தலவாக்கலை விபத்து ; சாரதிக்கு தடுப்பு காவல்

தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற விபத்து தொடர்பாக மஹேந்திரா பொளேரோ கெப் ரக வாகன சாரதியை எதிர்வரும் 11ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். தலவாக்கலை நகர மத்தியில் தீபாவளி தினத்தன்று அதிகாலை பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது மஹேந்திரா பொளேரோ கெப் ரக வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்து நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த […]

காற்றாலை திட்டம் இடைநிறுத்தம்

மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

வாழ்க்கைச் செலவு நெருக்கடி; கனடாவில் உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவில் உணவு வங்கிகளைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மற்றுமொரு புதிய சாதனையை எட்டியுள்ளதாக வருடாந்த ‘Hunger Count’ அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உணவு வங்கிகளை நாடிச் செல்வோர் எண்ணிக்கை தற்போது இரட்டிப்பாகியுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் பல கனேடியர்கள் போராடி வருவதையே இந்த எண்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்த ‘Food Banks Canada’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டின் […]

வாழ்க்கைச் செலவு அதிகம்: டொரன்ரோ நகரங்களில் வாழ்வதற்கு மக்கள் சிரமம்

டொரன்ரோ பகுதி மற்றும் ரொரன்ரோ நகரவாசிகளில் 85 சதவீதமானோர், தமது நகரங்களில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் அதிக செலவாக இருப்பதாகக் கருதுவதாக புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவித்துள்ளது. Canada Pulse Insights நிறுவனம் நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பு, ரொரன்ரோ மற்றும் GTA பகுதி மக்கள் தற்போது எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதில், டொரன்ரோவில் வசிக்கும் 59 சதவீதமானோரும், GTA பகுதியில் வசிக்கும் 65 சதவீதமானோரும் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி […]

மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண்!

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, டார்லிங்டன் (Darlington) பகுதியில், கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) நகர சபைக்கு மிலானி தியாகராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்வெற்றியுடன், கியூபெக், மொன்றியலில் தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் அரசியல்வாதி என்ற வரலாற்று மைல்கல்லை அவர் நாட்டினார். கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) பகுதியில் பிறந்து வளர்ந்த மிலானி தியாகராஜா, இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட லிங்கராஜா தியாகராஜா (சட்டத்தரணி – இலங்கை […]

மக்கள் போராட்ட கூட்டணியின் தலைவர் துமிந்த நாகமுவவின் இரகசிய தகவல்

நுவரெலியாவில் பிரபல நான்கு வியாபாரிகள் தொடர்பில் அரசுக்கு தகவல் வழங்குவதாக மக்கள் போராட்ட கூட்டணியின் தலைவர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். மக்கள் போராட்டக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய போதே இதனை தெரிவித்தார். அந்த நான்கு வியாபாரிகளின் பெயர்களை வெளியிட்ட அவர், அரசாங்கம் அவர்களுக்கு எதிராக சட்டத்தை வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நான்கு வியாபாரிகள் யார். இஷார நாணயக்கார, தம்மிக்க பெரேரா, சேன யக்தெனிய, ஹாரி ஜெயவர்தன […]

வடக்கு, கிழக்கில் அலங்கார மீன் உற்பத்தி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அலங்கார மீன் உற்பத்தி தொழில்துறையை ஆரம்பித்து, அதனை நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சவால்கள் மற்றும் எதிர்நோக்கிய வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கலந்துரையாடல் நடத்தியுள்ளார். கொழும்பு பாதுக்கவில் அமைந்துள்ள ஹரித்த அலங்கார மீன் உற்பத்தி பண்ணைக்கு அமைச்சர் சென்றிருந்தார். அங்கு அலங்கார மீன் உற்பத்தியை பார்வையிட்டதோடு, கலந்துரையாடலிலும் ஈடுப்பாட்டர். இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச, அலங்கார மீன் உற்பத்தி […]

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் புதுடெல்லியில்…

எதிர்க்கட்சித் தலைவர் நேற்று சஜித் பிரேமதாச புதுடெல்லியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பைச் சந்தித்து முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திங்கட்கிழமை (03) புதுடெல்லியில் இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry – CII) சிரேஷ்ட அதிகாரிகள் பலருடன் கலந்துரையாடினார். 1895 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்தியத் […]

DC திரைப்படம் லோகேஷ் கனகராஜின் பெரும் நம்பிக்கை

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் தான் DC. இப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியான நிலையில் இப்படத்தின் மீது லோகேஷ் கனகராஜ் மாபெரும் அளவில் நம்பிக்கை வைத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றது. அந்த நம்பிக்கைக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படத்தின் அறிவிப்பு நேற்று ஒரு வீடியோவின் மூலம் வெளியிடப்பட்டது. அருண் மாதீஸ்வரன் இயக்கும் இப்படத்திற்கு DC என பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தை சன் நிறுவனம் […]

வேகமெடுக்கும் ஜனநாயகன் திரைப்படம்

ஜனநாயகன் திரைப்படத்தின் சிங்கிள் பாடலை விஜய்யிடம் படக்குழு போட்டு காண்பித்துள்ளனர். பாடலை கேட்டுவிட்டு விஜய் சொன்ன விஷயம் பற்றிய தகவல் தற்போது கிடைத்திருக்கின்றது. விஜய் நடிப்பில் உருவாகும் ஜனநாயகன் திரைப்படத்தின் சிங்கிள் பாடல் மிக விரைவில் ரசிகர்களுக்காக வெளியாகவுள்ளது. தீபாவளியை முன்னிட்டே ஜனநாயகன் பாடல் வெளியாகவிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அப்போது இப்படத்தின் பாடல் வெளியாகாமல் போய்விட்டது. இதைத்தொடர்ந்து நவம்பர் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் இப்படத்தின் சிங்கிள் பாடல் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் […]