மட்டக்களப்பில் ஆசிரியர்கள் போராட்டம்

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் சனிக்கிழமை (01) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் சமத்துவமான ஓய்வூதியம் வேண்டும், ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் 28 வருடங்கள் கடந்துள்ளன, ஓய்வூதிய முரண்பாட்டை தீர்க்க அரசிடம் தீர்க்க அரசிடம் நீதி கோருவோம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்றையதினம் பிரதமர் ஹரிணி அமரசூரிய மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 28 ஆண்டுகளாக அமைதியாகக் காத்திருக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் […]
அநுராதபுரம் – குருணாகல் வீதியில் விபத்து ; ஒருவர் பலி!

அநுராதபுரம் – குருணாகல் வீதியில் அலுத்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் கடுகாயமடைந்த பாதசாரதி கிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார். காரின் சாரதி […]
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை (31) நாட்டை விட்டுப் புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் இந்தக் கப்பலுக்கு பாரம்பரிய கடற்படை முறைப்படி பிரியாவிடை வழங்கப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, AKEBONO இன் கட்டளை அதிகாரி கமாண்டர் ARAI Katsutomo மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார ஆகியோருக்கு இடையே கப்பலில் ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றதுடன் AKEBONO […]
மிகப்பெரிய புகைப்பட உபகரண வர்த்தக கண்காட்சி

நாட்டின் மாபெரும் புகைப்பட உபகரண வர்த்தக கண்காட்சியான Sony Alpha Festival 2025 இல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ வெள்ளிக்கிழமை (31) பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். வெள்ளிக்கிழமை (31) தொடங்கிய இந்த கண்காட்சி சனிக்கிழமை (01) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (02) திகதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற உள்ளது. camera.lk இனால் ஏற்பாடு செய்துள்ள […]
யாழிற்கு அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் விஜயம்

இலங்கை தமிழரசு கட்சியின் அழைப்பின் பேரில் தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். அண்மையில்14 அரசியல் கட்சிகளைபிரதிநிதித்துவப்படுத்தும் 24 பேர் கொண்ட இளம் அரசியல் தலைவர்கள் குழு இந்தியாவிற்கு விஜயம் செய்ததன் தொடர்ச்சியாக வடக்கு மாகாண விஜயம் அமைந்துள்ளது. இந்த விஜயத்தின் போது வடக்கு மாகண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கள விஜயங்கள் மேற்கொண்டு இளம் அரசியல் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தப்படஉள்ளது.
விசாளர்கள் இருவர் பதவி நீக்கம்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் பைரூஸ் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த விடயம் இன்று (01.11.2025) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆதம்பாவா அஸ்பர் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவியை இழந்துள்ளார். மேலும், ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் பதவியை பைரூஸ் இழந்துள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர்களின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாருடன் வாக்குவாதம்; பெண் கைது!

கம்பஹாவில் உடுகம்பொல சந்தைக்கு அருகில் பெண் ஒருவர், போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்று சமூக ஊடங்களில் பரவி வரும் காணொளி குறித்து பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிய கார் ஒன்றை பொலிஸார் சோதனைக்குட்படுத்த முயன்றுள்ளனர். இதன்போது காரில் இருந்த பெண் ஒருவர் பொலிஸ் உத்தரவைம் மீறி காரை செலுத்திச் சென்றுள்ள நிலையில் மினுவாங்கொடை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த பெண் […]
குருந்தூர் மலையில் தொல்பொருள் திணைகளம் மோசடி ?

பௌத்த விஹாராதிபதியின் விசேட அழைப்பின் பெயரில் இன்று சனிக்கிழமை (01) நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் விஹாராதிபதியை சந்தித்து குருந்தூர் மலை பற்றிய முக்கிய விடயங்களை கலந்துரையாடினார். இராசமாணிக்கம் சாணக்கியன் மேலும் தெரிவிக்கையில், சனிக்கிழமை (01) மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி போகும் வழியில் முக்கியமாக மிஹிந்தலை என்னும் பிரதேசத்திலே இருக்கும் பௌத்த விஹாராதிபதி விசேட அழைப்பின் பெயரில் சந்தித்தேன். அதற்கான காரணம், குருந்தூர் மலையிலே நடந்த ஒரு மிக முக்கியமான ஒரு விடயத்தைப் பற்றி தெரிவிப்பதற்கு ஆகும். […]
போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 1076 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை 9031) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1076 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1072 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 407 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 354 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 43 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 268 பேரும், போதை மாத்திரைகளுடன் […]
விசாரிக்க அனுமதி

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த பெண் சட்டத்தரணி துப்பாக்கியை மறைத்து கொண்டு வருவதற்கு சட்டப்புத்தகத்தை இஷாரா செவ்வந்திக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.