இள வயதில் கோடீஸ்வர இந்திய வம்சாவளி நண்பர்கள்

இந்திய வம்சாவளி இளைஞர்கள் உள்பட அமெரிக்காவைச் சேர்ந்த 3 பள்ளி நண்பர்கள், ஸ்டார்ட்அப் மூலம் இளம் வயதிலேயே கோடீஸ்வரர்களாகியுள்ளனர். இதன்மூலம், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சாதனையை முறியடித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் ஜோஸில் உள்ள பள்ளியில் சூர்யா மிதா,22, ஆதர்ஷ் ஹைரேமத் ,22, ஆகிய இரு இந்திய வம்சாவளியினர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரென்டன் பூடி,22, பயின்று வந்தனர். இவர்கள் மூவரும், இணைந்து மெர்கோர் என்ற ஏஐ நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். போர்ப்ஸ் அறிக்கையின்படி, சான் […]

பாகிஸ்தானை எல்லைகளில் தொடர்ந்து போர்நிலையில் வைத்திருக்க இந்தியா திட்டமிட்டுள்ளது

“பாகிஸ்தானை கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் தொடர்ந்து போர்நிலையில் வைத்திருக்க இந்தியா திட்டமிட்டுள்ளது” என அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறினார். ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி நம் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதற்கு ‘ஆப்பரேஷன் சிந்துார்’ என பெயரிடப்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் கேட்டதற்கு இணங்கி நான்கு நாட்களாக நீடித்த மோதலை நிறுத்த நம் ராணுவம் முடிவு செய்தது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் […]

மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் ஆடைகள் ஏற்றுமதி

பாகிஸ்தான் ஜவுளி ஏற்றுமதி, மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 14,200 ரூபாயை எட்டி உச்சம் தொட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளித்துறை, 8.5 சதவீதம் பங்களிக்கிறது. ஜவுளித் துறை என்பது அந்நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமானது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பாகிஸ்தானில் இருந்து அதிகளவு ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தநிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் ஜவுளி ஏற்றுமதியில், 14,200 ரூபாயை எட்டி உச்சம் தொட்டுள்ளது. […]

ரஷ்யாவின் அடுத்த அறிமுகம்; புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்

ரஷ்யா, ‘கபரோவ்ஸ்க்’ என்ற பெயரில் புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை நேற்று அறிமுகம் செய்தது. இது, ‘பொஸைடான்’ எனப்படும் அணு ஆயுத ட்ரோன்- ஏந்திச் செல்லும் திறன் கொண்டது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா கடந்த சில நாட்களாக, தன்னிடம் உள்ள சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சோதனை செய்து வருகிறது-. ‘புரோவெஸ்ட்னிக்’ எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்தது. இது அணு ஆயுதங்களை ஏந்திச் […]

வரவு செலவுத் திட்டத்தை ஆய்வு செய்ய விசேட குழு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசால் முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தை ஆராய்ந்து, தர்க்க ரீதியிலான கருத்துக்களை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. இதற்காக விசேட குழுவொன்றை அந்தக் கட்சி நியமிக்கவுள்ளது. கபீர் ஹாசீம், ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் மேலும் சில பொருளாதார நிபுணர்கள் அந்தக் குழுவில் இடம்பெறவுள்ளனர். அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கருத்தரங்கு நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. வெறுமனே விமர்சனங்களை முன்வைக்காமல், புள்ளிவிவரம் மற்றும் விஞ்ஞானபூர்வமான […]

ஜனாதிபதி செயலகம் முன்னால் பயணி மீது தாக்குதல்?

கொழும்பு காலிமுகதிடலுள்ள ஜனாதிபதி செயலகம் முன்பாக நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படம் வெளியகியுள்ளது. பாணந்துறையில் இருந்து கொழும்பு செல்லும் பேருந்து ஒன்றின் நடத்துனரும் அவரது நண்பரும் இணைந்து பயணியைத் தடியால் தாக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவம் நேற்று காலை காலி முகத்திடல் மைதானத்திற்கு அருகாமையில் நடந்தது. பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவரை, பேருந்து நடத்துனரும் நண்பரும் இணைந்து தடியால் கடுமையாகத் தாக்கும் காட்சியை, பேருந்தில் இருந்த மற்றொரு பயணி தனது கையடக்க […]

முறையான கொள்கை ஏதும் இல்லாமலே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகின்றன

அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பேரணியில் நாங்கள் பங்குபற்றப் போவதில்லை, ஏனெனில் முறையான கொள்கை ஏதும் இல்லாமலே எதிர்க்கட்சிகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஒன்றிணைகின்றன என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “அரசின் அனைத்து கொள்கைத் திட்டங்களையும் எதிர்க்கும் நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம். தேசிய தொழிற்றுறையை […]

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்தார்…

புனிதப் பேராயத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர், சிறிது நேரத்திற்கு முன்பு இலங்கையை வந்தடைந்துள்ளார். நாட்டிற்கு வந்தடைந்த பேராயர் கல்லாகரை, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமசந்திரா வரவேற்றுள்ளார். இலங்கைக்கும் புனித சீயோனுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் அழைப்பின் பேரில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. […]

மஹியங்கனையில் பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் மரணம்!

மஹியங்கனையில் பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தேகெட்டிய பொலிஸ் நிலையத்தில் காவலில் இருந்தபோது நோய்வாய்ப்பட்டு, கந்தேகெட்டிய பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மஹியங்கனை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று (நவம்பர் 2) இரவு உயிரிழந்துள்ளார். நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயது சந்தேக நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த நவரத்ன முதியன்சேலாகே அஜந்த புஷ்பகுமார என்ற நபர் மீகஹகியுல பிரதேசத்தை சேர்ந்தவராவர் எனவும் கூறப்படுகின்றது. […]

ஆறுகால்மடம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் 3.5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.