இந்தியர் மீது கனடா உணவகத்தில் தாக்குதல்?
கனடாவில் உள்ள ஹோட்டலில் இந்தியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சமீபகாலமாக கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. தற்போது, மெக்டொனால்ட் உணவகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், இனவெறி கருத்துக்களைக் கூறிக்கொண்டே இந்தியர் மீது ஒரு நபர் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வசித்து […]
முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் சேவை நீடிப்பு குறித்து அரசாங்கத்தின் பதில்…
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தனக்கான சேவை நீடிப்பு வழங்கப்படாமை குறித்து முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கவலை வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் இன்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் […]
மீண்டும் திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நடிகை திரிஷா, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் மணிரத்னம் வீடுகளுக்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில், “சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரிஷா வீடு, அண்னாநகர் பகுதியில் உள்ள விஷால், மணிரத்னம் வீடுகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து காவலர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அங்கு வெடிகுண்டுகள் ஏதும் இல்லாததால் இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. […]
இளம் குடும்ப பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை

வவுனியா- பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (04.11) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த […]
உள்ளக வீதிச் சீரமைப்புப் பணிகளை விரைவில் ஆரம்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்து
மன்னார் – சிவாவத்துறை பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட காயாக்குழி கிராமத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 8.7 கிலோமீற்றர் தூரமான உள்ளகவீதிச் சீரமைப்புப்பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதால் மக்கள் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த சீரமைப்புப்பணிகளை விரைந்து ஆரம்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். சிலாவத்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று திங்கட்கிழமை (03) இடம்பெற்ற நிலையில் குறித்த கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவ்வாறு வலியுறுத்தினார். இந்நிலையில் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள குறித்த […]
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையில் கல்வி ஒத்துழைப்பு ஒப்பந்தம்

இலங்கைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கிடையில் கல்வி ஒத்துழைப்புக்களை நோக்காகக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2025.11.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை (4 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கைப் பல்கலைக்கழகங்களை உலகத் தரப்படுத்தல் சுட்டிகளுக்கு மேம்படுத்தல் மற்றும் சர்வதேசமயப்படுத்துவதற்காக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் உயர்கல்வி ஒத்துழைப்புக்களை ஏற்படுத்தும் நோக்கில் கீழ்வரும் புரிந்துணர்வு […]
வட்டுக்கோட்டையில் பலர் கைது!

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு இடங்களில், பல வகையான போதைப்பொருட்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களாக வெவ்வேறு இடங்களில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இவ்வாறான கைதுகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஏனையோர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கடற்படைக்கு செய்மதி தொடர்பாடல் இடைமறிப்பு அமைப்பு

இலங்கை கடற்படைக்கு செய்மதி தொடர்பாடல் இடைமறிப்பு கட்டமைப்பைப் பெற்றுக் கொள்வதற்காக போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துடனான இறுதிப் பயனர் மற்றும் ஒப்படைத்தல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 25.11.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 4 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் அரசின் நிதி மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு மற்றும் […]
புளியம்பொக்கனை நாகேந்திரா வித்தியாலயத்தின் முன்பாக கவனயீர்ப்பு

கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட புளியம்பொக்கனை நாகேந்திரா வித்தியாலயத்தின் முன்பாக பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்றையதினம்(4) முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் நடாத்தப்பட்டது. மேலும் ,வலயக்கல்வி அதிகாரிகள் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் சாணக்கியனுக்கு தொலைபேசி அழைப்பு…

உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்நதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “இலங்கையில் யார் அமைச்சர்களாக இருக்கின்றார்கள் என்பது எங்களுக்கே தெரியாத நிலையில் அவர்களுக்கான அச்சுறுதல் என்பது இருப்பதற்கான வாய்ப்பில்லை. யார் அமைச்சர்களாக உள்ளார்கள் என்பதை அவர்கள் எழுதி ஒட்டிக்கொண்டே இனிவரும் காலங்களில் வரவேண்டும். இல்லாது விட்டால் யார் அமைச்சர்கள் என்பதை தெரியாத நிலையே உள்ளது” என […]