வருட இறுதிக்குள் அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆரம்பிக்கப்படும்

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் 3.7 பில்லியன் டொலர் முதலீட்டில் அம்பாந்தோட்டையில் அமையவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சீனா கோரிய மேலதிக காணி உள்ளிட்ட அனைத்து முக்கிய தொழில்நுட்ப மற்றும் நடைமுறைத் தடைகளும் நீக்கப்பட்டுவிட்டதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இத்திட்டம் தாமதமாவதற்கு முக்கிய காரணமாக இருந்த, சினோபெக் நிறுவனம் கோரியிருந்த மேலதிக காணி ஒதுக்கீடு தொடர்பான விவகாரம் இப்போது தீர்க்கப்பட்டுவிட்டது. […]
கேரள கஞ்சாவுடன் பருத்தித்துறையில் ஒருவர் கைது!

பருத்தித்துறை – புலோலி மேற்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடொன்றை, நேற்று சனிக்கிழமை (1) மாலை, பொலிஸார் சோதனைக்குட்படுத்தியபோது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது, 104 கிலோகிராம் 660 கிராம் கேரள கஞ்சா கொண்ட 45 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மல்லாக சிறுவனை காணவில்லை

யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் 17 வயதுடைய மகன் ச.சயோசியன் என்பவரை காணவில்லை என அவரது தந்தை முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் – மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்துவந்த குறித்த இளைஞன் வெள்ளிக்கிழமை (31) வீட்டைவிட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பெற்றோர் அல்லது தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எமது ஆட்சி காலங்களில் எதிர்க்கட்சிகள் திரைமறைவில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கின – நாமல் ராஜபக்ஷ

நல்லாட்சி காலத்தில் நாம் கூட்டு எதிர்க்கட்சியாக செயற்பட்ட போதிலும், அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்முடன் இருக்கவில்லை. சிலர் எதிர்க்கட்சிக்கான பொறுப்புக்களை நிறைவேற்றிய போதிலும், சிலர் அரசாங்கத்துடன் இருந்தனர். எமது ஆட்சி காலங்களில் எதிர்க்கட்சிகள் திரைமறைவில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கின. இதுவே அரசியல் யதார்த்தமாகுமென பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற சோனி அல்ஃபா பண்டிகை – 2025 நிகழ்வில் கலந்து கொண்டு […]
முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டமூலம் அறிமுகம் !

நாட்டில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உருவாக்கும் நோக்கத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள் அரசாங்கம் முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரும் என்று தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். முதலீட்டாளர்களிடையே ஏற்படும் ஏதேனும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். புதிய சட்டமூலமானது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் முதலீடு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். […]
கனடாவில் பிரபல நடிகர் ஜெய் ஆகாஷ் எழுதி இயக்கும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை!

யாழ்ப்பாணம் தாவடியை தாயகமாகக் கொண்ட நடிகர் ஜெய் ஆகாஷின் புதிய திரைப்படமொன்றின் பூஜை கனடாவில் நடைபெறவுள்ளது. மேற்படி திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் கனடா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இடம்பெறவுள்ளதுடன் அந்ததந்த நாடுகளில் திரையிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ‘சூரியபிரகாஷ்” என பெயரிப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தின் பூஜை கனடாவில் எதிர்வரும் 5 ஆம் திகதி புதன்கிழமை கனடா கந்தசாமி கோயிலில் நடைபெறவுள்ளது. தென்னிந்தியாவில் சி-தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நீ தானே எந்தன் பொன்வசந்தம் என்னும் தொலைக்காட்சித் தொடரே ‘சூரியபிரகாஷ்” என்னும் […]
சுன்னாகம் பொலிசில் போதைப்பொருளுடன் கைதானவர் தப்பியோட்டம்!

சுன்னாகம் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நால்வர் ஹெரோயினுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டடனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். பின்னர் பிரதான சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரிய நிலையில் மன்றும் அதற்கு அனுமதி வழங்கியது. தடுப்புகாவல் விசாரணையின் […]
நாட்டின் வானிலை

மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் […]
சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்தவர் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் நுவரெலியா வட்டவளை தியகல பொலிஸ் சோதனை சாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் நேற்று (01.11.2025) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு சிகரெட்டுக்களை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்வதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய பொலிஸார் குறித்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, அவிசாவளையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வான் ஒன்றினை நிறுத்தி சோதனைக்குட்படுத்திய போது, அதில் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. […]
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி கோருகின்றார்கள்?

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக தங்களுக்குத் துப்பாக்கிகளை வழங்குமாறு 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாகவும், இந்தக் கோரிக்கைகள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸ்மா அதிபர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் துப்பாக்கிகளை வழங்குவது குறித்து ஆராய்வதாகவும் கூறியுள்ளனர். […]