வடமேல் மாகாண அலுவலக ஒருநாள் சேவை கடமைகள் இன்று ஆரம்பம்!

ஆட்பதிவு திணைக்களத்தின் வடமேல் மாகாண அலுவலகத்தின் ஒருநாள் சேவை கடமைகள் இன்று திங்கட்கிழமை (03) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒருநாள் சேவை ஊடாக தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஏனைய சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு
கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி ஆகியோருக்கிடையில், கடற்றொழில் அமைச்சில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கடற்றொழில் மற்றும் மீன்வளத் துறைகளை நவீனமயப்படுத்தும் நோக்கில், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, முதலீட்டு விரிவாக்கம் மற்றும் அறிவு பரிமாற்றம் போன்ற துறைகளில் உறவுகளை வலுப்படுத்த […]
அரசியல் குழு உறுப்பினர் வல்லிபுரம் திருநாவுக்கரசு காலமானார்
நவ சம சமாஜ கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னைநாள் கொழும்பு மாநகர சபை அங்கத்தவருமான வல்லிபுரம் திருநாவுக்கரசு கடந்த வெள்ளிக்கிழமை (31) காலமானார். இது குறித்து நவ சம சமாஜ கட்சியின் அமைப்புச் செயலாளர் நடராஜா ஜனகன் வெளியிட்டுள்ள ஊடக அறிககையில், கடந்த 48 வருட காலமாக நவ சம சமாஜ கட்சியின் வளர்ச்சிக்காகவும், உழைக்கும் மக்களுக்காகவும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், முழு நேரமாக உழைத்த மூத்த தலைவர் ஒருவரை இன்று நாம் இழந்து நிற்கின்றோம். […]
ஒவ்வொரு மாதமும் இலங்கை சுங்கத்தின் வருமானம் அதிகரிக்கின்றது!
2025 செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 117% ஐ பூர்த்திசெய்யக் கிடைத்திருப்பதாக இலங்கை சுங்கத்தின் அதிகாரிகள், பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர். 2025 செப்டெம்பர் 30ஆம் திகதியில் இலங்கை சுங்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் ரூ.1485 பில்லியன் என்றும், ரூ.1737 பில்லியனை வருமானமாகப் பெற முடிந்திருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸநாயக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் […]
யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறப்பு
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகம் யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை (03) இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. கட்சியின் பெயர் பலகையை யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் திரைநீக்கம் செய்து வைத்தார். குறித்த நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் கொண்டனர். கடந்த 2018ம் ஆண்டு தமிழ் மக்கள் கூட்டணி எனும் அரசியல் கட்சி வடக்கு மாகாண […]
மானியங்களை பெறுவதற்கு புதிய கொள்கை
நாட்டின் விவசாய மானியத் திட்டத்தில் விவசாயிகளின் பொறுப்புக்கூறலை வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய கொள்கையை முன்னெடுக்கவுள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன அறிவித்துள்ளார். மானிய அடிப்படையில் முற்கூட்டியே உரக்கொடுப்பனவுகளைப் பெறும் விவசாயிகள் தங்கள் பயிரிடல் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தவறும் பட்சத்தில் ஏனையை கொடுப்பனவுகளை நிறுத்திவைக்கவும், அபராதங்களை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும், மானிய உதவியின் கீழ் நேரடியாக விவசாய உற்பத்திகளை உறுதி செய்வதற்குமாக […]
செம்மணி விவகாரம் தொடர்பில் இந்த அரசாங்கம் நீதியானதும் உண்மையான விசாரணைகளை மேற்கொள்ளாது
செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்கள், குழந்தைகளுடைய எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ள நிலையில், புலிகள் அவற்றை புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை பின்னடிக்க பார்ப்பதாக சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சன்னி ஞாஞானந்த தேரர் தெரிவித்தார். யாழ். நகர பகுதியில் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் […]
கல்வி அமைசின் தீர்மானம்; எழுத்து மூலமாக எதிர்த்துள்ளோம் – ஜோசப் ஸ்டாலின்
பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் தங்களது அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து கையெழுத்திட்டு கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் தெளிவாக அறிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். மட்டக்களப்பில் கூட்டமொன்றில் கலந்து கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய பாடசாலை நேரத்தினை பிற்பகல் 2மணி வரையில் நீடிப்பதற்கு எவ்விதமான எதிர்ப்புக்களும் இல்லையென்று அறிவித்ததை அடுத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எந்தவொரு ஆய்வு […]
சட்ட ரீதியாக எனக்கு கிடைக்க வேண்டிய உரிமையைக் கோரினேன் ஆனால் அது மறுக்கப்பட்டுள்ளது – முன்னாள் நீதிபதி இளஞ்செழியன்
நீதி, நியாயம், சட்டம், நீதிமன்றம் ஆகிய 4 விடயங்களுக்கு மாத்திரமே நான் தலை குனிந்தேன். வேறு எதற்கும் நான் தலைகுனியவில்லை. வேறு எதற்காகவும் தலைகுனிந்ததாக எனது வரலாற்றில் இல்லை. அவ்வாறானதொரு வரலாறு எழுதப்படவும் கூடாது. சட்ட ரீதியாக எனக்கு கிடைக்க வேண்டிய உரிமையைக் கோரினேன். அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அதற்காக யார் மீதும் குறைகூற நான் விரும்பவில்லை. எனது நீதித்துறை புனிதமானது என முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். மேல் நீதிமன்றங்களில் இவ்வாண்டு […]
35 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது – தீர்வு காண விஜய் வலியுறுத்தல்!
இலங்கை கடற்படை 35 தமிழக மீனவர்களை கைது செய்து, படகுகளைப் பறிமுதல் செய்தது. இதற்கு நிரந்தர தீர்வு கோரி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக் கடற்படையினரின் தொடர்ச்சியான அத்துமீறல் நடவடிக்கைகள் மீண்டும் ஒருமுறை தமிழக மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்று (நவம்பர் 3) இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 35 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதுடன், அவர்களின் நான்கு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்திலும் […]