நவம்பர் மாதம் ரீ ரிலீஸாகவிருக்கும் சூப்பர் ஹிட் படங்கள்

கமல் பிறந்தநாளில் நாயகன் திரைப்படம் மறு வெளியீடு செய்யப்படும் நிலையில் இம்மாதம் மட்டும் நாயகன் உட்பட நான்கு மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படங்கள் தமிழில் ரீரிலீசாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கமல்ஹாசன் நவம்பர் 7 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அவரின் பிறந்தநாளை அவரது ரசிகர்களும் கொண்டாட தயாராக இருக்கின்றனர். கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் படங்களின் அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் கமலின் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் சுந்தர் சியின் […]

AK64 டைட்டில் போஸ்டர்; திடீரென ஏற்பட்ட குழப்பம்?

அஜித்தின் AK64 படத்தின் அறிவிப்பில் ஒரு குழப்பம் ஏற்பட்டதாக தெரிகின்றது. AK64 அறிவிப்பு இம்மாதம் வெளியாகுமா ? அல்லது அஜித் சொன்னபடி ஜனவரி மாதம் தான் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகுமா? என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர், அஜித் குமார் நடிப்பில் தயாராகவுள்ள AK64 திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் ரெடியாக இருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது. ஆனால் அந்த டைட்டில் போஸ்டர் எப்போது வெளியாகும் என்பது தான் அனைவரது கேள்வியாகவும் இருக்கின்றது. இம்மாதமே AK64 அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் […]

போதை மாத்திரைகளுடன் கைதானவர்கள் வெளியிட்ட தகவல்

யாழ்ப்பாணத்தில் 3200 போதை மாத்திரைகளுடன் கைதான நபர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்து பெறப்பட்ட 3200 போதை மாத்திரைகளின் இன்றைய சந்தை பெறுமதி 09 இலட்சத்து 60ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் அறித்துள்ள வாக்குமூலத்தில், போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கைகள் காரணமாக போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். அதன் காரணமாக, அவற்றின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளதால், போதை மாத்திரைகளுக்கான கேள்வியும் […]

மழை நீர் தேங்கி நிற்பதனால் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் அடுத்த வருடம் முன்னெடுப்பு!

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.நீதவான் […]

பல ஆண்டுகளாக வடமராட்சி கிழக்கு பகுதிகளில் தொடரும் மணல் மண் கொள்ளை…

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பல ஆண்டுகளாக மணல் மண் கொள்ளை இடம் பெற்றுவருகின்றது. சட்ட விரோதமான மணல் மண் அகழ்வு இடம் பெற்றுவருவதை தொடர்ந்து கடந்தமாதம் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான இளங்குமரன் குறித்த பகுதிகளை பார்வையிட்டு தொடர்சியாக மணல் மண் கொள்ளையில் ஈடுபடுவோரது பெயர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் சில நாட்கள் மணல்மண் கொள்ளை நிறுத்தப்ட்டிருந்தது. தற்போது பதினைந்து […]

ஞானச்சுடர் 334 வது மலர் – சந்நிதியான் ஆச்சிரமத்தால் வெளியீடு

தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் மாதாந்த ஆன்மீக மலரான ஞானச்சுடர் 334 வது மலர் வெளியீட்டு நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரமத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில் வெளியீட்டுரையினை ஆசிரியர் துரைகணேசமூர்த்தி அவர்களும், மதிப்பீட்டுரையினை சைவப்புலவரும், சமய பாட ஆலோசகருமான செ.கந்த சத்தியதாசன் அவர்களும் நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் சந்நிதியான் […]

சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை நிதியம் நடாத்திய பரிசளிப்பு விழா!

உலக சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையில், சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை நிதியம் நடாத்திய வருடாந்த வாசிப்பு மாத போட்டியின் பரிசளிப்பு விழாவானது நேற்றையதினம் (02) வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் நடைபெற்றது. மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு, இறை வணக்கம் இசைக்கப்பட்டு நிகழ்வானது ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர்கள் உரைகள், சிறார்களது கலை நிகழ்வுகள் மற்றும் பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன. சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையின் தலைவர் திருச்சிற்றம்பலம் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்ற இந்த […]

ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கமல் ஹாசனின் பிறந்தநாள் அன்று ட்ரீட் ?

கமல் ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி ரஜினிகாந்த் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ட்ரீட் கிடைக்கப் போகிறது. கமல் ஹாசன் வரும் 7ம் தேதி தனது 71வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். அந்த நாளில் என்ன அறிவிப்பு வெளியாகும் என்று கமல் ஹாசன் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறதாம். சுந்தர் சி. இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை கமல் ஹாசன் தயாரிக்கவிருக்கிறார் என்பது தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் அந்த படம் […]

சிம்பு – தனுஷ் மோதல் உண்டாகுமா ?

சிம்புவின் அரசன் ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாம். அதே போல தனுஷ் -விக்னேஷ் ராஜா கூட்டணியில் தயாராகும் D54 திரைப்படமும் அதே ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தனுஷ் மற்றும் போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா காம்போவில் தயராகும் படம் தான் D54. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டது. இன்னும் பேட்ச் ஒர்க் மட்டும் மீதமுள்ளதாம்.அதை முடித்துவிட்டால் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிடுமாம். இதைத்தொடர்ந்து இப்படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியிடலாம் […]

சூப்பர் மூன் இன்றிரவு தெரியும்

இன்றிரவு (03) ஒரு சூப்பர் மூன் தெரியும் என்றும், வழக்கமான முழு நிலவை விட குறிப்பிடத்தக்க அளவில் பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும் என்றும் ஆர்தர் சி. கிளார்க் இன்ஸ்டிடியூட் ஃபார் மாடர்ன் டெக்னாலஜிஸ் அறிவித்துள்ளது. சூப்பர் மூன் சுமார் 14% பெரியதாகவும், தோராயமாக 30% பிரகாசமாகவும் பிரகாசிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்திரனின் நீள்வட்ட சுற்றுப்பாதை பூமிக்கு அருகில் வரும்போது இது நிகழும் என்றும். இதுபோன்ற நிகழ்வுகள் வருடத்திற்கு பல முறை நிகழ்கின்றன. இந்த முறை சுமார் […]