பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு |

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள்,கருத்தரங்குகள் என்பன 4 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பரீட்சைகள் முடியும் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 5 ஆம் திகதி வரை […]

எரிபொருள் விலை திருத்தம்; முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம்?

எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார். லங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவால் குறைத்திருந்தாலும், அதன் பயன் நுகர்வோருக்குச் சென்றடையாது என்றார்.

அயல் வீட்டில் ஒலிப்பேழையை அதிக சத்தத்துடன் இயக்கியதால் இளைஞன் கொலை!

கேகாலை – புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் கத்தியால் குத்தப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக புலத்கொஹுபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை எந்துராபொல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, கொலை செய்யப்பட்ட இளைஞன் தனது வீட்டினுள் உள்ள ஒலிப்பேழையை அதிக சத்தத்துடன் இயக்கியுள்ளார். இதன்போது அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவர், ஒலிப்பேழையின் சத்தத்தை குறைக்குமாறு இளைஞனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் எல்லை மீறியதால் அயல் வீட்டில் வசிக்கும் நபர், இளைஞனை கத்தியால் […]

இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது சுமார் 20 லட்சம் இலங்கையர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்டுதோறும் சுமார் 40,000 பேருக்கு புதிய புண்கள் ஏற்படுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சத்திரசிகிச்சைத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ரெஸ்னி காசிம், இந்த நீரிழிவு புண்கள் பலரால் உணரப்படுவதைவிட மிகவும் ஆபத்தானவை என்றும், சில சமயங்களில் புற்றுநோயை விடவும் கடுமையானவை […]

42.8 பில்லியன் ரூபா செலவில் வாகனங்களை அவசரமாக கொள்வனவு செய்யும் அரசாங்கம்!

1,775 புதிய இரட்டைக்கெப் (Double-Cab) வாகனங்களை 42.8 பில்லியன் ரூபா செலவில் அரசாங்கம் அவசரமாக கொள்வனவு செய்ய தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். சர்வதேச விலைமனு நடைமுறையான 42 நாட்களை மீறி, வெறும் 12 நாட்களுக்குள் விலைமனு செயல்முறையை நிறைவு செய்து, இந்த அவசர கொள்வனவுக்கு அரசாங்கம் தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக முன்னர் முன்வைக்கப்பட்ட 2,000 வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது வேறு வடிவில் […]

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர் நாளை மறுதினம் திங்கட்கிழமை (03) இலங்கை வரவிருக்கின்றார். வெளிநாட்டலுவல்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் அழைப்பினை ஏற்று இலங்கை வரவுள்ள அவர்இ எதிர்வரும் 8ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து பல முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோருடன் முக்கிய உயர்மட்ட சந்திப்புகளில் […]

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள படங்கள்

கடந்த ஆகஸ்ட் மாதம் டொமினிக் அருண் என்பவரது இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியானது ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. இப்படத்தின் ஓடிடி ரிலீசுக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பில் இருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது ‘லோகா’ ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாரம் ரசிகர்கள் எதிர்பார்த்த அசத்தலான படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான முழுமையான விவரங்களை தற்போது பார்க்கலாம். கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி தனுஷ் இயக்கி நடித்து திரையரங்குகளில் ரிலீசாகி இருந்தது […]

ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்த ‘ஆண் பாவம் பொல்லாதது’

ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடித்திருக்கும் “ஆண் பாவம் பொல்லாதது” திரைப்படம் நேற்று (அக்டோபர் 31) வெளியாகியுள்ளது. “ஜோ” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரசிகர்கள் ரியோ ராஜ் மீண்டும் ஒரு ஹிட் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை அளித்துள்ளது. 2023-ல் வெளிவந்த ஜோ திரைப்படம் ரியோ ராஜின் திரை வாழ்க்கையில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. கதை, உணர்ச்சி, பாடல்கள் […]

என்னால் எனது குடும்பம் பெருத்த மன அழுத்தத்தை அனுபவித்தது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் அஜித், சினிமாவில் மட்டுமல்ல பைக், கார் ரேஸ்சிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இவர் தற்போது தன்னுடைய சினிமா வாழ்க்கை, கரூர் சம்பவம், குடும்பம், அடுத்த படம் பற்றி பல விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார். தற்போது இவர் வழங்கிய பேட்டி இணையத்தில் வைரலாகி உள்ளது. அதன்படி கரூர் சம்பவத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதற்கு ஒருவரை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. இதற்கு அனைவரும் தான் […]

முல்லைத்தீவில் கடற்றொழிலாளர் மாநாடு!

ஏற்றுக்கொள்ளப்பட்ட கடற்றொழில் பிரச்சினைகளின் தீர்வை முன்னோக்கிய கடற்றொழில் மாநாடு வடமாகாண கடற்றொழிலாளர் இணையம், தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாநாடானது நேற்று(31.10.2025) முல்லைத்தீவு நகரில் நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு கடற்கரை வளாகத்திலிருந்து சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறல் செயற்பாடுகள் உள்ளிட்ட மீனவ மக்களுக்கு பாதகமான விடயங்களை கட்டுப்படுத்தி பாரம்பரிய கடற்றொழிலாளர்களைப் பாதுகாப்பதுடன், கடல்வளத்தினையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று வடமாகாண மீனவமக்களால் முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து “ஏற்றுக்கொள்ளப்பட்ட […]