பாதாள உலக கலாசாரமே இலங்கையில் நடைமுறையில் உள்ளது – எதிர்க்கட்சித் தலைவர்
நாட்டில் தற்போது அபிவிருத்தி கலாச்சாரத்துக்கு பதிலாக பாதாள உலக கலாச்சாரமே நடைமுறையிலுள்ளது. தாம் எதிர்பார்த்த புதிய இலங்கை உருவாக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சனிக்கிழமை (01) மத்திய கொழும்பு தொகுதியின் கிழக்கு மாளிகாவத்தை மற்றும் கெத்தாராம பிரிவுகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மேம்பாட்டிற்காக நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச அவர்கள் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டில் தற்போது […]
முல்லைத்தீவு ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரத்தை அண்டிய பிரபலமான ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதில் ரூபா 30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டபோது, சமையலறையில் பழுதடைந்த மற்றும் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகள் சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. இது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் […]
டென்னிஸ் பைனலுக்கு இந்தோனேஷியாவின் ஜானிஸ்
சென்னையில், பெண்களுக்கான ‘டபிள்யு.டி.ஏ., 250’ அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தாய்லாந்தின் லான்லானா டாராருடீ, இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென் மோதினர். இரண்டு மணி நேரம், 24 நிமிடம் வரை நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய ஜானிஸ் 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். இரட்டையர் பிரிவு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டோர்ம் ஹன்டர், ருமேனியாவின் மோனிகா நிகுலெஸ்கு ஜோடி 7-6, 6-4 […]
பெண்களுக்கான உலக கோப்பை; தென் ஆப்ரிக்காவுடன் இந்திய அணி மோதல்
பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இன்று இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. 1983ல் ஆண்கள் அணி முதல் கோப்பை வென்றது போல, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, முதல் கோப்பை வெல்ல காத்திருக்கிறது. இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. நவி மும்பையில் இன்று நடக்கும் பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, லாரா வால்வார்ட் கேப்டனாக உள்ள வலிமையான தென் ஆப்ரிக்க […]
கடந்த அக்டோபரில் உக்ரைன் மீது ரஷ்யா அதிக எண்ணிக்கை ஏவுகணைத் தாக்குதல்

இரண்டரை ஆண்டுகளில் இல்லாததை விட, கடந்த அக்டோபர் மாதத்தில் உக்ரைன் மீது ரஷ்யா அதிக எண்ணிக்கையில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் – இடையிலான போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இருநாடுகளும் பரஸ்பரமாக தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, ரஷ்ய படைகள் ஏவுகணை மற்றும் டிரோன்களை வீசி, […]
பிரிட்டன் ரயிலில் பயணிகள் மீது கத்திக்குத்து…

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அருகே ரயில் பயணிகள் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். கேம்பிரிட்ஜ் அருகே ஹண்டிங்டனுக்கு செல்லும் ரயிலில் பயணித்தவர்கள் மீது இந்த கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து விசாரிக்கிறோம் என போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களது நிலைமை குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்தவிட்டனர். ” தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் பெரிய கத்தியை வைத்து […]
இஸ்ரேல்பிணைக் கைதிகளின் உடல்களை மாற்றி அனுப்பியது ஹமாஸ் ?

பிணைக்கைதிகளில் 3 பேரின் உடல்களை ஹமாஸ் மாற்றி அனுப்பியதற்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முயற்சியால் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. அமெரிக்கா முன்மொழிந்த 20 அம்ச திட்டங்களின் முதல் கட்டத்திற்கு மட்டுமே, இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளன. பிணைக்கைதிகளை பரஸ்பரமாக விடுவித்தனர். மேலும், ஹமாஸிடம் இருக்கும் பிணைக்கைதிகளின் உடல்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் இஸ்ரேல் பெற்று வருகிறது. மொத்தம் 28 பிணைக்கைதிகளின் […]
ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை விட்டு, 40,000 ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி வந்த பின், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் அகதிகளாக தஞ்சமடைந்தனர். இதையடுத்து, அகதிகளின் எண்ணிக்கை அதிகமானதால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், பொது சேவைகளில் அழுத்தம் கொடுப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது. கடந்த, 2023 முதல், ஆப்கானிஸ்தான் சட்டவிரோத குடியேறிகள் உட்பட அனைத்து வெளிநாட்டினரையும் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும் என்றும், […]
அமெரிக்காவில் கடன் மோசடி: இந்திய வம்சாவளி தொழிலதிபர் தலைமறைவு

அமெரிக்காவில், தொலைதொடர்பு நிறுவனம் நடத்தி வந்த இந்திய வம்சாவளியான பங்கிம் பிரஹம்பட், போலியான ஆவணங்கள் தயாரித்து 4,200 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானதாக செய்தி வெளியாகி உள்ளது. குஜராத்தில் பிறந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தவர் தொழிலதிபர் பங்கிம் பிரஹம்பட். இவர் நியூயார்க்கில், ‘பிராட்பண்ட் டெலிகாம்’ மற்றும் ‘பிரிட்ஜ்வா ய்ஸ்’ ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்தார். கடந்த 2023ல் தொலைதொடர்பு துறையில் திறன் மிக்க, 100 மனிதர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இவர் தன் […]
அரசியல் பீட தமிழ்ப் பிரிவு டி. எஸ். சேனாநாயக்கவில் அங்குரார்ப்பணம்

ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகத் திறப்புவிழா மற்றும் மேன்மைதங்கிய டி. எஸ். சேனாநாயக்க அரசியல் பீட தமிழ்ப் பிரிவு அங்குரார்ப்பணம் சனிக்கிழமை (01) தமிழ்ப் பிரிவு தலைவர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி தலைமையில் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தித் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, புத்திக பத்திரண, தமிழ்ப் பிரிவு ஆலோசகர் ஜோன் ராம், தமிழ்ப் பிரிவுச் செயலாளர் உமாச்சந்திரா […]