கோயில் நெரிசலில் சிக்கி 9 பக்தர்கள் பலி

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள காசிபுக்காவில் தனியார் நிர்வகித்து வரும் வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில் கூட்டநெரிசலில் சிக்கி 9 பக்தர்கள் பலியாகினர். ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோயிலில் இன்று ஏகாதசி மற்றும் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த தடுப்பு கம்பி விழுந்ததில் ஒருவர் மீது ஒருவர் கீழே விழுந்தனர். இதில் மூச்சுத்திணறி 9 பக்தர்கள் இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர். […]

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து போபண்ணா ஓய்வு

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் போபண்ணா அறிவித்துள்ளார். இந்திய டென்னிஸ் வீரர்களில் மிகவும் அனுபவம் மிக்கவர் ரோகன் போபண்ணா. இவர் கலப்பு இரட்டையர் பிரிவில் தலைசிறந்து விளங்கினார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வரும் இவர், தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; குட் பை, ஆனால், இது முடிவல்ல. கனத்த இதயத்துடனும், நன்றியுடனும் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். உங்களின் வாழ்க்கையை ஒரு […]

மெல்போர்ன் ‘டி-20’ போட்டிஎளிதாக வென்றது ஆஸ்திரேலியா

மெல்போர்ன் ‘டி-20’ போட்டியில் இந்திய பேட்டர்கள் கைவிட, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. அபிஷேக் 68 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இரண்டாவது போட்டி நேற்று மெல்போர்னில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்சல் மார்ஷ், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு சுப்மன் கில், அபிஷேக் […]

துப்பாக்கி வாங்கிய தொழிலதிபர் கைது

கெஹல்பத்தர பத்மேயிடமிருந்து கைத்துப்பாக்கியை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் மினுவாங்கொடையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடையில் உள்ள குறித்த தொழிலதிபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது துப்பாக்கியுடன் 13 தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஹீனட்டியன மகேஷ் என்பவர் குறித்த தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் குறித்த தொழிலதிபர், கெஹல்பத்தர பத்மேவுக்கு அறிவித்துள்ளார். அதன் பின்னர் பத்மே குறித்த தொழிலதிபருக்கு துப்பாக்கியை வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். அதற்காக தொழிலதிபர், கெஹல்பத்தர பத்மேவுக்கு […]

ஒன்றாரியோவில் கோ தொடரிச் சேவை அதிகரிப்பு

ஒன்றாரியோவில் லேக்சோர் கிழக்கு தொடரி வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமான நேரங்களில் ஆறு புதிய தொடரிகளை இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இது, ஸ்காபரோ வாழ் மக்களுக்கு நாளாந்தாம் விரைவானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சேவையை வழங்கும். அதிகூடிய போக்குவரத்து நெரிசல் நேரங்களில் இப்போதுள்ள 15 நிமிடங்களுக்கு ஒருமுறையான சேவை, 10 நிமிடங்களுக்கு ஒரு தொடரி என அதிகரித்து இயக்கப்படும். இதனால், வேலை மற்றும் பாடசாலைகளிலிருந்து வீடு திரும்புவோர் விரைவாக வீட்டிற்குச் செல்ல முடியும். அதிகூடிய போக்குவரத்து நெரிசலுள்ள நேரங்களாக […]

யாழில் செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டிப் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று (01.11.2025) யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை தடை செய், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இப்போதாவது நீதி வழங்கு போன்ற வாசகங்களை மும்மொழியிலும் கொண்ட பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். குறித்த போராட்டத்தில் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

களனி ஆற்றில் விழுந்த பெண் உயிரிழப்பு

கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில் விழுந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றின் அருகே தனது காதலன் மற்றும் மூன்று பேருடன் முச்சக்கர வண்டியை கழுவச் சென்ற பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தண்ணீர் எடுக்க சென்ற காதலனும் காதலியும் திடீரென ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். காதலி நீரில் மூழ்கியபோது காதலன் அங்கு மீட்கப்பட்டார். இன்று மதியம் நீரில் மூழ்கிய பெண்ணின் உடலை மீட்பு குழுக்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பொகவந்தலாவை பகுதியை சேர்ந்தவர் […]

விளம்பர சர்ச்சை: அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர்

அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் குறித்த விளம்பரத்துக்காக அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்தது. ஒன்டாரியோ மாகாணம், அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால் கனடாவுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில் அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன், 1987 ம் ஆண்டு ஆற்றிய உரைகளில் சில குறிப்புகள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. அமெரிக்காவுக்கு அரிய […]

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு கிளம்பும் முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பில் உள்ள நிதாஹஸ் மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்காக தனது பொருட்களை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி உரிமைகள் நீக்கச் சட்டத்தின்படி, முன்னாள் ஜனாதிபதிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற நவம்பர் 30ஆம் திகதி […]

டெங்கு பரவும் அபாயம்

டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய ஆதன உரிமையாளர்கள் 14 பேருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று ஒரு இலட்சத்து 06 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் பருத்தித்துறை நகர சபை ஆகிய பகுதிக்கு உட்பட்ட மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது , டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 14 ஆதன உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் […]