‘தெளிந்த பார்வை பிரகாசமான எதிர்காலம்’ கண் சுகாதார நடவடிக்கை
தெளிந்த பார்வை, பிரகாசமான எதிர்காலம்’ என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற முக்கியமான பொது கண் சுகாதார முயற்சியாகிய, நகுலேஸ்வரி வாசுதேவன் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி வழங்கும் திட்டத்தை பதிவுசெய்கிறது. இந்த விரிவான கண் பரிசோதனை திட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் பிரிவு ஆலோசகர் மருத்துவ நிபுணர் எம்.மலரவன் அவர்களின் தலைமையில் வட மாகாணம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊடக […]
தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்; யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில், பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் (01.11.2025) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றுக்குள் வந்த நபர் பொருட்கள் வாங்குவது போல பாவனை செய்து அங்கிருந்த பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார். இதன்போது, பல்பொருள் அங்காடியில் இருந்த இரண்டு பெண்களும் சந்தேகபரை துரத்திச் சென்றுள்ளனர். சந்தேகநபர் முகத்தை மறைக்கும் வகையிலான ஹெல்மெட் ஒன்றை அணிந்து வந்து இவ்வாறு […]
முன்னாள் ஜனாதிபதிகளின் முடிவு
தேசிய மக்கள் சக்தி அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடை நகரில் நடத்தப்படவுள்ள எதிர்கட்சிகளின் கூட்டுப்பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்த பேரணியில் பங்கேற்கமாட்டார்கள். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகள் யாரும் இந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ளக் கூடாது என்ற கருத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் […]
புதிய தலைமுறை இதய ஸ்டென்ட்; இந்தியாவுக்கு உலகளாவிய அங்கீகாரம்
இதய சிகிச்சை நிபுணர்களின் உலகளாவிய மாநாடு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் வௌ்ளிக்கிழமை (31) முடிவடைந்தது. இதில் டெல்லி பத்ரா மருத்துவமனை டீனும், இதய சிகிச்சை நிபுணருமான டாக்டர் உபேந்திர கவுல், டுக்ஸ்டோ-2 என்ற பெயரில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளை தாக்கல் செய்தார். இந்த பரிசோதனை டாக்டர் கவுல் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவராக பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் பால், திட்ட இயக்குனராக டாக்டர் பிரியதர்ஷினியும் பணியாற்றினர். இந்த பரிசோதனையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை இதய […]
விபத்தில் பல்கலைக்கழக மாணவன் பலி
மதுகம-நேபொட-ஹொரண சாலையில் ஹிரிகெட்டிய சந்தியில் சனிக்கிழமை (01) அன்று காலை மோட்டார் சைக்கிள் ஒன்று சாலையை விட்டு விலகி தனியார் பேருந்துடன் மோதியதில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மதுகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மினிபாய, தவலம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவரான அகலவத்த கம்கானம்கே ஹசிரு சந்தீப (வயது 23) என்பவர் உயிரிழந்துள்ளார். மதுகமவிலிருந்து ஹொரணை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர், ஹிரிகெட்டிய சந்தியில் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை […]
போதைப்பொருள் வைத்திருந்தனர்; இசை நிகழ்ச்சியில் 31 பேர் கைது

மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது, போதைப்பொருள் வைத்திருந்ததாக ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 31 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மிரிஹான பொலிஸாரும் மிரிஹான பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இசை நிகழ்ச்சி நடைபெற்ற “கமதா” மைதானத்தில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சந்தேக நபர்களிடம் பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் […]
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை; சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி!
மரணதண்டனைக்கைதியான சோமரத்ன ராஜபக்ஷ சத்தியக்கடதாசி ஊடாக வெளிப்படுத்தியிருக்கும் விடயங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவேண்டியிருப்பதாகவும், எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தமது அலுவலகத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் இதுபற்றி ஆராயப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, […]
புதிய சாதனை படைத்தது இஸ்ரோ
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 உடன் எல்விஎம்- 3 எம் 5 ராக்கெட் இன்று (நவ., 02) மாலை 5.26 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இஸ்ரோ, 4,410 கிலோ எடை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 ஐ விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் நேற்று( நவ.,01) மாலை துவங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (நவ., 02) […]
ஏறாவூர்ப்பற்று கால்நடை வளர்ப்பாளர் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு
மட்டக்களப்பில் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திலுள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு கித்துள் பிரதேசத்தில் அமைந்துள்ள மேசல்தரைப் பகுதிக்கு நேற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் சென்றிருந்தார். அப்பகுதியிலிருந்த சுமார் 50 கல்நடை வளர்ப்பாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரிடம் நேரடியாக எடுத்துரைத்திருந்தார்கள். அப்பகுதியில் மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறி காடுகளை அழித்தல், பயிர்ச்செய்கை மேற்கொள்ளுதல், போன்றவற்றால் கால் நடைகளுக்கு மேய்ச்சல் தரைப் பகுதி குறைந்து கொண்டு […]
வடக்கின் அரசியல் மற்றும் பொருளாதார நிலவரத்தை ஆராய்கிறது சகலரையும் உள்ளடக்கிய மாற்றத்துக்கான கூட்டிணைவு அமைப்பு
வடக்கின் அரசியல் மற்றும் பொருளாதார நிலவரத்தையும், அப்பிராந்தியங்களின் இயங்குகையையும் புரிந்துகொள்ளும் நோக்கில் வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல்வாதிகள் 16 பேர் அடங்கிய குழுவினர், நேற்றைய தினம் சனிக்கிழமை காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமானநிலையத்தைப் பார்வையிட்டதுடன் கலந்துரையாடல்களிலும் பங்கேற்றனர். வடக்கின் அரசியல் மற்றும் பொருளாதார இயங்குகையை தென்னிலங்கை அரசியல்வாதிகள் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பேற்படுத்தும் வகையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க கோலிஷன் ஃபோர் இன்க்லூஸிவ் இம்பக்ட் எனும் அரச சார்பற்ற அமைப்பின் ஏற்பாட்டில் […]