தலைமன்னாரில் இந்தியாவிலிருந்து தப்பி வந்தவர்கள் கைது

அவுஸ்திரேலிய முதலீட்டாளரை ஏமாற்றி 180 மில்லியன் ரூபாய் மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் இந்தியாவில் இருந்து கடல் வழியாக மீண்டும் நாட்டிற்குள் நுழையும் போது கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை படகு மூலம் கொண்டு வந்த தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களில் முக்கிய சந்தேக நபர் மன்னார் முருங்கன் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்பதுடன்,அவர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையின் வணிகக் […]

கத்தோலிக்க திருச்சபை மத மற்றும் சமூக நல்லுறவில் முக்கிய பங்கு வகித்துள்ளது

கத்தோலிக்க திருச்சபை இலங்கையின் மத மற்றும் சமூக நல்லுறவில் முக்கிய பங்கு வகித்துள்ளதுடன், குறிப்பாக மோதலுக்குப் பிந்திய சூழலில், சேதங்களைக் கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். வத்திக்கானின் வெளிவிவகார அமைச்சர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்தார். இதனையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இருதரப்பு ஊடகசந்திப்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் […]

விசேட சுற்றிவளைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்

விசேட அதிரடிப்படைக்கு 100 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகள் கொள்வனவு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விசேட அதிரடிப் படையின் கீழ் நாடளாவிய ரீதியில் 76 பிரதான முகாங்களும், 23 உப முகாங்களும் 14 விசேட பிரிவுகளும் செயற்பட்டு வருகின்றன. குறித்த படையணிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளை மேற்கொள்வதற்கு தற்போதுள்ள 314 மோட்டார் சைகக்கிள்களில் 90சதவீதமானவை 10 வருடங்களுக்கு மேல் பழையவையாக இருக்கின்றமையால் தொடர்ச்சியாக இயந்திரக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இந்நிலைமையால் விசேட அதிரடிப் படையால் மேற்கொள்ளப்படுகின்ற விசேட […]

ஆமைகளுடன் இளைஞன் கைது!

தம்பலகாமம்- கோவிலடி பகுதியில் சட்டவிரோதமாக ஆமைகளைக் கடத்த முயன்ற இளைஞன் ஒருவரை கந்தளாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(3) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் ஆமைகளை சுற்றுலா விடுதிகளுக்குப் பணத்திற்காக விற்று வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கந்தளாய் பிரிவு குற்றவியல் பிரிவினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், சந்தேக நபர் வைத்திருந்த ஆறு ஆமைகளை பொலிஸார் மீட்டனர். மீட்கப்பட்ட ஆமைகளில் மூன்று பால் ஆமைகள் மற்றும் மூன்று கல் ஆமைகள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது […]

வடக்கு ஆளுநர் தீர்வு தர வேண்டும் நறுவிலிக்குளம் கிராம மக்கள் கோரிக்கை

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் பல வருடங்களாக தீர்க்கப்படாமல் உள்ள காணிப் பிரச்சினைக்கு வடக்கு மாகாண ஆளுநர் விரைவாக நடவடிக்கை எடுத்து தீர்வு பெற்றுத் தர வேண்டும் என்று அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள நறுவிலிக்குளம் சித்த வைத்தியசாலைக்கு முன் பக்கமாக உள்ள அரச காணியினை நறுவிலிக்குளம் கிராமத்தில் புதிதாக திருமணம் முடித்த குடும்பத்தினர்களுக்கு வழங்குமாறு பல வருடங்களாக வேண்டுகோள் விடுத்தும் தமது கோரிக்கை […]

மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் விபத்து; இளைஞன் உயிரிழப்பு!

மித்தெனிய – வலஸ்முல்ல வீதியில் கரமெட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 24 வயதுடைய இளைஞன் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகைள […]

அம்பலாங்கொடை துப்பாக்கிதாரிகள் பயணித்த கார் கண்டுபிடிப்பு!

காலியில் அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது துப்பாக்கிதாரிகள் பயணித்ததாக கூறப்படும் கார் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் காரில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வர்த்தகர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட […]

மாவீரர்களின் படங்களை பயன்படுத்தினார்; சிறீதரன் எம்.பியின் சாரதி கைது

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சாரதியும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமாகிய பாரதிதாசன் எழில்வேந்தன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் வார நிகழ்வுகளின் போது மாவீரர்களின் படங்களை பயன்படுத்தியதாக எழில்வேந்தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் மீது கிளிநொச்சி பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, பாரதிதாசன் எழில்வேந்தன் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் நேற்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். மாவீரர் […]

பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகும் ஜொனதன் ட்ரொட்

2026 இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது மார்ச்சில் முடிவடைவதுடன் ஆப்கானிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் ட்ரொட்டின் பதவிக்காலம் முடிவடைவதாக ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ட்ரொட் 2022 ஜூலையில் பதவியேற்றிருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் முதற் தடவையாக அரையிறுதிப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் முன்னேறியிருந்தது. அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரக இருபதுக்கு – 20 தொடரானது ஐ.எல்.டி20 தொடரின் கல்ஃப் ஜையன்ட்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ட்ரொட் […]

டிசம்பர் முதலாம் வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக வேலை நிறுத்த போராட்டம்?

பாடசாலை நேரத்தை நீடிப்பது தொடர்பில் எடுத்திருக்கும் தீர்மானத்தை மாற்றுவதற்கு எதிர்வரும் 7 ஆம் திகதிவரை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதாக தெரிவித்துள்ள ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி, அந்த காலத்துக்குள் மாற்றாவிடின், டிசம்பர் முதலாம் வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த கூட்டணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, அந்த கூட்டணியின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டு முதல், பாடசாலை […]