மல்வத்து மகாநாயக்க தேரரின் மருமகன்‌ கைது?

மல்வத்து மகாநாயக்க தேரரின் மருமகன் என்று பொய் கூறி அடையாள அட்டை பெற முயன்ற நபரை, கண்டி தலைமையகப் பொலிஸின் குற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நேற்றையதினம் (02.11.2025) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நால்வர் ஹெரோயினுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டடனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். பின்னர் பிரதான சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரிய நிலையில் […]

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அமைச்சர்…

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டிருந்தாலும், இந்த வருட நிறைவுக்குள் தீர்மானம் எடுக்க முடியாது என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்தார். மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவ்விக்கையில், மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான உரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. இதுவொரு […]

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் நேற்றையதினம் (02) மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழு உறுப்பினர்கள், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தபிசாளர் அனோஜன், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவீரர்களின் உறவினர்கள் என பலரும் இணைந்து துயிலும் இல்ல வளாகத்துக்கு சென்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதையடுத்து சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பணிக்குழு தொடர்பான கலந்துரையாடல் […]