வடக்கின் அரசியல், பொருளாதார இயங்குகை பற்றித் தெளிவூட்ட தெற்கு அரசியல்வாதிகள் குழு வடக்கு விஜயம்

வடக்கின் அரசியல் மற்றும் பொருளாதார இயங்குகையை தென்னிலங்கை அரசியல்வாதிகள் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பேற்படுத்தும் வகையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க கோலிஷன் ஃபோர் இன்க்லூஸிவ் இம்பக்ட் எனும் அரச சார்பற்ற அமைப்பின் ஏற்பாட்டில் சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 16 இளம் அரசியல் தலைவர்கள் இன்றைய தினம் வடக்குக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். இவ்விஜயத்தின் ஓரங்கமாக காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானநிலையம் உள்ளடங்கலாக வடக்கில் உள்ள முக்கிய இடங்களுக்கு களவிஜயங்க்ளை மேற்கொள்ளவுள்ள அரசியல் தலைவர்கள், இனநல்லிணக்கம், துறைமுக அபிவிருத்தி என்பன […]

மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் வெளியே சென்று சேவையாற்ற முடியாத நிலையில் உள்ளோம்

நாட்டில் இன்று மக்கள் பிரதிநிதிகள் வெளியே சென்று சேவையாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நாடு பாதாள உலகக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் விடுத்து, அரசாளுகையில் சர்வாதிகார போக்கை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கொழும்பு – மட்டக்குளி பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், தற்போதுள்ள முறைமையில் […]

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம்…

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் இதுவரை வழங்காத வங்கிக் கணக்கு விபரங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸாருக்கு வழங்குமாறு கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத்துறை பொலிஸார் கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் இன்று நகர்வு மனுவொன்றைச் சமர்ப்பித்து முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த உத்தரவை கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதவான் அசங்க போதரகம பிறப்பித்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் மேலதிக […]

ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் வழிபட்ட பிரித்தானிய மன்னர் மற்றும் ராணி

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், மனைவி ராணி கமிலாவுடன் லண்டனில் உள்ள புகழ்பெற்ற, ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் 30ம் ஆண்டு விழாவில் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்துள்ளார். ஐரோப்பாவின் முதல் பாரம்பரிய ஹிந்து கோவிலான ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் 1995ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பிரித்தானியாவின் நீஸ்டனில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மிக மற்றும் கலாசார அடையாளமாக திகழ்கிறது. கோவிலின் 30ம் ஆண்டு விழாவையொட்டி பிரித்தானியா மன்னர் மூன்றாம் சார்லஸ், ராணி கமிலா வருகை […]

2029 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவே வேட்பாளர் – லக்ஷ்மன் யாப்பா

எதிர்வரும் 2029 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்சவே வேட்பாளராக களமிறங்குவார் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் எமது கட்சியில் அவரே சிறந்த வேட்பாளராக உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. சவாலை ஏற்கக்கூடிய […]

வாழைச்சேனை பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்

வாழைச்சேனை-கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக்கு குழு கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டம் நேற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. அதில் முக்கியமாக. பாசிக்குடா பகுதியில் இராணுவத்தினால் எந்தவித அனுமதியும் இன்றி இயங்கி வரும் வியாபார நிலையத்தினால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றமையை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய அனுமதி இன்றி இயங்கும் வியாபார நிலையத்தை அப்பகுதி மக்களுக்கு வழங்கும்படி தீர்மானம் எடுக்கப்பட்டது. கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான […]

பனம் பழத்தில் இருந்து வைன்!

யாழ். பனம் பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் தொடர்பாக கண்டுபிடிப்பாளர் விக்டர் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றபோதே இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, இதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். தாராளமாக மூலப்பொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளமை மற்றும் உற்பத்திச் செலவு மிகக்குறைவாக உள்ளமை ஆகியன […]

அமெரிக்காவில் அணு ஆயுத சோதனை? உலக அரங்கில் பதற்றம்

அமெரிக்காவில் அணு ஆயுத சோதனையை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அணு சக்தியில் இயங்கும் ஏவுகணை சோதனையை ரஷ்யா சமீபத்தில் மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அணுசக்தியால் நீருக்கடியில் இயங்கும் ட்ரோன் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா, சீனா போன்ற பிற நாடுகள் தங்கள் அணு ஆயுதங்களை சோதித்து வருவதால், தங்கள் அணு ஆயுதங்களை சோதிக்க ஆரம்பிக்குமாறு இராணுவத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் […]

தோட்டத் தொழிலாளர்களை அவமானப்படுத்தியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தோட்டத் தொழிலாளர்களை அவமானப்படுத்தியதற்கு எதிராக பல சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் இணைந்து நேற்று வியாழக்கிழமை (30) ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இதன்போது சில அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் சொந்த நலனுக்காக தோட்டத் துறை மக்களை அவமானப்படுத்தும் வகையில் வெளியிட்ட அறிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையாகக் கண்டித்தனர். இலங்கையின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து பங்களிப்பதாகவும், கோவிட் தொற்று நோய்களின் போதும் நாட்டுக்காக டாலர்களை சம்பாதிக்க கடுமையாக உழைத்துள்ளதாகவும் […]

போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் கைது!

மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் 5 அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக சென்றிருந்த போதே இந்த ஐந்து அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.