மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றல்!

மேற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவைளப்பு நடவடிக்கையின் போதே குறித்த மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது குறித்த மீன்பிடி படகில் இருந்த 6 சந்தேக நபர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதிய கல்விச் சீர்திருத்தம்; இந்தியா உதவி!

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் இலங்கையில் உள்ள ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கவும், ஆக்கபூர்வமான ஆசிரியர்களுக்கு விசேட வாய்ப்புகளை உருவாக்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொலன்னறுவை பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட பல இன, மும்மொழிக் கல்விப் பாடசாலையின் ஆரம்ப விழாவில் பங்கேற்றுப் பேசும்போதே அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கல்வி […]
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லங்கள் கையளிப்படாத சர்ச்சை!

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லங்கள் கையளிப்படாத சர்ச்சைகள் தொடர்வதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு – 7 விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லம், கொழும்பு -7 ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் கொழும்பு -7 சுதந்திர மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றை அரசாங்கம் தற்போது பாரமெடுக்கும் […]
வீதி மேம்பாட்டிற்காக கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை

வீதி மேம்பாட்டிற்காக, இலங்கை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 90 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த இரண்டு தரப்புக்களும் கைச்சாத்திட்டுள்ளன. நிதி அமைச்சகத்தின் அறிக்கையின்படி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் வெற்றிகரமாக முடித்த பின்னர், இந்த கடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புற சமூகங்கள் மற்றும் முக்கிய சமூக-பொருளாதார மையங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவதம், வலுப்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும். அத்துடன் […]
எதிர்காலத்தில் சிறந்த வைத்திய வசதிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!

தரம் குறைந்த மருந்துகளை கொள்வனவு செய்து மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை முறியடிக்க எமது அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்திருக்கின்றது என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரில் திருகோணமலை வீதியில் நேற்று (31.10.2025) அரசு ஒசுசலவின் 67ஆவது கிளையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், இந்தப் பிரதேச மக்களின் நீண்டகால தேவையாக இருந்த அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் கிளையின் […]
மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் மரணம்

பொக்காவல – ரம்புகேவெல பிரதேசத்தில் நேற்று இரவு மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சார ஹீட்டர் ஒன்றைத் தொட்ட போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி, ரம்புகேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொக்காவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கனடா உயர் ஸ்தானிகர் – அரசாங்க அதிபர் சந்திப்பு

கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்று வெள்ளிக்கிழமை (31) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே , கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, அவர்களும் உடனிருந்தார்கள்.
விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3- எம்5 ராக்கெட் – இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் வழிபாடு

விண்ணில் நாளை (நவ., 02) பாய உள்ள எல்விஎம் 3- எம்5 ராக்கெட் திட்டம் வெற்றி அடைய, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர். சந்திரயான் 3 அனுப்பிய எல்விஎம் 3- எம்5 ராக்கெட் மூலம் விண்ணிற்கு 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளை நாளை நவம்பர் 2ம் தேதி இஸ்ரோ அனுப்புகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட, இந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் […]
‘நாம அனைவருமே கரூர் நெரிசலுக்கு காரணம்’ – நடிகர் அஜித்

கரூர் நெரிசலுக்கு அந்த தனிநபர் மட்டுமே காரணம் அல்ல. நாம அனைவருமே காரணம் தான். ஊடகங்களுக்கு இதில் ஒரு பங்கு இருக்கிறது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அஜித் சமீபத்திய அளித்த பேட்டியில் மேலும் குறிப்பிடுகையில், கரூர் நெரிசல் காரணமாக தமிழ்நாட்டில் நிறைய விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த தனிநபர் மட்டுமே இதற்கு காரணம் அல்ல. நாம அனைவருமே காரணம் தான். ஊடகங்களுக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறது. ஒரு சமூகமாக கூட்டத்தை […]
இந்தியா உலகின் முன்னணி நாடாகும்…

“உலகின் வளரும் நாடுகளில் முன்னணி நாடாக இந்தியா உள்ளது. எங்கள் நாட்டின் நீண்டகால நட்பு நாடு என்பதுடன், எதிர்கால ஒத்துழைப்புக்கான கூட்டாளியாகவும் இந்தியாவை கருதுகிறோம்,” என, சைப்ரஸ் வெளியுறவு அமைச்சர் கான்ஸ்டான்டினோஸ் கோம்போஸ் தெரிவித்துள்ளார். மேற்காசிய நாடான சைப்ரசின் வெளியுறவு அமைச்சர் கோம்போஸ், மூன்று நாள் அரசுமுறை பயணமாக நம் நாட்டிற்கு கடந்த மாதம் 29ல் வந்தார். இவர் டில்லியில் நேற்று நடந்த நிகழ்வில் பேசியதாவது: ஐரோப்பிய யூனியனுடன், இந்தியா மேற்கொள்ள உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் […]