வவுனியா பல்கலைக்கழக மாணவன் மரணம்

வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதல் ஆண்டு மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (31) உயிரிழந்துள்ளதாக வவுனியா பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞரின் உடல், பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் மடப்பகுதிக்கு வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான சரியான காரணம், பிரேத பரிசோதனைக்கு பிந்தைய விசாரணையில் வெளிப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பூவரசன்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய்வு
சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை தொடர்ந்து வலியுறுத்திவருகின்ற அமைப்பான குரலற்றவர்களின் குரல் அமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிலரையும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் அமைந்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதற்கமைய இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் […]
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு
வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தெற்கு மியான்மர் கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரண மாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 48 மணி […]
பிரித்தானிய அரசாங்கம் ஒதுக்கிய தொழில்நுட்பத்துக்காக சாதனை நிதி!
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக பிரித்தானிய அரசாங்கம் 55 பில்லியன் பவுண்ஸ் நிதியை ஒதுக்கியுள்ளது. 2029/2030 வரை நீடிக்கும் இந்த நிதித் திட்டம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஸ்திரத்தன்மை மற்றும் தெளிவு ஆகியவற்றை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், சுத்த ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, ‘quantum computing’ போன்ற தொழில்நுட்பம் சார்ந்த துறைகளை ஊக்குவிப்பதற்காக இந்தி நிதி பயன்படுத்தப்படும். இந்நிலையில், இதனால், கிடைக்கும் பொருளாதார பலன்கள், முதலீட்டை விட 8 மடங்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், அரசாங்கத்தின் இந்த […]
மூதூர் கிழக்கு சம்பூர் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. மூதூர் கிழக்கு சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இவ் சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தது. சிரமதான நிகழ்வில் முன்னாள் போராளிகள், போராளிகளின் குடும்பத்தினர்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது சிரமதானத்தில் கலந்து கொண்டோருக்கு கூழ் காய்ச்சி பரிமாறப்பட்டிருந்தது. மாவீரர் நாள் நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு மூதூர் கிழக்கு சம்பூர் -ஆலங்குளம் துயிலுமில்லத்தில் தொடர்ந்தும் சிரமதானம் மேற்கொள்ளப்படவுள்ளமையால் அதில் கலந்து […]
மூன்று குழந்தைகளின் தாயை காணவில்லை
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுஸ்சீக் தோட்ட புளூம்பீலட் பிரிவைச் சேர்ந்த 35 வயதுடைய விஸ்வநாதன் ஞானேஸ்வரி (அடையாள அட்டை இலக்கம் 837344263V) என்ற மூன்று குழந்தைகளின் தாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) அன்று முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த பெண்ணின் கணவர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார். இப் படத்தில் உள்ள குறித்த பெண்ணை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0522277222 என்ற தொலைபேசிக்கு அல்லது […]
ஆழ்கடலில் 350 கிலோ கிராம் போதைப்பொருளுடன் ஆறு மீனவர்கள் கைது
ஆழ்கடலில் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலை கடற்படையின் நீண்ட தூர நடவடிக்கைப் படை வத்தளை, டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (02) கொண்டு வந்தது. கடற்படைக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், மீன்பிடிக் படகு பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதில் இருந்த 06 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். மீன்பிடிக் கப்பல் டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பிறகு, அதைப் பரிசோதித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, […]
இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு 303 புதிய மருத்துவர்கள்
இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு சுகாதார மருத்துவ அதிகாரிகள் உட்பட மொத்தம் 303 பட்டதாரிகள் நியமனம் பெறவுள்ளனர். நாளை (3) கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நியமனம் நடைபெறவுள்ளது. உள்ளூர் ஆயுர்வேத சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்துவதையும் நோயாளி சேவைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட, 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆயுர்வேதத் துறைக்கு இது மிகப்பெரிய ஆட்சேர்ப்பு என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்கள் […]
சீதை அம்மன் ஆலயத்தில் திருட்டு
நுவரெலியா, ஹக்கலவில் உள்ள சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று இரவு ஒரு திருட்டு சம்பவம் நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோயில் உள்ள ஆறு உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளன. சிறப்பாக தயாரிக்கப்பட்ட மூன்று பணப் பெட்டிகள் பின்னர் அருகிலுள்ள கால்வாயில் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கோயில் நிர்வாகக் குழு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். கோயிலின் பாதுகாப்பு கேமரா அமைப்பின் தரவு சேமிப்பு சாதனம் அகற்றப்பட்டதாகவும் விசாரணை முலம் தெரியவந்தது. இரவு காவலர் தூங்கிக் கொண்டிருந்தபோது சந்தேக நபர்கள் […]
வரணி வடக்குப் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிய வாகனம் கைப்பற்றல்
யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணி வடக்குப் பகுதியில் சட்டவிரோத மணலுடன் பயணித்த பட்டா ரக வாகனத்தை நேற்று கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வடமராட்சி குடத்தனைப் பகுதியில் பட்டா ரக வாகனமொன்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து ஏற்றிய பின்னர் வரணி மாசேரி வீதியால் பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனத்தை மாசேரி பகுதியில் கொடிகாமம் பொலிஸார் இடைமறித்துள்ளனர். எனினும் அந்த பட்டாரக வாகனம் பொலிஸாரை மோதும் வகையில் பயணித்து தப்பியோடியுள்ளது. இந்த நிலையில் பொலிஸார் பட்டாரக […]