போதைப்பொருள் கடத்தல்காரர் வெல்லே சாரங்கவின் உதவியாளர் கைது
மோதரை பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான வெல்லே சாரங்க விச்சாயாவின் உதவியாளர் ஒருவர், கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் பல கொலைகளுடன் தொடர்புடையவர் ஆவார். சமித்புர, மட்டக்குளியாவைச் சேர்ந்த (25 வயது) இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் கைது செய்யப்பட்டபோது சந்தேக நபரிடம் சுமார் 27 கிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நான்கு […]
புதுக்குடியிருப்பு விவசாயிகள் கடும் அதிருப்தி
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் 85 மில்லியன் ரூபாய் நிதியில் மூன்று அணைக்கட்டுக்களின் புனரமைப்பு பணிகள் முடிவுறாத நிலையில் உள்ளதால் விவசாயிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். சித்தாறு அணைக்கட்டு தற்போது ஆரம்பக்கட்டப் பணிகளில் உள்ளது. சிவசாமி அணைக்கட்டில் கதவு பொருத்தும் பணி இன்னும் தொடங்கப்படாத நிலையில் காணப்படுகிறது. வீரசிங்கம் அணைக்கட்டின் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், மூன்று அணைக்கட்டுகளும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராத நிலையில் விவசாயிகள் விரைவில் பணிகளை முடிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையையடுத்து, காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன […]
தான்சானியாவில் மீண்டும் பதவிக்கு வரும் பெண் ஜனாதிபதி
தான்சானியாவின் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் மீண்டும் ஒரு முறை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் காரணமாக நாடு முழுவதும் பல நாட்கள் அமைதியின்மை நிலவிய நிலையில், மீண்டும் அவரின் பதவிக்காலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையகத்தின் கூற்றுப்படி, சாமியா 98 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார். எனினும், இந்தத் தேர்தலில் வெளிப்படைத்தன்மை இல்லாமை காரணமாக, நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. நாடு தழுவிய இணைய முடக்கம் காரணமாக, இறப்புக்களின் எண்ணிக்கையை சரியாக கணிப்பிட […]
வீட்டுக்குள் அத்துமீறி தாக்கிய கும்பல்; ஆயுதங்களுடன் ஐவர் கைது!
வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து உரிமையாளர்களைத் தாக்கிய கும்பல் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளது. களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விகாரை வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்திப் பலமாகத் தாக்கிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்கள் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் […]
இளைஞர் உயிரிழந்த சம்பவம்; தலவாக்கலையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தலவாக்கலை நகரில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை நகரில் பொதுமக்களால் நேற்று எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று அதிகாலை வேளையில் தலவாக்கலை நகர மத்தியில் பட்டாசுகளை கொளுத்தி கொண்டிருந்தபோது கெப் ரக வாகனமொன்றில் மோதி இழுத்துச் செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி வௌ்ளிக்கிழமை (31) உயிரிழந்தார். சென்கிளையர் புகையிரத விடுதியை தற்காலிக வசிப்பிடமாக கொண்ட செல்வநாதன் புஸ்பகுமார் […]
இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குக் காரணம் – இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கருத்து!
ஒரு நாட்டின் கட்டமைப்பிலும், பாதுகாப்பிலும், அதன் இலக்குகளை அடைவதிலும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதிலும் அரச நிர்வாகம் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது என தெரிவித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பலவீனமான அரச நிர்வாகமே இலங்கை, பங்களாதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் ஆட்சி மாற்றத்திற்கு காரணம் என்றும் குறிப்பிட்டார். ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஒருமைப்பாட்டு தினம்) நிகழ்வை முன்னிட்டு நேற்று உரையாற்றிய அஜித் தோவல், நிர்வாகத்தில் வளர்ந்து வரும் சவாலாக, […]
மிரள வைக்கும் லோகேஷ் கனகராஜ்!
கூலியை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் நடிக்கும் படத்துடைய அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் , தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் இயக்கி வருகிறார். இவரது படங்களுக்கு என்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால், பலரும் இவருடைய இயக்கத்தில் […]
உலகத்தரத்தில் உருவாகப்போகும் தனுஷ் படம்?
தனுஷ் -மாரி செல்வராஜ் கூட்டணியில் அடுத்ததாக ஒரு திரைப்படம் தயாராகவுள்ளது. இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகப்போவதாக தகவல்கள் வர தற்போது இப்படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியிருக்கிறார். தனுஷ் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் அவரின் ஒவ்வொரு படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை சம்பாதித்து வரும் படங்களாக உள்ளது. குறிப்பாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப்போகும் படம் தற்போதே எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியிருக்கின்றது. கர்ணன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இக்கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக […]
ரசிகர்கள் வருத்தத்தில்…; முற்றுப்புள்ளி வைப்பாரா ரஜினி ?
ரஜினி விரைவில் சினிமாவில் இருந்து தன் ஓய்வை அறிவிக்கப்போகின்றார் என்ற தகவல் தீயாய் பரவி வருகின்றது. இது ரஜினி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்த விரைவில் இந்த வதந்திக்கு தலைவர் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதே ரஜினி ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தற்போது மீண்டும் பரபரப்பாக தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவ்வப்போது ரஜினி நடிப்பில் இருந்து விலகவுள்ளார் என செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளன. […]
கார்த்தி -சுந்தர் சி கூட்டணி நடக்காது?
சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கார்த்தி -சுந்தர் சி கூட்டணி நடக்காது என தெரிகின்றது. கார்த்தி அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என கடந்த ஒரு சில மாதங்களாகவே சொல்லப்பட்டு வந்தது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதற்கென்றே பெயர் பெற்றவர் தான் கார்த்தி. பருத்திவீரன் படத்தில் துவங்கி கடைசியாக அவரது நடிப்பில் வெளியான மெய்யழகன் வரை படத்திற்கு படம் கதைக்களத்தில் வித்யாசம் காட்டி வருகின்றார் கார்த்தி. அவரிடம் […]