பாத்தேகம பகுதியில் பெண் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு கொலை

காலி, அஹுங்கல்ல பொலிஸ் பிரிவின் பாத்தேகம பகுதியில் பெண் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் பெண்ணை கல்லால் தாக்கியுள்ளார். அதனால் பலத்த காயமடைந்த பெண், பலபிட்டிய மருத்துவமனையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் பாத்தேகம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த கொலையின் சந்தேக நபர் உயிரிழந்த பெண்ணின் உறவினர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு […]
சர்வதேசத்தில் திடீர் போர் பதற்றம்

கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல்களில் அமெரிக்கப் படைகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 62க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் 15க்கும் மேற்பட்ட கப்பல்களை அழித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் எந்த பொது ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ட்ரென் டி அரகுவா போன்ற வெனிசுலா குற்றக் கும்பல்களை குறிவைத்து நடத்தப்படும் பரந்த போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விவரிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, […]
நீர்வேலிப்பகுதியை சேர்ந்தவர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு!

யாழில் வெற்றிலை துப்ப முயற்சித்த ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். நீர்வேலி, அச்செழு பகுதியை சேர்ந்த சுப்பையா உதயராசா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 22 ஆம் திகதி மேல் மாடியில் மேசன் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது வெற்றிலை துப்புவதற்காக கட்டடத்தின் முகப்பு பகுதிக்கு சென்றவேளை கால் தவறி கீழே விழுந்துள்ளார். சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் […]
கொழும்பு மருதானையில் இரு வீடுகளில் தீ

கொழும்பு, மருதானை, தேவநம்பியதிஸ்ஸ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ பரவல் இன்று சனிக்கிழமை (01) ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ பரவலுக்கான காரணம்ட இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ பரவலின் போது இரு வீடுகளிலும் உள்ள பல பொருட்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் […]
பிரதேச சபையின் தவிசாளர் படுகொலை; துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

“மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத் என்பவர் கடந்த ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி காலை வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பில் பொலிஸாரால் […]
தேர்தல் முடிவை ஏற்க மறுத்து மோதல்: தான்சானியாவில் 700 பேர் பலி?

தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து வெடித்த வன்முறையில் கடந்த 3 நாட்களில் 700 பேர் இறந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் நேற்று முன்தினம்( அக்.29) அதிபர் தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய அதிபரான சிசிஎம் கட்சியைச்சேர்ந்த சமியா சுலுஹூ ஹசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி, தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டியது. இதனால், அந்நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது. எதிர்க்கட்சியினர் பேரணி, […]
பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி

பப்புவா நியூ கினியாவின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் உயிரிழந்தனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு மலைப்பகுதியான எங்கா மாகாணத்தில் உள்ள குகாஸ் கிராமத்தில், நேற்று அதிகாலை 2:00 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வீடுகள் தரைமட்டமானதால், துாங்கிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே புதையுண்டனர். உள்ளூர்வாசிகள் 30 பேர் வரை இறந்ததாகவும், 18 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டதாகவும் எங்கா கவர்னர் பீட்டர் இபடாஸ் தெரிவித்தார். 21 பேர் உயிரிழந்ததாக […]
கனடாவில் நடந்த கொலை வழக்கு; இந்தியருக்கு 25 ஆண்டு சிறை

கனடாவில், 2022ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு, 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை வளாகத்தில், விஷால் வாலியா என்பவர் 2022ல் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கொன்ற நபர்கள், அவருடைய வாகனத்தையும் தீவைத்து எரித்தனர். பிரிட்டிஷ் கொலம்பியா நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும், வான்கூவர் போலீசாரும் இணைந்து சில நிமிடங்களிலேயே குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். பிரிட்டிஷ் கொலம்பியா […]
எரிவாயு ஒப்பந்தம்; இஸ்ரேல் கையெழுத்திட மறுப்பு

எகிப்துடன், 3.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிவாயு ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட மறுத்ததால், இஸ்ரேலுக்கான தன் பயணத்தை அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ் ரைட் ரத்து செய்துள்ளார். வலியுறுத்தல் மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் எகிப்து இடையே, 3.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிவாயு ஒப்பந்தம் குறித்து பேச்சு நடந்து வருகிறது. இப்பேச்சு இன்னமும் முழுமை அடையாத காரணத்தால், இஸ்ரேல் எரிசக்தி துறை அமைச்சர் எலி கோஹென் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து உள்ளார். […]
ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் அமெரிக்காவுக்கு கண்டனம்

தென் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, கொலம்பியாவில் இருந்து கடல் மார்க்கமாக அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். அமெரிக்காவில் இருந்து இதுவரையில் 2,790 இந்தியர்கள் வெளியேற்றம்; மத்திய அரசு போதை ஒழிப்பு நடவடிக்கை என்று கூறி கரீபியன், பசிபிக் கடற்பகுதிகளில் செல்லும் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் நடக்கும் தாக்குதல்களில், 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு ஐ.நா., மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்து […]