அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 3.9 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நேற்று வரையிலான பத்து மாதங்களில் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த பத்து மாதங்களில் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 10.7 சதவீதம் வலுப்பெற்றிருந்தது. கடந்த ஒரு வருடத்தின் பின்னர் […]

நாவற்குழியில் பாண் விற்பனையாளர் ஹெரோயினுடன் கைது

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பனையில் ஈடுபடும் நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் கைது செய்யப்பட்டதுடன் , போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீண்டும் இலங்கைக்கான சேவையில் போலந்து விமான நிறுவனம்!

போலந்து விமான நிறுவனமான என்டர் ஏர், இன்று இலங்கைக்கான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதன்படி, கட்டோவிஸ் மற்றும் வோர்சாவிலிருந்து இரண்டு விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய (BIA) அறிக்கையின் படி, போலந்தின் கட்டோவிஸ் மற்றும் வோர்சாவிலிருந்து இரண்டு எண்டர் ஏர் விமானங்கள் குளிர்கால பருவத்துக்காக இன்று காலை வரவேற்கப்பட்டன. விமானங்களில் வந்த பயணிகள் இலங்கை தேயிலை சபையால் பிரீமியம் சிலோன் தேநீர் பொதிகளுடன் வரவேற்கப்பட்டனர்.

நெடுந்தீவு கடலில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது,185 கிலோகிராம் 600 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 30 வயதுடைய யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்கள், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைக்க […]

பயண எச்சரிக்கை; பிரித்தானியா, கனடா, அமெரிக்கா மக்களுக்கு…

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள், நைஜர் நாட்டிற்குப் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் எச்சரிக்கை வெளியாகியுள்ளன. தீவிரவாதம், கடத்தல் மற்றும் அரசியல் நிலைமை காரணமாக இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை, நைஜரில் உள்ள தனது தூதரகத்தின் ஆதரவைப் பெற முடியாது எனவும், அவசர சூழ்நிலைகளில் “அமெரிக்கா மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்” எனவும் தெரிவித்துள்ளது. இது, அந்த நாட்டில் உள்ள அமெரிக்க பிரஜைகள் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே […]

இவ்வாண்டு இலட்சக்கணக்கிலான சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 இலட்சத்து 78 ஆயிரத்து 557 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 20 ஆயிரத்து 33 ஆகும். அத்துடன், […]