புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் சவாலான பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட ஆதரவு!

புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் சவாலான பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அரசாங்கம், அதிகாரிகள் மற்றும் மக்கள் இணைந்து செயல்பட்டால் தீர்க்க முடியாது என்ற பிரச்சினை எதுவும் இல்லை என்று அவர் மேலும் கூறினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா மற்றும் ஏறாவூர் வலயக் கல்வி அலுவலகங்களுக்குச் சென்றபோது, ​​கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களைச் சந்தித்து 2026 சீர்திருத்தங்களுக்கான தயாரிப்புகள் குறித்து […]

மட்டக்களப்பு கிரான் பகுதியில் புதிய அரசியல் கட்சி!

மட்டக்களப்பு கிரான் பகுதியில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில், பெரும்பாலான முன்னாள் போராளிகள், முன்னாள் தளபதிகள் மற்றும் தேசிய உணர்வாளர்கள் இணைந்து புதிய கட்சியின் தலைமையகத்தை நிறுவுவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். மாவீரர் வாரத்தை முன்னிட்டு குறித்த கட்சியை தேசிய அரசியல் கட்சியாக அங்குரார்ப்பணம் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. இதனிடையே, கட்சியின் தலைமைச் செயலகத்தை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. தமிழர் ஐக்கிய […]

வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை பிரபாகரன் மீண்டும் அழைத்தார் – செல்வின்!

வடக்கில் இருந்து வெளியேற்றிய முஸ்லிம் மக்களை மீண்டும் வடக்கில் குடியேற வருமாறு பிரபாகரன் அழைப்பு விடுத்ததாக செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை தெரிவித்துள்ளார். வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 35 வருட நிறைவை நினைவுகூரும் முகமாக, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கையொப்பமிட்ட ஒரே […]

ஆசிய ஜூனியர் தடகள அணி நேற்று நாடு திரும்பியது

பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய ஜூனியர் தடகளப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கை அணி ஒரே போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், வெள்ளி மற்றும் 05 வெண்கலப் பதக்கங்களையும், ஒட்டுமொத்த போட்டியில் 7 பதக்கங்களையும் வென்றது. ஆசிய பிராந்தியத்தில் 45 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். அங்கு லஹிரு அச்சித வீரர் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.

புதிய வரலாறு படைத்தது இந்தியப் பெண்கள் அணி

இந்திய பெண்கள் அணி முதன்முறையாக உலக கோப்பை வென்று புதிய வரலாறு படைத்தது. ஷைபாலி வர்மா (87), தீப்தி சர்மாவின் (58 ரன், 5 விக்கெட்) அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, பைனலில் 52 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழையால் போட்டி 2 மணி நேரம் தாமதமாக துவங்கியது. ஓவர் குறைக்கப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் லாரா வால்வார்ட் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷைபாலி வர்மா ஜோடி நல்ல […]

எம்.பி.க்கள் எழுத்து மூலம் கோரிக்கை வைக்கலாம்!

பாராளுமன்ற உறுபினர்களுக்கு பாதுகாப்புக்கு தற்போதுள்ள அச்சுறுத்தல்களை ஆராய்ந்த பிறகு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால், அவர்கள் எழுத்துப்பூர்வ கோரிக்கையை வைக்கலாம் என்று பொலிஸ் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, தற்போதுள்ள அச்சுறுத்தல்களை ஆராய்ந்து, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்தால், அந்த பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுபினர்கள் குழுவும் தங்கள் பாதுகாப்பிற்காக ஒரு கைத்துப்பாக்கியை வழங்குமாறு கோரியுள்ளமை […]

மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவை குறைபாடுகள்

மாகாணங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து சேவைகளை ஆய்வு செய்வதில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து ஆணையகத்தின் கணக்காய்வு அறிக்கையில் இந்த குறைப்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. குறித்த அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆணையகம், சுமார் 3,200 பயணிகள் சேவைகளுக்கு அனுமதிகளை வழங்கியது. இருப்பினும், 1,515 பேருந்துகள் மட்டுமே, அதாவது சுமார் 47 வீதமாக பேருந்துகள் மாத்திரமே, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் தர ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், பேருந்துகளில் […]

உயர்தர பரீட்சையை முன்னிட்டு; பாடசாலை விடுமுறை

உயர்தர பரீட்சையை முன்னிட்டு 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதற்கமைய டிசம்பர் 8ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை (G.C.E A/L Exam) முன்னிட்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது இந்நிலையில் டிசம்பர் 8 ஆம் […]

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் நட்புறவை கட்டியெழுப்பும் கலந்துரையாடல்

வடக்கு, கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் நட்புறவை கட்டியெழுப்பும் கலந்துரையாடல் யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இடம்பெற்றது. வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 35 வருட நிறைவை நினைவுகூரும் முகமாக குறித்த கலந்துரையாடலில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல், வடக்கில் இருந்து வெளியேற்ற முஸ்லிம்கள் மீண்டும் தமது பிரதேசங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்களிடம் நல்லதொரு உறவுப் பாலத்தை கட்டியெழுப்புவதற்கு முஸ்லிம் மக்கள் தயாராக இருக்கின்ற நிலையில் […]

யுத்தம் முடிந்து இவ்வளவு வருடங்களாகியும் இதுவரை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை

யுத்தம் முடிந்து இவ்வளவு வருடங்களாகியும் இதுவரை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் விருப்பைத் தீர்மானிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும். தமிழர்கள் தமது விருப்பை தாமே தீர்மானிக்க வேண்டும். குறித்த விடயங்களை முன் நிறுத்தி அவுஸ்திரேலியாவில் பொங்கு தமிழ் நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. இதற்கு உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து […]