ரஷ்யாவின் துறைமுகம் மீது உக்ரைன் தாக்குதல்

ரஷ்யாவின் கருங்கடல் கரையில் அமைந்துள்ள துவாப்ஸ் துறைமுகம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் துறைமுகப் பகுதியும் அங்கிருந்த எண்ணை கப்பலும் தீப்பிடித்து எரிந்துள்ளன. தாக்குதல் நடந்தவுடன் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும், துறைமுக கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. துவாப்ஸ் துறைமுகம், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை உலக சந்தைகளுக்கு அனுப்பும் முக்கிய மையமாகும். இந்த நிலையில், குறித்த தாக்குதல் ரஷ்யாவின் எண்ணெய் விநியோகத்தில் பெரும் […]

விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்; கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்த போது, சந்தேகநபரொருவரை அதிகாரிகள் கைது செய்தனர். இதன்போது, இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகள் சகிதம் அங்கு வந்த குழுவொன்று அதிகாரிகளைத் தாக்கி, சந்தேகநபரை விடுவித்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் […]

நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை வட பகுதி கடலில் 35 பேர் கைது

வட பகுதி கடலில் இந்திய கடற்றொழிலாளர்கள், சட்டவிரோத மீன்பிடி மற்றும் சட்டவிரோத பயணங்கள் தொடர்பாக 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையின் போது 3 இந்தப் படகுகள் உள்ளிட்ட நான்கு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும், அதற்குள் குறித்த சட்டவிரோத பயணத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் வர்த்தகர் உள்ளிட்ட குழுவினர் உள்ளடங்குகின்றனரா என்பது தொடர்பில் உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மக்களுக்கு எச்சரிக்கை

வெப்பமான வானிலை குறித்து இன்று (03) வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் வெப்பச் சுட்டியானது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மட்டத்தில் நிலவக்கூடும் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், நிழலான இடங்களில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் ‘ஏபெக்’ உச்சி மாநாடு

நடப்பாண்டுக்கான, 32வது ‘ஏபெக்’ எனப்படும், ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை கிழக்காசிய நாடான தென்கொரியா ஏற்று ஆண்டு உச்சி மாநாட்டை நடத்தியது. இதைத் தொடர்ந்து வரும், 2026ம் ஆண்டுக்கான தலைமை பொறுப்பை சீனா ஏற்றுக்கொண்டுள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள உச்சி மாநாடு சீனாவின் தென்பகுதியில் உள்ள ஷென்சென் நகரில் நடத் தப்படும் என அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஆசிய – பசிபிக் கூட்டமைப்பு உச்சி மாநாடு புறக்கணித்தார் டிரம்ப்; […]

மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் தீ; 23 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். மெக்சிகோவின் சோனோராவில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மக்கள் வழக்கம் போல் பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென தீப்பற்றிக் கொண்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஞானசார தேரரும் பாதுகாப்பு கோருகிறார்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் உறுப்பினர்கள் தன்னைக் கொல்லத் தயாராகி வருவதால், அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகள் இருவரின் பாதுகாப்பைக் கோரி கலகொட அத்தே ஞானசார தேரர் பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். தனது விஹாரைக்கு வந்த புலனாய்வு அதிகாரிகள், அச்சுறுத்தல் குறித்து தமக்குத் தெரிவித்ததாகவும் தேரர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலமாக நாட்டில் தோன்றியுள்ள உலகளாவிய பயங்கரவாதம் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து பல்வேறு வெளிப்படுத்தல்களால் பல தீவிரவாத நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் ஞானசார தேரர், இந்த சூழ்நிலையில் […]

ராஜஸ்தான் மாநிலத்தில் விபத்து – 15 பேர் பலி

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பலோடி மாவட்டத்தின் மடோடா பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிகானேர் மாவட்டத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனம் ஒன்றின் மீது மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததால் அங்கிருந்த பலர் உயிரிழந்தனர். அத்துடன், பலத்த காயமடைந்தவர்கள் விமானம் மூலம் ஜோத்பூர் […]

சம்பள மறுசீரமைப்பு; போராட்டத்துக்கு தயாராகும் நாடாளுமன்ற ஊழியர்கள்

சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் நிர்வாகம் மற்றும் சம்பள மறுசீரமைப்பு தொடர்பான குழு அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடாளுமன்ற ஊழியர்கள் வரவு செலவுத் திட்ட அமர்வு நடைபெறும் முக்கியமான காலகட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் உள்ள ஒன்பது திணைக்களங்களும் ஏற்கனவே சபாநாயகரிடம் தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையில், இந்தத் துறைகளில் பணிபுரியும் சுமார் 850 ஊழியர்களில் பெரும்பாலானோர் வேலைநிறுத்தம் செய்வது என முறைசாரா அளவில் உடன்பட்டுள்ளனர். நாடாளுமன்ற அனுபவம் இல்லாதவர்களால் […]

உலகக் கோப்பை கால்பந்து போட்டி; விளையாட விரும்புகிறேன்

48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி விளையாடுவாரா? அல்லது உடல்தகுதியை காரணம் காட்டி ஒதுங்கி விடுவாரா? என தொடர்ச்சியாக எழுந்த கேள்விகளுக்கு அவரே தற்போது விடை அளித்துள்ளார். 38 வயதான மெஸ்சி அளித்த ஒரு பேட்டியில், ‘உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவது […]