வரலாறு காணாத ரீதியில் தங்கத்தின் விலை அதிகரிக்கும்!

எதிர்வரும் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத ரீதியில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, உலக தங்க சந்தையில் 5000 டொலர் வரை தங்கத்தின் விலை பதிவாகக்கூடும் என்றும் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளது. நாட்டில் அண்மைய நாட்களாக திடீர் அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் தற்போது தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்து வருவதுடன், ஒரு பவுண் தங்கத்தின் […]

புத்தளத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா மீன்கள்…

புத்தளம் – உடப்புவ பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது. மீன்பிடிப்பதற்காக கடலில் போடப்பட்ட ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா என்ற பாறை மீன்கள் சிக்கியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மீன்பிடி பருவக்காலம் தொடங்கிய நிலையில், உடப்புவில் உள்ள கத்தமுட்டு வலையில் 15,000 கிலோ மீன்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 1ஆம் திகதி மதியம் கரை வலையில் மீன் பிடிக்கப்பட்டபோது, ​​கத்தமுட்டு வலையில் அதிக அளவு மீன்கள் சிக்கியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் வலை […]

புதுக்குடியிருப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அணைக்கட்டு

உலக வங்கியின் 41 மில்லியன் ரூபா நிதி உதவியில் புதுக்குடியிருப்பு கமநல சேவை திணைக்களத்தின் கீழ் மல்லிகைத்தீவு கிராமத்தில் பேராற்றினை மறித்துக் கட்டிய குன்றுப்பள்ளாறு என்ற அணைக்கட்டு திறப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இலங்கைக்கான உலக வங்கியின் பிரதிநிதி வைத்தியர் சேகு (DR.Sehu)அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளதுடன் சியாப் திட்டப்பணிப்பாளர் சமன்பந்துல புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர் கமநல சேவைத்திணைக்கள அதிகாரிகள், சியாப்திட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். முத்தையன் கட்டு […]

சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு

நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான கேன் வில்லியம்சன் (Kane Williamson) சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான வில்லியம்சன், நியூசிலாந்துக்காக டி20யில் 2575 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 33 அதில் 18 அரைசதங்கள் மற்றும் அதிகபட்சமாக 95 ஓட்டங்கள் அடங்கும். 2011ல் டி20யில் அறிமுகமான அவர், 75 போட்டிகளில் நியூசிலாந்து அணித்தலைவராக பணியாற்றி, 2016 மற்றும் 2022 உலகக் கோப்பை அரையிறுதிக்கும், 2021 இறுதிப்போட்டிக்கும் அணியை […]

வடமராட்சியில் மிதுன்ராஜின் சாதனையைப் பாராட்டி மதிப்பளிப்பு

தெற்காசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்று பதக்கம் வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தி பெருமை சேர்த்துள்ள வடமராட்சியை சேர்ந்த மிதுன்ராஜின் சாதனையை பாராட்டி மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று பருத்தித்துறையில் மிக சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது. இந்தியா – ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் கடந்த 24.10.2025 ஆரம்பமாகி இடம்பெற்ற 4ஆவது தெற்காசிய மெய்வல்லுனர் சிரேஷ்ட சம்பியன்ஷிப் போட்டி தொடரில் இலங்கை சார்பில் பங்கேற்றிருந்த ஹாட்லி கல்லூரி மாணவனும் […]

தொடரை முழுமையாக வென்றது நியூஸிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், நியூஸிலாந்து அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து அணி முழுமையாகக் கைப்பற்றியது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என இங்கிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து, நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் 2 […]

தேசிய நடவடிக்கை: 1,314 பேர் கைது

‘முழு நாடும் ஒன்றாக’ ” தேசிய நடவடிக்கையின் கீழ் சனிக்கிழமை (01) அன்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் 1314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்களின் எண்ணிக்கை பின்வருமாறு.

எனது உயிருக்கு அச்சுறுத்தல்; பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரிடம் உடனடி பாதுகாப்பு கோரியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் தலைமறைவாக இருப்பதாக தேரர் தெரிவித்தார். ஒகஸ்ட் 30 ஆம் திகதி தனது பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட ஐந்து சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் நீக்கப்பட்டனர், இது ஒரு கடுமையான பாதுகாப்பு இடைவெளியை உருவாக்கியது என்றும் […]

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் விபத்து!

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் சனிக்கிழமை (01) மாலை கோர விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற காரும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த டிப்பரும் விபத்துக்கு உள்ளானது. டிப்பர் சாரதியும் காரில் பயணித்தவர்களும் காயமடைந்துள்ளனர் தமிழ்செல்வன் கதிர் 38 வயது (டிப்பர் சாரதி), வேலாயுதம் சர்வேந்தன் 63 வயது, ஜெகன் மனுஷன் 20 வயது ஆகிய இருவரும் காரில் பயணித்தவர்களாவர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சதோசவின் வீழ்ச்சி அம்பலமாகும் உண்மைகள்?

சதோச அதன் 100 கடைகளை மூட முடிவு செய்துள்ள நேரத்தில், தொழிலதிபர் தம்மிக்க பெரேரா சில்லறை வணிகத்தில் நுழைந்து 100 புதிய பல்பொருள் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது யூடியூப் செனலில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “சதோச அதன் 130 கடைகளை மூட முடிவு செய்துள்ளது, அவற்றில் 30 ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. மேலும் 100 கடைகள் மூடப்படும். அரசாங்கத்தால் வணிகத்தை நடத்த முடியாததால் […]