இலங்கையை சேர்ந்த சமூக ஊடகர் தாய்லாந்தில் கைது
தாய்லாந்தில் இலங்கையை சேர்ந்த சமூக ஊடக ஆர்வலர் சலியா டி. ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முன்னர் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிடுவதில் அவர் பெயர் பெற்றவராக இருந்த நிலையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரச வேலைக்காக 60,000 ஆட்சேர்ப்பு

அரச வேலைக்காக 60,000 ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். இந்த ஆட்சேர்ப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். முதல் கட்டமாக, நாடு தழுவிய சேவைகளுக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. பொது சேவைக்கான ஆட்சேர்ப்பு முறையான நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது முழுமையான சமூக வலைதளத் தடையை விதிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அதப்பத்து தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஏற்படும் கவனச் சிதறல்கள் வீரர்களின் ஒருமைப்பாடு மற்றும் தொழில்முறை அணுகுமுறையை பாதிக்கின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் தங்களது முழு கவனத்தையும் பயிற்சிக்கும், ஆட்டத்திற்கும் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். சில காலத்துக்கு சமூக வலைதளங்களிலிருந்து விலகி இருப்பது அவர்களின் கவனத்தை மீட்டெடுக்க […]
விஹாரைக்கு அருகில் பெண் பௌத்த துறவியை அச்சுறுத்திய இருவர் கைது

வத்தளை, கெரவலப்பிட்டியில் உள்ள ரத்தினாவலி விஹாரைக்கு அருகில் பெண் பௌத்த துறவி ஒருவரை வார்த்தைகளால் துன்புறுத்தியதாகவும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும் கூறி இரண்டு ஆண்களை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். 58 மற்றும் 67 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் வத்தளையை வசிப்பவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (02) இரவு நடந்ததாகவும், அது கெமராவில் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த காட்சிகள், சந்தேக நபர்கள் துறவியை வார்த்தைகளால் […]
மன்னாரில் கடல் அட்டைகள் பறிமுதல்…

மன்னார், மண்டபம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கிராம் கடல் அட்டைகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) காலை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அதனை மேல் விசாரணைக்காக மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்திய கடலோர காவல் படை மற்றும் மண்டபம் சுங்கத் துறையினர் இணைந்து தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மண்டபம் தோணித்துறை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி […]
கம்பளையில் கிளிநொச்சி கிருஷ்ணபுர மாணவியின் சடலம்!

கம்பளையில் உள்ள பெல்வுட் அழகியல் கல்வி நிறுவனத்தின் மாணவியின் மரணம் தொடர்பாக கலஹா பொலிஸார் முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அவரது உடல் சனிக்கிழமை மாலை விடுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. . இறந்த விதுஷன் நீதி, கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர். சக மாணவி ஒருவரின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டனர். கொழும்பில் நடைபெற்ற ஒரு தேர்வுக்கு வந்த பிறகு, அவர் கிருஷ்ணபுரத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று விடுதிக்குத் திரும்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. […]
வடமேல் மாகாண ஷொட்டோகன் கராத்தே போட்டி
வடமேல் மாகாண ஷட்டோகன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், புத்தளத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகமான பதக்கங்களை பெற்று சிறப்பான சாதனை புரிந்துள்ளனர். மாகாண மட்டத்திலான இந்த போட்டிகள் வென்னப்புவ சேர் அல்பட் பீரிஸ் உள்ளக விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை இடம்பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், வரவிருக்கும் தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். தேசிய மட்ட போட்டிகள் இம்மாதம் 23ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. மாகாண மட்டத்தில் வெற்றி […]
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்து உள்ளனர். ஆப்கானிஸ்தானில் இன்று (நவ., 03) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. வீடுகளில் உறங்கி கொண்டிருந்த மக்கள், […]
பாரம்பரிய சீன மருத்துவ முறைக் குளியல்
சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணம் ஹார்பின் நகரில் உள்ள ஒரு ரெசார்ட்டில் பாரம்பரிய சீன மருத்துவ முறைப்படி ஹாட்பாட் குளியல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 மீட்டர் விட்டமுள்ள ஒரு வட்ட வடிவ தொட்டியில் வெந்நீர் நிரப்பப்பட்டுள்ளது. அது பார்வையாளர்களைக் கவர்கிறது. ஒரு பிரிவு சிவப்பாகவும், மற்றொரு பிரிவு வெள்ளை நிறத்திலும் உள்ளது அந்த தொட்டியில் சிவப்புப் பக்கம் உள்ள தண்ணீரில் மிளகாய், கத்தரிக்காய், முட்டைக்கோஸ் ஆகியவை நிரப்பப்பட்டுள்ளன. வெள்ளை பக்கம் உள்ள பிரிவில் பால், சிவப்பு பேரீச்சம்பழம், […]
பனி படலத்தின் கீழுள்ள ஏரிகளை ஆய்வு செய்கிறது சீனா
அண்டார்டிகாவின் பரிணாம வளர்ச்சி மற்றும் இயற்கை வளங்களை ஆராய்வதற்காக சீனா தன் 42வது அண்டார்டிகா ஆய்வு பயணக்குழுவை நேற்று அனுப்பி வைத்தது. உலகின் மிக குளிர்ந்த கண்டமான அண்டார்டிகாவின் இயற்கை வளங்களை பல்வேறு நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. சீனாவும், அண்டார்டிகாவில் ஆய்வு செய்வதற்காக ஏற்கனவே ஐந்து ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளது.