விருந்துபசாரத்திற்குள் துப்பாக்கிப் பிரயோகம் ; ஒருவர் பலி

பாணந்துறை, ஹிரான பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் நடைபெற்ற விருந்துபசாரத்திற்குள் நுழைந்த ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் T56 துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் அதிகாலையில் ஹிரான பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார். பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் இது குறித்து […]

கணேமுல்ல சஞ்சீவ கொலை; சட்டத்தரணிக்கும் பத்மேவுக்கும் இடையில் தொடர்பு?

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி, இதற்கு முன்னர் கெஹெல்பத்தர பத்மே தொடர்பான வழக்குகளிலும் ஆஜராகி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கெஹெல்பத்தர பத்மே இந்தச் சந்தேகநபரான சட்டத்தரணிக்கு லட்சக்கணக்கான பணத்தை கொடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதனடிப்படையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த சட்டத்தரணியின் வங்கி கணக்குகள் மற்றும் அவரது தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. […]

அரச வைத்திய அதிகாரிகள் சங்க போராட்டம் இடைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (30) இரவு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ (தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு), சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இடையே நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது எற்பட்ட இணக்கங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசுக்கு எதிரான பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காவிட்டால் பெரும் பின்னடைவை சந்திப்பார்கள்!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள அரசுக்கு எதிரான பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காவிட்டால் அது அந்தக் கட்சிக்கே அரசியல் ரீதியில் பெரும் பின்னடைவாக அமையும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் கூட்டம் மற்றும் எதிர்ப்புப் பேரணியை நடத்துவதற்கு முக்கியமான சில எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. […]

போக்குவரத்து சேவைகள் ஒழுங்கமைப்பு நாளை முதல் ஆரம்பம்

முச்சக்கர வாகனங்கள், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் பிற வாடகை வாகன நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையகம் அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா இந்த நடவடிக்கையை அறிவித்தார். இந்த திட்டத்தின் முதல் கட்டம், போக்குவரத்து சேவைகள் தொடர்பான தரவு சேகரிப்பை உள்ளடக்கும் என்றும், இந்த திட்டம் நவம்பர் 1 ஆம் திகதி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில், முச்சக்கர வண்டிகள், பாடசாலை மற்றும் […]

அமெரிக்காவில் உலகின் முதல் AI போர் விமானம்

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம் உருவாக்கியுள்ளது. X-BAT எனப்படும் இந்த ஃபைட்டர் ஜெட், விமானி இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது. இந்த விமானத்தை இயக்க ஓடு பாதை கூட தேவையில்லை, நிலத்திலிருந்து நேரடியாக புறப்படும் என கூறப்படுகிறது. இந்த நவீன போர் விமானம், F-16 வகை இயந்திரத்தைப் பயன்படுத்தி 2,000 கடல் மைல்கள் (சுமார் 3,704 கிலோமீட்டர்கள்) தூரம் வரை, […]

இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது!

மகளிருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தி இந்தியாஅணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்தியாவில் நடந்து வரும் 13ஆவது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2ஆவது அரைஇறுதியில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 49.5 ஓவரில் 338 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய தரப்பில் ஸ்ரீ சரணி, தீப்தி சர்மா ஆகியோர் […]

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு; பொலிஸ் மா அதிபரை சந்திக்க வேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாட, பொலிஸ் மா அதிபரிடம் (IGP) இருந்து விரைவில் சந்திப்பு நேரம் கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தமது பாதுகாப்பு குறித்து கலந்துரையாட பொலிஸ் மா அதிபரைச் சந்திக்கும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதற்கமைய, பொலிஸ் மா அதிபரை நாடாளுமன்றத்திற்கு அழைக்கக் கோரி கடந்த 27ஆம் திகதி சபாநாயகரிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் […]

செட்டியார் தெருவில் கொள்ளை: 5 மதுவரி அதிகாரிகள் கைது

கொழும்பில் செட்டியார் தெருவில் உள்ள இரண்டு தங்க நகைக் கடைகளில் இருந்து 102 மில்லியன் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில், மது திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் (Narcotics Control Unit) சேர்ந்த ஐந்து அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பரிசோதகர் ஒருவரும் (Inspector) நான்கு கோர்ப்பரல்களும் (Corporals) அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். முன்னதாக, கடந்த ஜூன் மாதம்,சந்தேக நபர்கள் கொழும்பு செட்டியார் தெருவில் (Sea Street) உள்ள குறித்த […]

உரும்பிராயில் பப்ஜி விளையாடியவரை மீட்டர் வட்டி

யாழில் பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் பதிவாகியுள்ளது. உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கைபேசியில் விளையாடப்படும் பப்ஜி எனப்படும் கேமிற்கு அடிமையாகியுள்ளார். இவர் மீட்டர் வட்டிக்கு பணத்தினை பெற்று குறித்த கேமிற்கான கட்டணத்தை செலுத்தி விளையாடிக் கொண்டிருந்தார். மீட்டர் வட்டிக்கு கடனாக பெற்ற பணமானது வட்டியும் முதலுமாக ஒரு கோடியை தாண்டிய […]