ஆலை ஒன்றை கட்டமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஆலை, 5,420 கோடி ரூபாயில் அமைகிறது. வரும் 2026ல் இந்த ஆலைக்கான […]